முகநூல் விருப்பம்

முகப்பு

குருப் பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2018

பதிவு நாள் August 15, 2017Image result for குரு பகவான் படம்

 

 

 

முழு முதல் சுப கிரககமான ஸ்ரீ குரு பகவான் வருகின்ற ஆவணி மாதம் 17ம் நாள் 2/9/2017 சனிக்கிழமை காலை 9.25க்கு கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குரு பகவான் தரப் போகும் பலன்களை ஒவ்வொரு ராசிவாரியாக கீழே விரிவாகப் பார்ப்போம்.


கோச்சாரக் குருவினால் நல்ல பலன்கள் கிடைக்கும் ஐந்து இடங்கள்

இரண்டாம் வீட்டில்: பணவரவுகள்.


ஐந்தாம் வீட்டில்: பண லாபங்கள், புத்திர பாக்கியம், புத்திர லாபம், பெண் சுகம்.


ஏழாம் வீட்டில்: மதிப்பு மரியாதை, செல்வாக்கு கிடைக்கும் காலம். பண வரவுகள் அதிகரிக்கும் காலம்.


ஒன்பதாம் வீட்டில்: மனைவி மக்கள் சுகம், தனலாபம், எடுத்துச் செய்யும் செயல்களில் வெற்றி கிட்டும் காலம்பதினொன்றாம் வீட்டில்: மகிழ்ச்சியான காலம். நினைத்தது நிறைவேறும் இந்த ஓராண்டு சஞ்சாரத்தில்!தொடர்ந்து படிக்கும் முன் நினைவில் கொள்க...இந்தக் கோச்சாரப் பலன்கள் எல்லாம் நல்ல தசாபுத்திகள் நடந்தால் மட்டும் தான் கிடைக்கும்.அதே போல அஷ்டகவர்க்க பரல் மதிப்பெண்களின் படி, குரு தன் சுயவர்க்கத்தில் குறிப்பிட்ட ராசிக் கட்டத்தில் உள்ள தனது பரல்களை வைத்துத்தான் பலன் கொடுப்பார்.


அவருக்கு சுய வர்க்கத்தில் எட்டுப் பரல்கள் இருந்தாலும், சுற்றி வரும் இடத்தில் தன்னுடைய கட்டத்தில் உள்ள பரல்களுக்குத் தக்கபடிதான் பலன் தருவார்.


பொதுவாக குரு,...... 5ஆம் இடம், 7ஆம் இடம், 9ஆம் இடம் மற்றும் 11ம் ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் திருமணம் தடைப்பட்டிருந்தவர்களுக்கு திருமணத்தை நடத்தி வைப்பார்.


குழந்தை பேறுக்காக காத்திருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் தருவார். இடம், வீடு வாங்க காத்திருந்தவர்களுக்கு அந்த வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பார்.கோச்சாரக் குருவினால் நல்ல பலன்கள் கிடைக்காத ஏழு இடங்கள்.முதல் வீட்டில்: சாதகம் இல்லாத சூழ்நிலைகள் உள்ள காலம். நிலைத் தடுமாற்றங்கள். வாக்குவாதம், கலகங்கள், மந்தமான போக்குகள் உள்ள காலம் இந்த ஒராண்டு காலம்,குடும்பத்தை விட்டு பிரிந்து இருத்தல்.மூன்றாம் வீட்டில்: மனம் மற்றும் உடல் நலக் குறைவுகள், பதவி நீக்கம் அல்லது பதவி மாற்றம், துன்பங்கள்,சகோதரர் வழியில் மனஸ்தாபங்கள்.


நான்காம் வீட்டில்: உறவுகள் மூலம் துன்பங்கள். சுகமின்மை,வீடு , நிலம் பற்றிய பிரச்சனைகள். தாயாருடன் கருத்து வேறுபாடு.


ஆறாம் வீட்டில்: சுகக்குறைவுகள்,கடன் தொல்லைகள் , புதிய எதிரிகள் கண்டறியப்பட்டு அவர்களை விலகி இருப்பது.


எட்டாம் வீட்டில்:துக்கம், மரணத்திற்குச் சமமான கஷ்டங்கள்
பத்தாம் வீட்டில்: பதவி துறத்தல் அல்லது பதவியில் இடம், ஊர் மாற்றம், பண நஷ்டங்கள்.செய்தொழிலில் திருப்தியின்மை.பன்னிரெண்டாம் வீட்டில்: துக்கம், தூர தேசம் போய் வருதல் அல்லது தொலைவான இடம் சென்று வசித்தல், தன விரையம், நிலை மாற்றம்,போதைக்கு அடிமை ஆகுதல்.பொது பலன்கள் கீழே .....இவை எல்லாம் ஜனன கால தசா புத்திகளின் இருப்பை பொருத்து மாறுபடும் .......


