முகநூல் விருப்பம்

பரிகாரம்

பணம் பெருக்கும் பரிகாரம்...

பதிவு நாள் January 10, 2017

 

Image result for சுக்கிரன்

 



 

அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமை வரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும்.

 

2. கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து வணங்கத் தொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.

 

3. செவ்வாய்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர் முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம்பெருகும்.

 

4. செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபட பணம் கிடைக்கும்.

 

5. கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக் கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்து பணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.

 

6. வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடு செய்ய செல்வம் சேரும்.

 

7. வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும்.

 

8. குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் பணம் வரும்.

 

9. தன பண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றி கிடைக்கும்.

 

10. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.

 

11. தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம் நிலையாக தங்கும்.

 

12. ஒத்தை பனை மர முனீஸ்வரனை ஏரளஞ்சில் தைலதீபமேற்றி வழிபட அன்றே பணம் கிடைக்கும்.

 

13. துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.

 

14. இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வு வாழ பணம் கிடைக்கும்.

 

15. தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திர சாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.

 

16. சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிகணக்கில் பணம் கிடைக்கும்.

 

17. ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்து அவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.

 

18. சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திடசெல்வம் சேரும்.

 

19. பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகலசெல்வங்களும் வசமாகும்.

 

20. பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.

 

21.ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம்,அடிக்கடி பார்க்க பணம் வரும்.

 

22.வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்.

 

23.ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும்.

 

24.ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம் ஆகர்ஷணமாகும்.

 

 

 

 

 

 

 

 

 

நேரம் : 07:18 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்