முகநூல் விருப்பம்

முகப்பு

குரு பெயர்ச்சி பலன்கள்- 2018 - 2019

பதிவு நாள் September 08, 2018

Block
 
விருச்சிகம் ராசி
 குருபகவான் ஜென்மத்தில் வரும் காலம்...
 பூர்வ புண்ணிய பலனாக புண்ணிய நதிகளில் நீராடக்கூடிய வாய்ப்புகளும், 

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
குலதெய்வ வழிபாடு சிறக்கும். குழந்தைகளை பற்றிய நல்ல செய்திகள் உங்கள் காதுக்கு வந்து சேரும்.
 மகான்களை தரிசிக்கும் பாக்கியம் கிட்டும்.
 ஸேத்ராடனம் செய்வீர்கள்.
அரசியல் வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். புதிய பொறுப்புகள் ,பெரிய பதவிகள் தானாக பூர்வ புண்ணிய பலனால் வீடுதேடிவரும். 

 கல்யாணம் ஆகாத ஆண்,பெண் இருபாலர்களுக்கும் திருமணம் நடந்து  விடும். கணவன் மனைவி உறவுகள் திருப்தி கரமாக இருக்கும். அன்னியோன்யம் கூடும்.தாம்பத்யம் சிறக்கும்.
 
சுய தொழிலில் கூட்டுதொழில் செய்து கொண்டு இருப்பவர்கள் நல்ல லாபத்தை அடைவார்கள். திருமண வழக்குகள் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக முடியும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். 

 தந்தை, மகன் உறவு நன்றாக இருக்கும். 
 
கோவில் கும்பாபிஷேகங்களை உங்கள் தலைமையில் நடத்துவீர்கள். 

கடன் தொல்லைகள் தீரும். பண தட்டுப்பாடு நீங்கும்.
வரும் குருப்பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை
 
பரிகாரமாக பழனி மலை முருகனை தரிசித்து வருவது மிகவும் நல்லது.
 
 தனுசு ராசி

 தனுசு ராசிக்கு குருபகவான்  பன்னிரண்டாம் பாவத்தில் சஞ்சரிக்க போகின்றார்.
அது குருபகவானுக்கு உகந்த இடம் இல்லை.
சனியும் ஜென்ம சனியாக ராசியிலே சஞ்சாரம் செய்து கொண்டு உள்ளார். ராகு கேதுக்களும் முறையே 2,8 ல் சஞ்சாரம் செய்து கொண்டிருப்பதால் பெரும்பாலான ஆண்டு கிரகங்களின் சஞ்சாரம் நல்லபடியாக இல்லை. கோட்சாரம் சிறப்பாக இல்லை. 


 பன்னிரண்டாம் பாவத்தில் குருவரும்போது கண்டங்கள், தோல்விகள் ஏற்படும்.  மனவருத்தம் தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். சிலருக்கு உடல்நிலை பாதிக்கும்.சிலருக்கு தாயாரின் உடல்நிலையை பாதிக்கும்.

 தனகாரகன் பன்னிரண்டாம் பாவத்தில் மறைவது பண வரவில் தடைகளை ஏற்படுத்தும். விரையங்களை அதிகளவில் ஏற்படும். பணம் வரும்.ஆனா வராது. பணம் வருவதற்கு முன்பே   செலவு தயாராக  இருக்கும். பற்றாக்குறையை ஏற்படுத்தி கடனை ஏற்படுத்தும். 

 
புதியதாய் தொழில் தொடங்க கூடாது. லாபம் ரொம்ப குறைவாக இருக்கும். பேராசை படக்கூடாது.பணம் கொடுக்கல் வாங்கல்களில் அதிக கவனம் தேவை. வருமான வரி கட்ட வேண்டியவர்கள் சரியாக வருமான வரி கட்டி விடுங்கள். முறையற்ற வழிகளில் பணம் சம்பாதித்தால் இன்கம்டாக்ஸ் ரெய்டு வரும்.கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருங்கள்.
 