நல்ல தசா புத்தி நடந்தாலும், அஷ்டக வர்க்கத்தில் நல்ல பரல்களை கொண்டிருந்தாலும் பலன்கள் வேறுபடும் என்பதை நினைவில் கொண்டு மேலே தொடரவும்.

 

==========================================


மேஷ ராசிக்காரர்களுக்கு – 7 ம் இடத்து குரு (களத்திர குரு) 

நீங்கள் தற்பொழுது அனுபவித்து வரும் துன்பங்களை சொல்லி மாளாது. அதற்கு விடிவு காலம் பிறந்து விட்டது என எண்ணிக்கொள்ளுங்கள். நீண்ட காலத்திற்கு பிறகு மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் பெறுவீர்கள். சுபகாரியம் கூடிவரும். பிரிந்த நட்பும் உறவும் இணக்கம் பெறும். தொழிலில் உயர்வைஅடைவீர்கள். சிலருக்கு வெளிநாட்டு யோகம் அமையும். குழந்தை செல்வத்தை விரைவில் அடைவீர்கள். மனைவி மற்றும் நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் இணக்கமான முறையில் செயல்படுவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். கல்வி மேம்படும். நோய் கடன் எதிர்ப்புகள் எல்லாம் காணாமல் போகும். திருமணத்திற்கு காத்திருக்கும் அனைவருக்கும் திருமணம் ஏற்பாடாகும். சயன சுகம் குறையும்.

வியாபாரரீதியில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும். இதுவரை விற்பனையாகாத நிலம் போன்றவைகள் விற்பனையாகி புதிய தொழில்களில் முதலீடுகள் செய்வீர்கள்.


தந்தையாருக்கு இதுநாள்வரை இருந்து வந்த சிக்கல்கள் தீரும். ஆன்மீக நாட்டம் அதிகரித்து சுற்றுலா செல்ல வாய்ப்புகள் கூடி வரும்.
அதிகப்படியான செலவுகள் ஆகலாம் ...கவனம் தேவை.
பொதுவாக செலவை குறைத்து வரவை பெருக்க ஏற்பாடு செய்யுங்கள்.


பரிகாரம்: ஆலங்குடிக்குச் சென்று குரு பகவானை தரிசிக்கவும்.


=========================================ரிஷப ராசிக்காரர்களுக்கு – 6 ம் இடத்து குரு (சத்ரு குரு)உங்களுடைய ராசிக்கு 6மிடமான நோய் கடன் எதிரி இடத்திற்கு குரு பகவான் வந்து அமர்வது சாதகமானது அல்ல. எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சம்பாதிக்கும் பணம் பொருள் தேவையற்ற வழிகளில் செலவாகும். பண வரவுகளில் பாதிப்பு உண்டாகும். தன சேமிப்பு குறையலாம். செய்தொழிலில் பிரச்சனைகள் உருவாகும்.
அதே நேரம் மறைமுகமான செயல்கள் மூலமாக வருமானம் அடைபவர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.

குடும்பத்தில் சண்டை வரலாம்.சிலருக்கு மனைவியுடன் கருத்து வேற்றுமைக்கு வாய்ப்புண்டு .வீட்டிலும் வெளியிலும் பேச்சை குறைத்து கொள்ளவும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை பொது காரியங்களில் தலையிடாமல் இருப்பது நலம். வேலை வாய்ப்புகளிலும் தொழிலிலும் சற்றும் சாதகமான சூழ்நிலை இருக்காது. எனவே புதிய முயற்சிகளை சிறிது காலம் ஒத்தி வைப்பது நல்லது. நட்பு, உறவு வழிகளில் பிரச்சினையும் ஏற்படும். சிலருக்கு தூரத்தில் வேலைவாய்ப்பும் புதிய கடன்களும் கிடைக்கும். முடிந்தவரை உங்கள் தேவைகளுக்கு செலவு செய்துக்கொள்ளுங்கள். வெளியில் பணமோ பொருளோ தந்தால் திரும்ப கிடைக்காது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்லவும். நிதானிக்க வேண்டிய காலக்கட்டம் இது. 

