
- முகப்பு /
- 2017
முகநூல் விருப்பம்
முகப்பு
சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017 TO 2020 - ஒரு முன்னோட்டம்.
பதிவு நாள் November 14, 2017
வரும் 19-12-2017 அன்று நிகழும் சனிப்பெயர்ச்சியால் முழு நன்மை அடையப் போகும் ராசிகளாக கடகம், துலாம், கும்பம். திகழ்கிறது.
பிறப்பு ஜாதகத்தில் சந்திரனுக்கு 1,2,12 ஏதேனும் ஒரு இடத்தில் செவ்வாய் அல்லது கேது இருந்தால், அந்த ஏழரை சனியின் காலம் படுபயங்கரமாய் இருப்பதை உணர முடிகிறது.
எனவே விருச்சிகம், தனுசு, மகரம், ராசி அன்பர்கள் ஜனன கால ஜாதகத்தின் அடிப்படையில் நன்மைகள் தீமைகள் கூடவோ குறையவோ செய்யலாம்.
ரிஷப ராசிக்காரர்கள் அஷ்டமத்து சனியின் பிடிக்குள் வருவதால் மிகவும் கவனம் தேவை.....சுதாரித்துக் கொள்க.....
கோட்சார ரீதியாக சனி தனுசு ராசியில் உலா வரும் காலம் அழகு நிலையங்கள் என்ற பெயரில் நடக்கும் அந்தரங்க விஷயங்கள் வெளிச்சத்துக்கு வரும்.
கலை துறையில் உள்ளவர்களுக்கு பல விதமான பிரச்சினைகள், சங்கடங்கள் உண்டாகும்.
அரசியலில் பல திருப்பங்கள் மாற்றங்கள் ஏற்படும் .
தர்ம ஸ்தாபனங்களுக்கு நெருக்கடியான நிலையை தரும்.
பிரச்சினைகள் உண்டாகும்.
கணக்கியல் துறை அதிகமாக பேசப்படும்.
தங்கம், வெள்ளி விலை உயரும்.
இளைஞர்கள் தலைமை பொறுப்பிற்கு முன்னேறுவார்கள்.
உலகத்தில் அதிகார போட்டி உருவாகி சண்டைகள் ஏற்படும்.
புதிய தலைமை உண்டாகி புதிய அதிகார அமைப்பு ஏற்படும்.
தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் பதவி இழப்பார்கள்.
நாட்டில் தலைநகரங்களில் தொழில் முடக்கமும் பொருட்சேதமும் அதிகமாகும்.
அரசு நிர்வாகம் பாதிப்படையும்.
ஆன்மீகம் சீர்கெடும்.
ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு அவமரியாதையும் இன்னலும் ஏற்படும்.
கோயில்களில் புனிதத்துவம் கெடும்.
கோயில்களில் பூஜை சரிவர நடைபெறாது.
நெடுங்காலமாக பின்பற்றி வரும் சாஸ்திர சம்பிரதாயங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்படும்.
மேல் நிலையில் உள்ளோர் கீழ்நிலைக்கும், கீழ்நிலையில் உள்ளோர் மேல் நிலைக்கும் உயர்வர்.
நேர்மை உண்மை தன்மைக்கு மதிப்பிற்காது.
போலிகள் போற்றப்படுவார்கள்.
தகுதியை மீறி சிலரின் முன்னேற்றம் வெகுவாக இருக்கும்.
தந்தை மகன் உறவு பாதிக்கும்.
கருத்து வேறுபாடும் மோதல்களும் உண்டாகும்.
பெரியோரை சிறிவர்கள் அவமரியாதை செய்வர்.
சிலர் சொந்த ஊரை விட்டு தூரத்தில் வசிப்பர்.
கால புருஷ தத்துவப்படி தனுசு ஒன்பதாம் இடம் என்பதை நினைவில் கொள்க......
மொத்தத்தில் சனிப்பெயர்ச்சி பழையன கழிதலும் புதியன புகுதலும் என புரிந்து கொள்ளுதல் சரியாக இருக்கும்...
பொது பரிகாரமாக அனைவரது சங்கடங்களைத் தீர்த்து, சந்தோஷம் தரும் சனி பகவானுக்குரிய திருத்தலங்களில் குறிப்பிடத் தக்கது நாச்சியார்கோவில் எனும் திருநறையூர். கும்பகோணத்திலிருந்து மிகவும் அருகில் உள்ளது.
இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீபர்வதவர்த்தனி உடனுறை ராமநாத ஸ்வாமி திருக்கோயில் இராமேஸ்வரம், ஸ்ரீராமநாத ஸ்வாமி ஆலயத்துக்கு இணையானது.
ராவணனிடம் போரிட இலங்கை செல்லும் முன் ராமன் வணங்கிச் சென்ற கோயில் இது என்றும் தன் தந்தை தசரதர் வழிபட்ட இங்கு, போரில் வெற்றி வீரராகத் திரும்பி வந்த ராமர் தீர்த்தக் குளம் ஒன்றை வெட்டி, அதில் சீதாதேவி மற்றும் லட்சுமணனுடன் நீராடி, இங்குள்ள இறைவனை வழிபட்டு ராவண வதத்தால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டார்.
இத்திருத்தலத்தில் தன் மனைவியர் மந்தாதேவி- ஜேஷ்டாதேவி மற்றும் மகன்கள் மாந்தி-குளிகன் ஆகியோருடன் குடும்ப சமேதராக- மங்கள சனியாக சனீஸ்வரபகவான் அருள் பாலிக்கிறார் .
சனிதசை, கண்டச்சனி, ஏழரைச்சனி மற்றும் அஷ்டம சனியின் பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெற விரும்புவோர் இத்திருத்தலம் சென்று நிவாரணம் பெறலாம்!...
Tags : சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017 TO 2020 சனிப் பெயர்ச்சி பலன்கள் சனி சனி பெயர்ச்சி ஜோதிடம் ஜாதகம் பரிகாரம் ஜோதிடம்பரிகாரம் ஜோதிடபரிகாரம் சனி பகவான் ராசிபலன் சனி கிரகம்
நேரம் : 09:21 PM
முகப்பு
அண்மைய பதிவுகள்
- சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020
November 14, 2017
- சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017 TO 2020 - ஒரு முன்னோட்டம்.
November 14, 2017
- குருப் பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2018
August 15, 2017
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் -2017 - 2018 -மகரம்,கும்பம்,மீனம்
July 25, 2017
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - துலாம்-விருச்சிகம் - தனுசு
July 09, 2017
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - கடகம்,சிம்மம்,கன்னி
July 09, 2017
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 -மேஷம் -ரிஷபம்,மிதுனம்
July 09, 2017
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018
July 09, 2017
- தனிய நாட்களும் படுபட்சி நாட்களும்
January 10, 2017
- பஞ்சபூதங்களின் ஆளுமை நேரம்!
January 10, 2017
அண்மைய செய்திகள் பெற
தற்போதைய பார்வையாளர்கள்