அரசு ஊழியர்கள் கைசுத்தமாக நேர்மையாக இருக்க வேண்டும். டிஸ்மிஸ் ,இடமாற்றம், மெமோ சிறை போன்ற தொல்லைகளுக்கு ஆளாகலாம். 


பிரயாணச்செலவுகள்,துயரம், கூட்டு வியாபாரங்களில் நஷ்டம் பிறரால் ஏமாற்றப்படுதல்,சொத்து நஷ்டம், அனாவசிய செலவுகள், சொத்து நஷ்டம், திருட்டு போகுதல் ,போன்ற பலன்கள் நடக்க இருப்பதால் பெண்கள்அதிக நகை போட்டுக்கொண்டு வெளியே செல்ல கூடாது. 


அரசியல் வாதிகளுக்கு இது போறாத காலம். மக்களிடையே செல்வாக்கு குறையும். வெற்றிக்கு மிக அருகில் வந்து கோட்டை விடுவார்கள். கெட்ட பெயர்கள் ஏற்படும். 


மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. கவனங்கள் வேறு இனங்களில் ஸ்போர்ட்ஸ், நண்பர்கள், செல்ஃபோன்,காதலி என்று வேறுபக்கம் கவனங்கள் திரும்பி அரியர்ஸ் வைக்க வேண்டியது வரலாம். 


விவசாயிகளுக்கு லாபம் மிகமிக குறையும். பயிர்களில் பூச்சி தாக்குதல் கள் அதிகளவில் ஏற்பட்டு செலவுகள் அதிகரித்து வரவுகள் குறையும்.
கொஞ்சம் ஏமாந்தாலும்கூட அதல பாதாளத்தில் தள்ளும். பெரிய பள்ளம் விழுகும். 


 எனவே இந்த காலங்களில் பேராசைப்படாமல் நேர்மையாக இருந்தாலே போதும் . பாதிப்புகள் ஏற்படாமல் தப்பிக்கலாம். அதிகமாக சம்பாதிக்காட்டிலும் பரவாயில்லை. இருப்பதையாவது காப்பாற்றி கொள்ளுங்கள்.


 
பரிகாரமாக தென்குடி திட்டை குருபகவானை வழிபட தாக்கு பிடிக்கும் சக்தி கிடைக்கும்.
 
மகர ராசி
இந்த  குருப்பெயர்ச்சி மகர ராசிக்கு  குருபகவான் தன்னுடைய பகை வீட்டில் இருந்து தன்னுடைய நண்பரான செவ்வாயின் வீட்டுக்கு , அதாவது  பதினொன்றாம் பாவத்திற்கு குரு வர இருக்கிறார். பதினொன்றாம் பாவகம் குருபகவானுக்கு மிக உகந்த இடமாகும்.

தனகாரகன் இன்னொரு பணபர ஸ்தானமான பதினொன்றாம் பாவத்தில் இருப்பது தன மேன்மைகளை தரும் நல்ல அமைப்பாகும்.
 
குருபகவான் பதினொன்றாம் பாவத்தில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் தன்வீட்டை தானே பார்த்து அந்த வீட்டை வலுப்படுத்துவார். அதாவது தைரியத்தோடு காரிய வெற்றிகளை தருவார். 
அடுத்து அவர் தன்ஏழாம் பார்வையால் ஐந்தாமிடத்தை பார்த்து குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு புத்திர பாக்கியத்தை அருளுவார்.
 மற்ற ஐந்தாமிடத்து காரகத்துவங்களான புண்ணிய நதி நீராடுவது, குலதெய்வ வழிபாடு, போன்ற நல்ல பலன்களை குருபகவான் தருவார்.குரு அதிநட்பு பெற்று ஐந்தாமிடத்தை பார்ப்பது மிகச்சிறப்பாகும்.