பரிகாரம்: தென்குடித் திட்டை சென்று குரு பகவானை தரிசிக்கவும். 

======================================மிதுன ராசிக்காரர்களுக்கு – 5 ம் இடத்து குரு (பூர்வ புண்ய குரு)

 

உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப் பெறுவது நல்லதுதான். எதிர்பாராத லாபங்களை அடைவீர்கள்.திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வாழ்க்கை துணையின் தொழில் மூலமான லாபம் பெருகும்.


தொலைதூரத்தில் இருந்து சிறப்பான செய்தி வரும்.


குழந்தைகளால் மகிழ்ச்சிகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் தைரியம் கூடும்
பெயர் புகழ் அடைவீர்கள். மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.தொழிலில் முன்னேற்றமும் லாபமும் உண்டாகும்...கடன் வாங்காமல் இருப்பது நல்லது.


தெய்வ பலமும் குலதெய்வம் அனுகிரமும் கிட்டும்.பெற்றோரின் ஆதரவும் அரவணைப்பும் கிடைக்கும். பூர்வீகத்தினால் லாபம் அடைவீர்கள். மொத்ததில் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் நல்குகிறது. 

பரிகாரம்: தக்கோலம் சென்று குரு பகவானை தரிசிக்கவும்.


===========================================


கடக ராசிக்காரர்களுக்கு - 4ம் இடத்து குரு (அர்த்தாஷ்டம குரு)


வீடு கட்ட மிகவும் உகந்த காலம். கட்டிய வீட்டை புதுப்பிக்கவும் ,நின்று போன கட்டிட பணிகளை செய்து முடிக்கவும் சிறந்த காலம் இது. பொருளாதார முன்னேற்றம் கண்டிப்பாக உண்டு.


ஆன்மீக சக்திகள் தரும் நல்ல விதமான பலன்களை இந்த ஆண்டு பெறுவீர்கள்.. சுப காரியங்கள் பல உண்டாகும்.


எந்த விசயமாக இருந்தாலும், அடாவடியாக இறங்கி வெற்றி பெற முயற்சி செய்வீர்கள்.


நீண்டகாலமாக இருந்த நோய்கள் சிகிச்சையால் தீரும்.


தாயின் உடல்நிலை பாதிப்பு அடையும். உறவினர்களிடம் மனக்கசப்பு உண்டாகும். வாகனங்கள் பழுதடைய வாய்ப்புண்டு.


சிலருக்கு எதிர்பார்த்த உத்தியோகம் கிடைக்கும்.. குழந்தைகளுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். சகோதர உறவு இணக்கமாகும். சிலருக்கு தொலைதூர வாய்ப்புகள் கிட்டும். மனைவிக்கு உத்தியோகம் கிடைக்கும். மொத்தத்தில் நன்மையும் தீமையும் கலந்தே நடக்கும்.


பரிகாரம்: இலம்பயங்கோட்டூர் சென்று குரு பகவானை தரிசிக்கவும்.


======================================


சிம்ம ராசிக்காரர்களுக்கு – 3 ம் இடத்து குரு (தைரிய குரு) 

உங்களுடைய ராசிக்கு 3மிடத்திற்கு குரு வருவது மத்திம பலனை தரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். சில முடிவுகளில் உங்கள் பலவீனம் தெரியும். துணிச்சலான விஷயங்களால் பெயர் புகழ் உண்டாகும். எதையும் முன்கூட்டியே திட்டமிட்டால் வெற்றி அடையலாம். ஆபரணம் வாங்குவீர்கள். மன மகிழ்ச்சிக்காக விளையாட்டுகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பீர்கள். சகோதர உறவு பாதிக்கும். மனைவியும் உங்களுடைய வேலைகளில் உதவி செய்வார்.தாய் மற்றும் உறவு வழிகளில் சுபசெலவு செய்வீர்கள்.குழந்தைகள் எதிலும் வெற்றி அடைவர். திருமண அமைப்பு கூடிவரும். தொழில் லாபம் உண்டு. கடிமையான முயற்சி இருந்தால் வெற்றி உண்டு. வாகனம் மற்றும் வீடு சம்பந்தப்பட்ட வகையில் சிலபல செலவினங்களை சந்திப்பீர்கள். புதிய முயற்சிகளில் மிகவும் கவனம் தேவை.ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
வாகனம் ஓட்டும் பொது கவனம் தேவை. 

