முகநூல் விருப்பம்

முகப்பு

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் -2017 - 2018 -மகரம்,கும்பம்,மீனம்

பதிவு நாள் July 25, 2017

 
 
மகர ராசி :
 
 இருளில் சிக்கிய உணர்வும் சிந்தனைகளில் மாறுதலும் யாரையும் நம்பமுடியாத சூழ்நிலையும் உருவாகும்.
வீட்டிலும் உள்ளவர்களிடமும் வெளிநபர்களிடமும் விட்டுக்கொடுத்து செல்லவும்.
நண்பர்கள், கூட்டாளிகளினால் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.தொழிலில் விரிவாக்கம் வேண்டாம்.
அலைச்சல் மன உளைச்சல் அதிகரித்து காணப்படும்.பொருள் இழப்பும்.சுகம் பாதிக்கும்.
பெற்றோர் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.படிப்பு விஷத்தில் கவனம் செல்லாது. மூத்தோரிடம் ஆலோசனையை கேட்டு செயல்படுவது நன்று.
ராகு ஏழாமிடத்திற்க்கு வரும்போது துணைவர் வழியாக பிரச்சினை ஏற்படும். உடல்நிலை பிரச்சினை ஏற்படும். கூட்டுத்தொழில் பிரச்சினை ஏற்படும். அடிக்கடி பயணம் ஏற்படும்.வீண் செலவு ஏற்படும். 
உறவினர் வழியில் பிரச்சனைகள்..உடல்நிலை பாதிப்பு...
• திருமணம் தடை தாமதம் திருமணம் ஆகும். இந்த காலத்தில் அமைந்தால் அல்லது வெகுதுாரத்தில் உள்ள வரன் அமையும், அன்னியத்தில் அல்லது வேறு சாதி, மதத்திலும் அமையலாம்
• கணவன் மனைவி கருத்துவேறுபாடு உண்டாகும், பிரிவினை ஏற்படும்,
• பயண தடங்கல், வெளிநாடு பயண தடங்கல்
• சுக்கிலம்,சுரோனியம் சுரப்பில் குறைபாடு, மர்ம உறுப்பில் நோய் நொடி உண்டாகும், உடலுறவு பிரச்சினை உண்டாகும்
• உடலமைப்பில், தேகத்தில் மாற்றம் ஏற்படும்
• விஷபாதிப்புகள் உண்டாகும்
• கௌரவம் பாதிக்கபடும்
• ஒழுக்கம், கண்ணியம் கெடும்
• ஞானம் சிந்தனைகள் பெருகும்
• இறைவழிபாட்டில் அதிக நாட்டம் செல்லும்
• நண்பர்களுடன் பிரிவினை, சண்டை சச்சரவு உண்டாகும்


 

 
பரிகாரம் :ஜன்ம நட்சத்திரம் அன்று சோம்பு ஆற்றில் விடவும்.
 
• தினமும் விநாயகர் வழிபாடு, அரசமரத்தை சுற்ற வேண்டும்
• சர்ப்ப வழிபாடு செய்ய சிறப்பு
• நவக்கிரகத்தில் உள்ள ராகு கேது பகவான் வழிபாடு
• பிள்ளையார்பட்டியில் கேது பகவான் பரிகாரம் செய்து கொள்ளவும்
 
 
 
 
கும்ப ராசி :
 
உங்கள் ராசி 6மிட்த்தில் ராகுவும் 12ல் கேதுவும் வருவது நல்ல எதிர்காலத்தை நோக்கிய புதுபயணத்துக்கு அச்சாரம் இந்த ராகு கேது பெயர்ச்சி.
இருட்டில் இருந்து வெளிப்பட்டு ஒளிமயமான தேடலை தொடங்குவீர்.
 
தெய்வீக சக்திகள் உங்களை பாதுகாக்கும்.உங்களின் அணைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விடும். எதிர்பில்லாத வாழ்வும் மகிழ்ச்சியும் அமையும்.ஜனன ஜாதகத்தில் திசா புத்தியும் நன்மைதருவதாக அமைந்தால் சிறப்பான வாழ்வை எட்டலாம்.
குடும்பம் தனம் உடல்நலம் தொழில் படிப்பு குழந்தைகள் மேன்மை என அனைத்தும் நன்றாக இருக்கும். திருமணம் சுபநிகழ்வுகள் கூடிவரும். நினைத்தது எல்லாம் நிறைவேறும். 
 
