முகநூல் விருப்பம்

முகப்பு

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - கடகம்,சிம்மம்,கன்னி

பதிவு நாள் July 09, 2017Image result for rahu ketu

 

 

கடகம் ராசி :

 

புதுப்புது சிந்தனைகள் உருவாகும்.புதிய நபர்கள் தொடர்பு கொள்வார்கள் அவர்களால் ஏற்றம் உண்டாகும்.அலைச்சல்கள் இருக்கும் அதனால் ஆதாயம் உண்டு. காரிய தடை உண்டானாலும் அலைந்து திரிந்து முடிப்பீர்கள். வரவேண்டிய பணம் பொருள் மெல்ல வந்தடையும். தொழில் நிலைமை சீர்டையும். விடுபட்ட வழிபாடுகளைச்செய்து முடிப்பீர்கள்.படிப்பு விஷயங்களில் நாட்டம் குறைவாக இருக்கும். உறவினர்களுடன் சண்டை சச்சரவு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். பகைவர்கள் அழிவார்கள்.சமூகத்தில் அந்தஸ்து கூடும். தனவரவு முறையற்ற வகையில் உண்டாகும். இராஜ விருது கிடைக்கும்.


உடல் பருமணம் அடையும், தேகவளம் கூடும், தோற்ற பொழிவு கூடும்
பிறந்த இடம் விட்டு வெளிநாடு/வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.


வேலையில் / தொழிலில் செயல்திறன் பன்மடங்கு கூடும்
ஒழுக்கமில்லாத தன்மை, மனப்பான்மை, பிறரை ஏய்க்கும் குணம் அதிகரிக்கும்.


கணவன் / மனைவிக்கு உடல் நிலை பாதிப்பு உண்டாகும், கணவன் மனைவி பிரச்சினை, சண்டை சச்சரவுகள், பிரிவு, விவாகரத்து ஏற்படும்.


திருமணம் எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்கும் தடை தாமதம் உண்டாகும்.


இக்காலத்தில் காதல் திருமணம் செய்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.


சந்தான விருத்தி தடைபடும் காலம்.


ஆண் பெண் மர்ம உறுப்பில் பிரச்சினகளை தோற்றுவிக்கும்.


சிலருக்கு இளைய மனைவி ஏற்படும்.


பயண தடங்கல் ஏற்படும்


இடுப்புக்கும் தொடைக்கும் இடைப்பட்ட பகுதியில் வலி, வேதனை, அறுவை சிகிச்சை ஏற்படும்.


சிறுநீரில் தொற்று நோய் வரலாம்.கவனம் தேவை.
நீண்ட நாள் உடல் நல பாதிப்பு உள்ளவர்கள் சுய நினைவு இழக்க நேரிடும்.


எதிலும் வாக்குவாதத்தை தவிர்க்க உத்தமம்.. 

பரிகாரம் :


ஜன்ம நட்சத்திரம் அன்று தாயாருக்கு சேலை வாங்கி கொடுக்கவும்.


• செவ்வாய், சனிக்கிழமைகளில் நவக்கிரகத்தில் உள்ள ராகு கேது பகவானை விளக்கிட்டு வழிபட சிறப்பு


• தினந்தோறும் விநாயகபெருமானுக்கு அருகம்புல் சாற்றி வழிபடவும் மற்றும் அடிக்கடி யானைக்கு கரும்பு வாங்கி தர மிகுந்த சிறப்பு


* தினமும் பல வண்ணம் புள்ளிகளை கொண்ட துணியை சிறிய பகுதியை மட்டும் கத்திரிக்கோலால் வெட்டவும்.

 

=========================================== 

சிம்மம் ராசி :

 

அருமையான கால கட்டம் இது...வீட்டிலும் வெளியிலும் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.வேலை சம்பாத்திய பற்றாக்குறை தீரும். பழைய வேலையில் இருந்து மாறி புதிய தொழில் அமைப்பு ஏற்படும். விலகி சென்ற உறவினர் நண்பர்கள் உங்களை புரிந்து கொண்டு மீண்டும்ப நெருங்கி வந்து பழகுவார்கள். பழைய கடன்கள் தீரும். படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும்.எல்லா வகையிலும் நல்ல பலன்கள் ஏற்படும்.


மூதையர் சொத்து வந்து சேரும் காலம்..


வேலை/தொழில் நிமித்தமாக வெளிநாடு பயணம் அமையும், இடமாற்றம், பணி இடை நீக்கம், மலைவாச ஸ்தலங்களில் இடமாற்றம் உண்டாகும். 


