முகநூல் விருப்பம்

முகப்பு

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 -மேஷம் -ரிஷபம்,மிதுனம்

பதிவு நாள் July 09, 2017 

 

 

 

Image result for rahu ketu

 

 

 

மேஷராசி

 

வீட்டையோ,தொழில் அமைப்பிலோ மாற்றம் ஏற்படும்.
சிலருக்கு வீடு மனை வாகன யோகம் கூடிவரும்.
பூர்வீகத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமூக முடிவு ஏற்படும்.
மன உளைச்சல் தீர்ந்து நிம்மதி ஏற்படும்.வெளிபயணங்கள் அதிகம் ஏற்படும்.
வேலை வாய்ப்புகள் தொலைவில் அமையும்.திருமணத்தடை நீங்கும்.காதல் திருமணம் தடைபட்டவர்களுக்கு திருமணம் கைகூடி வரும்.
படிப்பு விஷத்தில் தடைகள் தாமதமும் ஏற்படும். பெற்றோரிடம் இருந்து பிரிந்து தொழில், படிப்பு சம்பந்தமாக வெளியில் இருக்கநேரிடும்.
சிலநேரங்களில் வீட்டில் குழப்பமும் சச்சரவும் அதிகம் ஏற்படும்.அலைச்சல் திரிச்சல் எதிலும் உண்டாகும்
சற்று அலைச்சல் மிகுந்து காணப்படும்.

பொருளோ பணமோ வெளிநபரிடம் கொடுக்கல் வாங்கலில் அதிகம் கவனம் தேவை.
தாயார் உடல்நிலை பாதிப்படையும்.வீட்டில் விஷ ஜந்துக்கள் நடமாடமிருக்கும்.பண புழக்கம் அதிகரிக்கும்.கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.


சந்தான பாக்கியம், விருத்தி உண்டாகும், குருக்களின் அருள் கிட்டும், மன நோயால் பாதிக்கபட்டவர்கள் சரியாகும், மன பயம் நீங்கும்
சொந்த தொழிலில் லாபம் தடைபட்டு கொண்டு இருந்தவர்களுக்கு இனி லாபம் கிட்டும், தொழில் மாற்ற சிந்தனைகள் உருவாகும்....


அடிமை தொழில் செய்பவர்களுக்கு பதவி உயர்வு தடைபடும் / வேலை இழப்பு / வேண்டாத இடமாற்றம் / பதவி குறைப்பு / வசதி இல்லாத ஊர்களுக்கு மாற்றம் / பதவி பறிப்பு ஆகியன உண்டாகும்.
பிழைப்புக்காக ஊர் மாறும் வாய்ப்பு/ ஊரை விட்டு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.


வீட்டில் திருடு பயம், விலையுர்ந்த பொருட்கள் களவு போதல், குலதெய்வ குறைபாடு  உண்டாகும்.
பந்து ஜெனத்துடன் பகை உண்டாகும்.
சுவையற்ற சாப்பாடு, நேரம் தவறி சாப்பிடும் சூழல் அமையும்.
மூக்கு சம்பந்தமான நோய் வரும்.
கீர்த்தி,அபிமானம் கெடும் . கௌரவ பாதிப்புகள் உண்டாகும். 

பரிகாரம் :


எல்லா மாதமும் உத்திரம் நட்சத்திரம் அன்று உளுந்து ஒரு படியில் அளந்து ஓடும் ஆற்றில் விடவும்.
ஞாயிறு தோறும் காளி, துர்க்கையம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம், அர்ச்சனை வழிபாடு செய்வது சிறப்பு.
சமயபுரம் சென்று மாரியம்மனை வழிபட்டு வரவும்.


======================================== 

ரிஷபம் ராசி :

 

இதுநாள் வரையில் தடை, தாமதம் ஏற்பட்ட சுபநிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும்.
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.தைரியம் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள்.
தொழிலில் உடன் இருப்பவர்களோடு இணக்கமாக பணியாற்றுவீர்கள்.புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
புதிய நபர்களின் தொடர்புகள் விரிவடையும். சகோதர உறவுகள் மேம்படும். புதிய ஆபரணம் பொருட்கள் வாங்குவீர்கள்.
வீட்டிற்கு நிறைய செலவுகள் செய்வீர்கள். சிலருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரித்து காணப்படும்.


மனைவி உங்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார். வீட்டில் உள்ளவர்களின் பேச்சு,ஆலோசனையை விட வெளிநபர்களை அதிகம் நம்புவீர்கள்.


பெற்றோர் உடல்நலனில் அதிக அக்கறை தேவை. எதிலும் தைரியம் கூடும்.


வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். இதுவரை நிறுவனத்தில் தடைபட்டு கொண்டிருந்த பதவி உயர்வு கிட்டும், சம்பள உயர்வு கூடி வரும்,


மேலதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும், நிறுவனத்தில் இழந்த கௌரவம் கூடும், உங்கள் மேல் இருந்த வம்பு வழக்கு நீங்கும். உங்கள் மேல் நிறுவனம் தொடர்ந்து இருந்த வழக்கில் உங்களுக்கு வெற்றி சாதகமாகும்.