பரிகாரம்: திருப்புலிவனம் சென்று குரு பகவானை தரிசிக்கவும்.

=======================================


கன்னி ராசிக்காரர்களுக்கு – 2 ம் இடத்து குரு (குடும்ப குரு)


உங்கள் ராசிக்கு தன ஸ்தானமாகிய 2மிடத்திற்கு குருபகவான் வருவது சிறப்பு.தொழிலில் தேவையற்ற அலைச்சல்கள் நீங்கி நிலையான வருவாயை பெறுவீர்கள். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியை தரும்.தனரீதியான தொழில்வளர்ச்சி, திடீர் அதிஷ்டம் உண்டாகும்,பணம் வந்து கொண்டே இருக்கும். தடைபட்டு வந்த திருமணம் இனிதே நடைபெறும். பகை விலகும்.நட்பு வட்டாரம் பெருகும்.


குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கல்வி நிலைகள் மேம்படும். எதிலும் இருந்து வந்த தடையும் இழுபறியும் நீங்கும். வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.உடல் உபாதைகள் விலகும். கடன்கள் நிவர்த்தியாகும்.எதிர்ப்புகள் அடங்கிபோகும்.தெய்வீகம் பேசும்.உங்களின் சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாக வேலை செய்தால் உழைப்புக்கேற்ற உயர்வு கண்டிப்பாக உண்டு.


ஜீரண உறுப்புகளில் பிரச்சனைகள் வரலாம். மிகவும் கவனம்.


பரிகாரம்: சென்னை பாடியில் உள்ள குருபகவானை தரிசிக்கவும்.


======================================== 

துலாம் ராசிக்காரர்களுக்கு – 1 ம் இடம் (ஜென்ம குரு) 

ஜென்ம குரு காலம். புதிய அனுபவத்தை தரும் காலம்.
இருக்கும் இடத்தை அடிக்கடி வெளிப்பயணங்கள் இருக்கும்.
அலைச்சல்கள் மிகுந்து காணப்படும்.


மனைவி மற்றும் குழந்தைகள் வழிகளில் கருத்து வேறுபாடு தோன்றும்.


இக்காலக்கட்டத்தில் சந்திக்கும் நபர்கள் வாழ்வில் ஏற்றத்தை தருபவர்களாக அமைவார்கள்.


தொழில் நிலைமை ஓரளவு சிறப்பாக இருக்கும்.


மனநிம்மதியும் அமைதியும் பாதிக்கும் காலம் என்பதால் பெரியோர் யோசனை கேட்டு நடப்பது நலம்.


தன்னிச்சையான முடிவுகள் எதிர்மறையான பலனைத்தரும்.


தூரதேசங்களின் தொடர்பு, ஆன்மீகவாதிகளின் தொடர்பு, சித்தர்களின் தொடர்பு , ஆசிகள்  கிடைக்கும்.


கடன் விவகாரங்களில் சிக்கல்கள், வம்பு வழக்குகள் உண்டாகலாம். ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகும்.


அடி வயிறு, தலைபகுதியில் நோயுண்டாகி குணமடையும்.
குருட்டு தைரியத்தில் இறங்கி எதையாவது செய்வதும் அதனால் நஷ்டப்படுவதுமாக இருக்கும். எனவே எதையும் யோசித்து செய்வது நல்லது. 

பரிகாரம்: சுருட்டப்பள்ளி குரு பகவானை தரிசிக்கவும்.

 

=====================================

 

விருட்சிக ராசிக்காரர்களுக்கு – 12 ம் இடத்து குரு (விரய குரு) 

இந்த ஆண்டு செலவு மிகும். தொழில் மாற்றம், பதவியில் மாற்றம், உண்டாகும். இவைகள் விரும்பத்தகாத முறையில் இருக்கும் என்பதை மனதில் வையுங்கள்.

உத்தியோகத்தில் பழி உண்டாகலாம்.

உங்கள் ராசிக்கு 12மிடமான விரைய ஸ்தானத்திற்கு குரு வருவது சிறப்பில்லை.தன இழப்பு அதிகமாகும். சேமிப்பு கரையும். ஆகவே செலவுகளை தேர்வு செய்து செய்யுங்கள். சட்டத்திற்கு புறம்பான வருமானம் அதிகரிக்கும். அதுவே சிக்கலையும் தரும் .


