முகநூல் விருப்பம்

மந்திரங்கள்

ராகு மற்றும் சனி கிரக சிக்கல்களில் இருந்து விடுபட வராஹி வழிபாடு

பதிவு நாள் August 06, 2016

 
 
 
பொதுவாக ராகு கேது பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி, ஏழரை சனி அல்லது சனி திசை நடப்பவர்கள் கீழ்க்கண்ட வாராஹி அன்னையின் திருநாமங்களை கூறி தினசரி வழிபட்டு வர, குறிப்பிட்ட கிரகங்களால் ஏற்படும் தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகும்.
 
தாய் வராஹி, எமனின் ஆற்றலை பிரதிநிதித்துவம் செய்பவர் ஆவார். அந்தந்த ராசியினர் அந்தந்த மந்திரங்களை கூறி வரலாம்.
 
பொதுவாக கீழ்க்கண்ட 12 பெயர்களுடன் சேர்த்து 'ஓம் ஸ்ரீ நாராயணி நமோஸ்துதே ' என அனைத்தையும் கூறி முடிப்பது சால சிறந்தது.
 
தாயின் மூக்கின் நுனியை கண் திறந்து தியானித்து கீழ்க்கண்ட மந்திரங்கள் கூறி வர துன்பங்கள் பறந்தோடும்.


 
மேஷம் : ஓம் பஞ்சமி வராஹியை நமஹ்
ரிஷபம் : ஓம் தண்டினி வராஹியை நமஹ்
மிதுனம்: ஓம் சங்கேத வராஹியை நமஹ்
கடகம் : ஓம் சமயேஷ்வரி வராஹியை நமஹ்
சிம்மம் : ஓம் சமய சங்கேத வராஹியை நமஹ்
கன்னி : ஓம் மந்த்ர வராஹியை நமஹ்
துலாம் : ஓம் போத்ரிணி வராஹியை நமஹ்
விருச்சிகம் : ஓம் சிவதூதி வராஹியை நமஹ்
தனுசு : ஓம் வார்த்தாளி வராஹியை நமஹ்
மகரம் : ஓம் மஹாசேனா வராஹியை நமஹ்
கும்பம் : ஓம் ஆக்ன்ய சக்ரேஷ்வரி வராஹியை நமஹ்
மீனம் : ஓம் அரிக்னி வராஹியை நமஹ்


 

 
" ஓம் ஸ்ரீ நாராயணி நமோஸ்துதே "
 
 
 
 
 
 
 
 

நேரம் : 07:19 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்