எதிரிகளை வெல்லும் காலம்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.அனைவரும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவதை காணலாம். விழாக்கள் கொண்டாடங்களில் ஈடுபட மனம் துடிக்கும்.
• லாபம் கருதியே எதிலும் ஈடுபடுவீர்கள்
• புத்திர தோஷம், பஞ்சனை தோஷம் ஏற்படும் காலம்
• பண விரையம் உண்டாகும், பலவகை செலவுகள்
• பணி/வேலையில் இடமாற்றம், நீக்கம்
• மனபோரட்டம்
• இறுதி கடன் செய்யும் சூழல் உண்டாகும்
• உறக்கமின்மை உண்டாகும்
• வாக்குவாதம், கோபம், பெருங்கவலை ஏற்படும்
• வெளியிடம் செல்லவேண்டிய சூழல் உண்டாகும்
• பெண்களிடம் விரோதம் ஏற்படும்
• பலவற்றில் கலகம் உண்டாகும், பலருடன் பகை ஏற்படும் காலம்
• விஷபாதிப்புகள், நோய்கள் உண்டாகும், குடல்நோய்கள் உண்டாகும்
• கடன் அதிகரிக்கும்
• பால்வினை நோய் அறிகுறி தோன்றும், எலும்புறுக்கி நோய் உண்டாக்கும்
• வழக்கில் வெற்றி  உண்டாகும்
• நேரம் தவறி சாப்பிடும் சூழல் உண்டாகும்
• வயிறு புண், வலி சிறுநீரகக் கோளாறு
• பாதங்கள் வலி அதிகரிக்கும்
பரிகாரம் :ஜன்ம நட்சத்திரம் அன்று ஆறு தேங்காயும் சிறிது வெல்லமும் ஆற்றில் விடவும்.
 
• பிள்ளையார்பட்டியில் கேது பகவான் பரிகாரம் செய்து கொள்ளவும்
• தினமும் விநாயகர் வழிபாடு
• அடிக்கடி யானைக்கு கரும்பு வாங்கி தரவேண்டும்
• பசுவுக்கு அரிசி ஊரவைத்து அகத்திகீரையுடன் வெல்லத்தை சேர்த்து அடிக்கடி கொடுத்து வர மிகுந்த சிறப்பு


 
 
மீன ராசி : உங்கள் ராசிக்கு 5ல் ராகுவும் 11ல் கேதுவும் வருவது சிறப்பானது. புதுபுது எண்ணங்கள் மனதில் தோன்றி மறையும்.புது அணுகுமுறையை தொழிலில் மேற்கொள்வீர்கள். சிலர் பூர்வீகத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாறுவர்.
பூர்வீகத்தினால் சிக்கலும் பின் லாபமும் அடைவர்.வீட்டை விஸ்தரிப்பும் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.மனைவி அதிகாரம் ஓங்கி இருக்கும். குழந்தைகளினால் பிரச்சினைகள் வீடு வந்து சேரும் கண்காணிப்பு தேவை.
சகோதர இணக்கம் உண்டாகும்.வரவு செலவுகளில் இழுபறி இருந்தாலும் தேவைக்கு ஏற்ப வந்து சேரும்.தொழில் நிலைமை சுமாராக காணப்படும். திருமண நிகழ்ச்சிகள் இழுபறி இருந்து பின் இனிதே நடந்தேரும்.
 
 ஐந்தாமிடத்திற்கு வரும்போது எதிர்பாராத பணவரவு வரும். நீங்கள் செய்கின்ற தொழிலில் நல்ல வருமானம் வரும். நுண்ணறிவை காட்டும் இடம் என்பதால் முடிவு எடுக்கமுடியாத நிலை ஏற்படும். வம்பு வழக்குகள் வரும். கணவன் மனைவி உறவுகள் நல்லவிதமாக இருக்காது.


 
 
• உங்கள் துறையில் சகலகல வல்லவர்கள் ஆகும் காலம்
• பிறருக்கு நல்வழி காட்டுவீர்கள், ஆன்மீக பற்று அதிகரிக்கும்
• தர்மகாரியத்தில் கவனம் திரும்பும்
• பழைய பொருட்களை சேர்த்து வைத்து அதன் மூலம் லாபம் ஈட்டுவீர்கள்
• மூத்தசகோதரருடன் கருத்துவேறுபாடு உண்டாகும்
• ஆசை அபிலாசைகள் தடைபடும் காலம்
• பணபுழக்கம் முடங்கும் சுழல் உண்டாகும்
• கௌரவ பதவியல் பாதிப்பு உண்டாகும்
• குறுக்குவழி வருமானம் வரும்
• இடதுகை,காது, தோள்பட்டை வலி உண்டாகும்
• சந்தான பாக்கியம் தடைபடும்
• பெண்களுக்கு கர்பகோளாறு ஏற்படும்,  குடும்பகட்டுபாடு செய்யும் சூழல், சிலருக்கு கர்ப்பபை எடுக்கும் சூழல் உண்டாகும்
• எண்ணங்கள் எளிதில் நிறைவேறாது
• குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நல பாதிப்பு உண்டாகும், கவனமும் தேவை, குழந்தைகள் குறித்த கவலையும் அதிகரிக்கும்
• தாய்வழி மாமன் வழியில் சண்டை சச்சரவுகள்
• மறதி, மாற்றி மாற்றி செய்யும் சூழலால் அவதி படுவீர்கள்
• புத்தி சாதுர்யம் அதிகரிக்கும்
• வருவதை முன்கூட்டியே அறியும் திறமை உண்டாகும்
பரிகாரம் :ஜன்ம நட்சத்திரம் அன்று சகோதர சகோதரிகளுக்கு உடை தானம் செய்யவும்.
 
• தினமும் விநாயகர் வழிபாடு
• அடிக்கடி யானைக்கு கரும்பு வாங்கி தரவேண்டும்
• பசுவுக்கு அரிசி ஊரவைத்து அகத்திகீரையுடன் வெல்லத்தை சேர்த்து அடிக்கடி கொடுத்து வர மிகுந்த சிறப்பு
 
 
 
 
 
 

நேரம் : 10:26 AM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்