உறவினர் வழியிலும் தாயார் வழியிலும் செலவினங்கள் கூடும்.


உயில் சம்பந்தமாகவும் காப்பீடு சம்பந்தமாகவும் செலவுகள் ஏற்படும்
வீடு வாகனம் அசையா சொத்துக்கள் வழிகளில் செலவுகள் ஏற்படும். குழந்தைகளின் கல்வி உடல் நலத்தாலும் செலவுகள் ஏற்படும். சிலருக்கு பூர்வீகத்தை மாற்றி இருப்பீர்கள் .சிலர் இருக்கும் இடத்தை விற்று வேறு இடம் வாங்குவார்கள். அதிக வெளிப்பயணங்களால் உடல் நலம் கெடும். தொழிலில் புதிய வாய்ப்புகள் ஏற்படும்.கோயில் திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள். புண்ணியத்தலம் சென்று வழிபடுவீர்கள். சுபநிகழ்ச்சிகளினால் பணம் கரைந்து கடன் ஏற்படும்.


பரிகாரம்: புளியரை சென்று (தென்காசிக்கு அருகில்) குரு பகவானை தரிசிக்கவும்.


======================================

 


தனுசு ராசிக்காரர்களுக்கு – 11ம் இடத்து குரு (சுப லாப குரு)

 


செய்தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் ,அதன்மூலம் புதிய ஒப்பந்தங்கள், புதிய வியாபார ஸ்தலம், கூட்டுவியாபாரம் உருவாகும், தொட்ட காரியங்கள் எல்லாம் சுபமாகும். எண்ணங்கள் எல்லாம் ஈடேறும். ஏழரை சனியால் உண்டாகும் தீய பலன்கள், இந்த ஆண்டு குறையும். சிலருக்கு நிலபுலங்களினால் எதிர்பாராத லாபம் கிடைக்கும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். புதிய வேலை வாய்ப்புகள் உத்தியோகம் கிடைக்கும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.படிப்பில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.


சுயஜாதகத்திலும் நல்ல திசாபுத்தி உள்ளவர்கள் இந்த ஆண்டு மிக பெரிய அளவில் நன்மையடையலாம்.


வாழ்க்கை துணையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். சகல விதங்களிலும் லாபமுன்டாகும்.


வாகனாங்களை இயக்கும்போது ஜாக்கிரதையாக இருக்கவும். போதை பழக்கம் உள்ளவர்கள் அதனை உடனே நிறுத்தவும். இல்லையேல், ஆபத்து உண்டாகும்.


வெற்றியும் லாபமும் உங்களுக்கே.


பரிகாரம்: உத்தமர்கோவில் சென்று குரு பகவானை தரிசிக்கவும்.

=====================================


மகர ராசிக்காரர்களுக்கு –10 ம் இடத்து குரு (ஜீவன குரு)


தைரியமாக அடித்து தூள் கிளப்பிக் கொண்டிருந்த நீங்கள் இந்த ஆண்டு சற்றே அடக்கி வாசிக்க வேண்டும் என்பதை மனதில் வையுங்கள்.தைரியம் மட்டுமே போதுமானது என எண்ணிக் கொண்டு கண்ணை மூடியபடி எந்த முடிவுகளையும் எடுத்து முட்டிக் கொள்ளாதீர்கள். செய்தொழிலில் மிகுந்த கவனம் தேவை. தொழிலில் நெருக்கடியும் கடனும் மாற்றங்களும் அதிக தாக்கத்தை ஏற்படும். தொழிலில் விரிவாக்கம் வேண்டாம்.


புதிய முதலீடுகள், புதிய செலவுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.


நட்புக்கள் கரம் நீட்டுவார்கள். ஆனால் தங்களுக்கு அதனால் நன்மை ஏற்படாது.


வாழ்க்கை துணைக்கு உடல்நலக்குறைவு உண்டாகும். அல்லது துணை வழியே செலவு பாதை காட்டும். சிலசமயம் விபரீத இராஜயோகம் மாதிரி தனவரவுகளும் உண்டாகும்.. 


பணிபுரிவோருக்கு இடமாற்றம் கட்டாயம் உண்டு.

நண்பர்கள் உறவினர் கூட்டாளிகளால் பிரச்சினைகள் ஏற்படும்.
மனைவி வழிகளில் ஒத்துழைப்பும் அனுசரணையான போக்கு காணப்படும்.