 
 குருபகவான் ஒருசேர ஐந்தாம் வீட்டையும் ,ஏழாம் வீட்டையும் பார்ப்பதால் ஒருசிலருக்கு இந்த வருடத்திலே திருமணம் நடந்து இந்த வருடத்திலேயே  அழகான ஆண்குழந்தை கிடைத்துவிடும்.
 
 கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் நன்றாக இருக்கும். தாம்பத்ய சுகம் கூடும்.கூட்டு தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு லாபமுண்டு. தொழில் பார்ட்னராலும், லைஃ ப் பார்ட்னராலும் நன்மையுண்டு.
பலருக்கு வெளிநாடு,வெளி மாநிலம் வெளியூர் போய் வேலை பார்க்க வேண்டிவரும்.


 
மகர ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி  மிகவும் நல்ல பலன்களை லாபத்தோடு வாரி வழங்கும்.
குருப்பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதம்.
 
உங்கள் ராசிநாதன் குருவின் வீட்டில் இருந்து தன்னுடைய வீடான இரண்டை சுபத்தன்மை பெற்று பார்ப்பதாலும்,குருபகவான் பதினொன்றாம் பாவத்திற்கு வர இருப்பதாலும் ,ராகு கேதுக்கள் 6,12 ல் மறைந்து நல்ல பலன்களை கொடுக்க இருப்பதாலும் உங்களுக்கு இனிமேல் வரக்கூடிய காலம் நல்ல காலம் தான்.

பரிகாரமாக குருவாயூர் கோயில் சென்று வரவும்.
 
கும்பம் ராசி


 
கும்பம் ராசிக்கு குரு  பத்தாமிடத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
 
 பத்தாமிடம் குருவுக்கு உகந்த இடம் இல்லை.
 
 அதாவது குரு பத்தில வரும் போது பதவி போகும். பதவிக்கு இடைஞ்சல் என்று சொல்வார்கள்.
 
 பத்தாமிடத்தில் உள்ள குருபகவானால் இடமாற்றம் ஏற்பட்டாலும் அது நல்ல இடமாற்றமாக,உங்களுக்கு பிடித்த ஊருக்கு ,பிடித்த வேலையாக இருக்கும்
 பணவசதி வசதி ஏற்படும்.பணவரவில் இருந்து வந்த தடைகள் எல்லாம் நீங்கும். 


திருமணமாகாத ஆண்,பெண் இருபாலர்களுக்கும் திருமணம் நடைபெறும். கணவன் மனைவி உறவு நன்றாகவே இருக்கும்.


குருபகவானின் நான்காம் பார்வைபலனால் தாயார், மனை,மாடு,கொடுக்கல் வாங்கல் போக்குவரத்து, செய்தொழில் வலுப்பெறும். சிலர் நீண்ட நாட்களாக எண்ணியிருந்த சொந்தவீடு என்ற அமைப்பு கிடைத்து விடும்.பதினொன்றாம் இடத்து சனியால் ஆறுமிடத்தை குருபார்ப்பதால் ஏற்படக்கூடிய கடனை வெல்ல முடியும்.வேலை செய்யும் இடங்களில் இருந்து வந்த மறைமுகமான பகையை வெல்ல முடியும். நோய் வந்து நீங்கும்.
 
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவ மாணவியர்கள் நன்கு படித்து நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள்.குரு நான்கை பார்ப்பதால் சுகம் கூடும். வாகன சுகம் கிடைக்கும்.ஆடம்பர பொருட்கள் வாங்குவார்கள்.
 
ஞானத்தை பற்றிய தேடுதல் தொடங்கும்.
 
 ஆன்மீக எண்ணங்கள் அதிகமாகும்.


 
 கும்ப ராசியில் உள்ள ஆன்மீகவாதிகள் திடீர் புகழைஅடைந்து ஆன்மீகத்தில் உச்ச நிலையை எட்டுவார்கள். 