விஷ சம்பந்தப்பட்ட நோய்கள், வயிற்று வலி, அஜீரண தொந்தரவு, வயிறு மந்தம், அலர்ஜி, தோல் வியாதி, பாத வலி உண்டாகும்
பருவசுகவிருந்து அமையும். 

மனைவிக்கு உடல் நலம் மிகுந்த பாதிப்பை தரும்

 


பரிகாரம் :


எல்லா மாதமும் ஜன்ம நட்சத்திரம் அன்று பார்லியும் பாலும் கலந்து ஆற்றில் விடவும்.


• செவ்வாய், சனிக்கிழமைகளில் நவக்கிரகத்தில் உள்ள ராகு கேது பகவானை விளக்கிட்டு வழிபட சிறப்பு.


• தினந்தோறும் விநாயகபெருமானுக்கு அருகம்புல் சாற்றி வழிபடவும் மற்றும் அடிக்கடி யானைக்கு கரும்பு வாங்கி தர மிகுந்த சிறப்பு.


• பிள்ளையார்பட்டிக்கு சென்று கேது பகவானுக்கு உண்டான பரிகாரம் செய்து கொண்டு, கற்பக விநயாகரை வழிபட்டு வரவும். 

===========================================

 

கன்னி ராசி :

 

தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் லாபங்களும் வெற்றியும் வந்து சேரும். வீடு,மனை, வாகன சேர்க்கை ஏற்படும்.கூட்டுத்தொழிலில் லாபத்தை அடைவர்.பெண்களால் யோகமும் குழந்தைகளால் லாபமும் பெருமையும் அடைவீர்கள்.எதிர்பார்த்த திருமணமும் சுபநிகழ்ச்சியும்வீட்டில் நடைபெறும். தந்தையின் உடல் நலம் மேம்படும்.


தொழில் சிறக்கும்.கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.பணம் பல வழிகளில் வரும்.குழந்தைகள் எல்லோரும் பாராட்டும் வகையில் நடந்து கொள்வார்கள்.தொழிலில் லாபம் அதிகரிக்கும்.


பண புழக்கம் அதிகரிக்கும், மூதாதையர் சொத்து கிட்டும்.


விவாதித்து வெற்றிபெறும் காலம்...


நெடுநாளைய ஆசை அபிலாசைகளை பூர்த்தி செய்யும் காலம்..

ஆன்மீகம் சம்பந்தமான ஈடுபாடுகள் அதிகரிக்கும், ஞான விருத்தி கிட்டும், ஆன்மீகத்தில் சித்தி அடையும் காலம்..


சிலருக்கு இளைய மனைவி அமையும்.


ஆடை,ஆபரணம், பொன், சொத்துகள் சேரும் காலம்.


மைத்துனர் வழியில் இருந்த தடை அகலும் நன்மை உண்டாகும்
மருமகள் பிரச்சினை நீங்கும்.


மூத்த சகோதரர்கள் மூலம் பிரச்சினைகள் தீரும் நன்மைகள் வந்து சேரும்.


நீண்ட நாள் நோயால் மருத்துவ மனையில் அவதிபட்டவர்கள் நோய் நீங்கி வீடு திரும்பும் சூழல் அமையும்.


அத்தை,மருமகன், தந்தை வழி பாட்டி மூலம் ஆதாயம் உண்டாகும்
பூர்வ புண்ணியத்தில் தோஷம் உண்டாகும், குலதெய்வ வழிபாடு தடை உண்டாகும்.


தாய்வழி மாமன் உறவில் விரிசல் சண்டை சச்சரவு உண்டாகும்.

காது சம்பந்தமான நோய்கள் உண்டாகும், நரம்பு பாதிப்பு உண்டாகும் காலம்.
பெண்களுக்கு கருப்பை சம்பந்தமான நோய் உண்டாகும், சிகிச்சை மேற்கொள்ளவேண்டிவரும்.

 


பரிகாரம் :


தினமும் நாய்க்கு கோதுமை ரொட்டி வாங்கி தரவும்.


• பிள்ளையார்பட்டிக்கு சென்று கேது பகவானுக்கு உண்டான பரிகாரம் செய்து கொண்டு, கற்பக விநயாகரை வழிபட்டு வரவும்.


• ஞாயிற்றுக்கிழமைகளில் துர்க்கை, காளி வழிபட சிறப்பான யோகம் உண்டாகும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நேரம் : 06:16 PM

Label

    அண்மைய செய்திகள் பெற

    பார்வை

     

    தற்போதைய பார்வையாளர்கள்