படிப்பு விஷயங்களில் முன்னேற்றம் காண்பீர்கள்.
வண்டிவாகனங்களில் கவனத்துடன் பயணம் செய்யவும்.
வீடுகட்டுதல் விரிவாக்கம் செய்யலாம்.
குழந்தைகளின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
அலைச்சல்கள் அதிகமாக இருக்கும்.

மொத்தத்தில் எந்த பணியில் ஈடுபட்டாலும் ஒரு நிமிடம் தீர யோசித்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்.


பரிகாரம்: கோவிந்தவாடி அகரம் சென்று குரு பகவானை தரிசிக்கவும்.


=========================================

கும்ப ராசிக்காரர்களுக்கு – 9 ம் இடத்து குரு (பாக்ய குரு)


உங்கள் ராசிக்கு 9மிடமான பாக்கிய ஸ்தானத்திற்கு குரு வருவது மிகச்சிறப்பு. உங்களின் கெளரவம் மதிப்பு மரியாதை கூடும்.

முன்னோர்களின் ஆசியும் தெய்வ அனுகூலமும் கிடைக்கும். பெற்றோரின் அரவணைப்பும் பெரியவர்களின் ஆசியும் கிட்டும்.

குடும்பம் திருமணம் தொழில் வீடு வாகனம படிப்பு குழந்தைபாக்கியம் என நீங்கள் எதிர்பார்த்த அனைத்தும் விரைவில் கிடைக்கும்.
பெயர் புகழ் உண்டாகும். நீண்ட காலத்திற்கு பிறகு வசந்தம் உங்களை அரவணைக்கும். 


தொழில் பற்றி மட்டும் இல்லாமல் சேவை சார்ந்த விஷயங்களிலும் ஈடுபட வாய்ப்பு உள்ளது.


புதிய தொழில் முயற்சிகள் வெற்றி அடையும்.

வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
பதவி உயர்வு ஊதிய உயர்வு கண்டிப்பாக உண்டு.

உடல் நலம் சிறக்கும்.பழைய கடன் பாக்கிகள் வசூல் ஆகும்.
தெய்வ அனுகூலம் உண்டு.
ஆனால் வட்டித் தொழிலில் உள்ளவர்கள் மிகவும் கவனம்.
நல்ல பலன்கள் எல்லாம் கூடி வரும் அற்புதமான கால கட்டம் இது.


பரிகாரம்: திருவொற்றியூர் குரு பகவானை வழிபடவும்.


=======================================


மீன ராசிக்காரர்களுக்கு - 8 ம் இடத்து அஷ்டம குரு 

உங்கள் ராசிக்கு உங்கள் ராசிநாதன் குரு பகவான் 8மிடத்திற்கு வருவது முற்றிலும் சிறப்பில்லை.
சில நபர்கள் கர்மாவின் பிடியில் மாட்டுவார்கள். அதனால் , என்ன நடக்கிறது என அறியாமலேயே பலவித சிக்கல்களை அனுபவிக்க நேரிடும்.

ஜீவன தொழில் ரீதியில் தடைகள் உண்டாகும், அதன் மூலம் விரையங்கள் இருக்கும்.


திடீர் பணவரவும் செலவுகளும் அதிகம் இருக்கும். சில வீண் வம்பும் பிரச்சினையும் வீடு தேடி வரும்.பேச்சில் கூடுதல் கவனமாக பேசவும்.கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

 

குடும்பத்தில் பிரச்சினை தோன்றி மறையும். தொழிலில் மந்தநிலை இருக்கும்.
சம்பள உத்தியோக காரர்களுக்கு கடினமான சூழலே நிலவுகிறது. எந்தபதவியும் பொறுப்பும் எடுக்காமல் பிறரிடம் பணிபுரிவதே சிறப்பு.

தொழில் விரிவாக்கம் வேண்டாம்.

வாகனத்தில் நஷ்டமும் விபத்தும் உண்டாகும் காலம் என்பதால் நிதானமான போக்கு கடைபிடிக்கவும்.


இட சம்மந்தப்பட்ட பாதிப்புகள், பொருளாதார தடைகளும் ஏற்படலாம்
புதிய முயற்சி வேண்டாம். எதிலும் சிக்கல்கள் உண்டாகும் காலம் என்பதால் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்ல வேண்டிய காலம் இது.


பரிகாரம்: மயிலை ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (கபாலீஸ்வரர் கோயில்) குரு பகவானை வழிபடவும்.

 

 

 

நேரம் : 12:13 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்