அரசியல்வாதிகளுக்கு மிக மிக நல்ல காலம் இதுவாகும். அரசியல் வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் ,பதவிகள் கிடைக்கும்.தேர்தல்களில் வெற்றி கிடைக்கும்.
 
விவசாயிகள் நல்ல மகசூலை அடைந்து லாபத்தை அடைவார்கள். 

பத்தாமிடத்து குருவால் நீங்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள்.பணியில் கவனமுடன் செயல்படுங்கள்.பத்தாமிடத்து குருவால் வேலை செய்யும் இடத்தில் கெட்ட பெயர்கள் ஏற்படும். கவனமாக இருக்க வேண்டும்.
பரிகாரமாக ஆலங்குடி தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.
 
மீனம் ராசி
மீன ராசிக்கு  குருபகவான் ஒன்பதாம் இடத்துக்கு வரப்போகின்றார்.
இது மிகவும் அற்புதமான ஒரு அமைப்பாகும்.
 ஒன்பதாம் இடம் குருபகவானுக்கு மிகவும் உகந்த இடமாகும்.
செலவுகள் குறைந்து உபரி பணம் மிச்சமாகும். வங்கியில்  பணம் சேமிக்கற அளவுக்கு பணம் வரும். வாகனங்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். அடுத்தவர்களுக்கு தானம் தர்மம் செய்யும் அளவுக்கு பணம் வரும்.....பேரும் ,புகழோடும் வாழ்வார்கள் மீன ராசிக்காரர்கள்.
குருபகவான்தான் உங்கள் ராசியாதிபதி.

அவர் ஒன்பதாம் இடத்தில் இருந்து உங்கள் ராசியை பார்ப்பார்.ராசியாதிபதி உங்கள் ராசியை பார்த்து உங்களை வலுப்படுத்துவார். உங்கள் தோற்றபொலிவு கூடும்.
நீங்கள் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உங்கள் சமுதாய அந்தஸ்து உயரும்.உங்கள் மதிப்பு மரியாதை கூடும்.
 நோய் தொல்லைகளிலிருந்து குருவின் பார்வையால் அவர்களுக்கு விடுதலை கிடைக்கும். ஆச்சரியப்படும் அளவுக்கு உங்கள் உடல்நிலை முன்னேற்றம் தரும்.
குருபகவான் மூன்றாம் இடத்தை பார்ப்பதால் இளைய சகோதர ஆதரவு காரிய வெற்றிகளை தருவார். குருவால் பல சகாயங்கள் இருக்கும்.
புண்ணிய நதிகளில் நதிகளில் நீராட க்கூடிய வாய்ப்புகள் தானாக அமையும். ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். நல்ல குரு அமையப்பெற்று வித்தைகளில் பாண்டித்தியம் பெறுவீர்கள்.
குலதெய்வ வழிபாடு மிகச்சிறப்பாக அமையும்.
தெய்வ பக்தி மேலோங்கும். தெய்வ அனுகூலம், தெய்வ பாதுகாப்பு உங்களுக்கு உண்டு. குருபலம் வந்து விட்டதால் திருமணம் ஆகாத ஆண்,பெண் இருபாலர்களுக்கும் திருமணம் இனிதே நடந்து விடும்.
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினருக்கு குருவின் அருளால் குழந்தை பாக்கியம் கிட்டும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
 அரசாங்க உதவி கிடைக்கும். வங்கியில் கடன் உதவி கிடைக்கும்.
பெரிய மனிதர்கள் ஆதரவு ,உதவி கிடைக்கும்.
பெண்களின் சொத்துக்களும்,பெண்களின் ஆதரவும் உதவிகளும் கிடைக்கும்
இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு ஒரு திருப்புமுனை காலமாக இருக்கும்.
பலன்கள் மேலும் கூட வியாழன் அன்று குரு பகவானை வழிபட்டு வரவும்.
 

நேரம் : 04:33 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்