தொழில் செய்வோர், வியாபரிகளுக்கு இதுவரை இருந்து வந்த முடக்கம் மாறும். தொழில் வியாபாரம் மெல்லமெல்ல பழைய நிலையை அடையும், தடைகள் நீங்கும், தொழில் விரிவாக்கம் செய்யும் வாய்ப்புண்டாகும், அரசு அதிகாரிகள் தொந்தரவு குறையும், தொழில்/வியாபர நிறுவனத்தின் மேல் இருந்த வழக்கு நீங்கும்
முயற்சிகள் வெற்றி பெறும், கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்
உடன்பிறந்தோர்கள் மூலம் பிரச்சினைகள் தீர்வு கிட்டும்
காது, கழுத்து, தொண்டை சம்பந்தமாக இருந்து வந்த நோய் நீங்கும்.


நெருங்கிய உறவினர், பந்துஜன விரோதம் உண்டாகும்
உங்களிடம் வேலைபார்க்கும் ஆட்கள் மூலம் இருந்து வந்த பிரச்சினை / வேலையை விட்டு போனோர் திரும்பி வருவார்கள்/ ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினை தீரும்.


தந்தைவழி சொத்தில் பிரச்சினை உண்டாகும்.
சந்தான பாக்கியம், வம்ச விருத்தி தடை படும்.
கடல்கடந்து வெளிநாடு சொல்ல நினைப்பவர்களுக்கு தடை தாமதம் ஏற்படும்.


தம்பியின் மனைவி அல்லது தங்கையின் கணவர் ஆகியோரிடம் சண்டை சச்சரவு ஏற்படும்.

 


பரிகாரம் :


எல்லா மாதமும் ஜென்ம நட்சத்திரம் அன்று கொத்தமல்லியை ஆற்றில் விடவும்.


தினந்தோறும் அருகம்புல் மாலையுடன் விநாயகர் வழிபாடு மற்றும் ஒரு முறை செவ்வாய்கிழமை பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் அர்ச்சனை வழிபாடு செய்யலாம்.


காளாஹஸ்தி சென்று அர்ச்சனை செய்து வழிபட சிறப்பு
திருப்பாம்புரம் சென்று ராகு கேது வழிபாடு செய்து வரவும்.


======================================== 

மிதுனம் ராசி :

 

குடும்பத்தில் சில பிரச்சினைகள் தோன்றி மறையும். குடும்பத்தை விட்டு பிரியும் சூழ்நிலை உருவாகும்.வரவு செலவுகள் இழுபறி உண்டாகி நீங்கும். சுப செலவும் சில அசுப செலவும் மாறி மாறி ஏற்படும்.உடல் உபாதைகளும் ஏற்படும்.


வாகன பயணத்தில் கவனம் தேவை. உறவினர் நண்பர்களிடம் அளவோடு பழகவும். படிப்பு விஷயத்தில் கவனம் சிதறும்.தொழில் ஒரளவு நன்றாக இருக்கும். மொத்தத்தில் பேச்சை குறைத்தால் நன்மை.


கண், மூக்கு, நகங்கள் சம்பந்தமான தொந்தரவு உண்டாகும். 


சிறுநீரக கோளறு உண்டாகும். ஏற்கனேவே இருக்கும் வியாதிகள் அதிகரிக்கும், ஆபரேஷன் / உறுப்புகளை துண்டித்தல் போன்றவை உண்டாகும்.


யாருக்கும் வாக்கு அளிக்க வேண்டாம்....கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் திண்டாட வேண்டி வரும்.
வரன் அமைவதில் காலதாமதம் ஏற்படும். 

விஷபாதிப்புகள் அடிக்கடி ஏற்படும் எனவே வெளியில் சாப்பிடுவது சுகாதாரமற்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.மலசிக்கலை ஏற்படுத்தும்.


 ஆண்களுக்கு பிறப்புறுப்பில் மாற்றம் உண்டாகும், பெண்களுக்கு புண், கட்டி, நோய் உண்டாகும்.


 வீண் அலைச்சல், காரிய தடை, பண இழப்பு , எதிர்பாராத நஷ்டம், தொடர்ச்சியான தோல்வி உண்டாகும்.


 கணவன் மனைவி சண்டை அதிகரிக்கும்.


 அச்சம், மனபயம், மனவேதனை, சோம்பல், தற்கொலை எண்ணம் அதிகரிக்கும்.


 வட்டி பணம், அசல் வசூல் ஆவதில் தடை, பிரச்சினை உண்டாகும்.


 லஞ்ச லாவன்ய வழக்கில் சிக்க நேரிடும் / சிறைசெல்ல வாய்ப்புண்டு, அரசு தண்டனை உண்டாகும்.


 மனைவியின் பேரில் உள்ள தனம் நாசம் ஆகும்.

 


பரிகாரம் :


ஜென்ம நட்சத்திரம் அன்று வயதான ஆசிரியர்களுக்கு வஸ்திர தானம் செய்யவும்.


தினந்தோறும் அருகம்புல் மாலையுடன் விநாயகர் வழிபாடு நல்லது .

காளாஹஸ்தி சென்று அர்ச்சனை செய்து வழிபட சிறப்பு


 ஞாயிற்றுக்கிழமை ராகுவேளை மாலை 4:30 to 6:00 க்குள் பத்ரகாளிக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சிறப்பு
பசுக்களுக்கு அருகம்புல் வாங்கி தர சிறப்பு

 

 

 

 

 

 

 

 

 

 

 

நேரம் : 05:31 PM

Label

    அண்மைய செய்திகள் பெற

    பார்வை

     

    தற்போதைய பார்வையாளர்கள்