முகநூல் விருப்பம்

ஜோதிடம்

கோட்சார பலன்கள் அறியும் சூட்சுமம் 

பதிவு நாள் July 29, 2016

 
 
 


ஒரு சிலருக்கு கோட்சார கிரகங்கள் அசுப வீட்டுக்கு சென்றாலும் நன்மைகள் செய்யும் அது எவ்வாறு....?
உதாரணமாக, குரு 10ம் வீட்டிற்க்கு வந்தால் பதவி போய்விடும் என்றும் அல்லது பதவி உயர்வு கெடும் என்ற பொது பலன் இருக்கிறது. ஆனால் இந்த பலன்கள் எப்பொழுதும் அப்படியே நடந்து விடுவதில்லை. சிலருக்கு மிக நல்ல பலன்கள் நடைபெறுவதை அறிய முடிகிறது.


 
அதை கண்டறிய நமது பாரம்பரிய ஜோதிடம் சில வழிமுறைகளை கூறுகிறது.


 
"ஒரு கிரகம் பெயர்ச்சி அடையும் போது அன்று கோட்சார சந்திரன் நமது ஜென்ம ராசிக்கு எந்த இடத்தில இருக்கிறது என்பதை எண்ண வேண்டும் " 

அவ்வாறு எண்ணி வந்த தொகைப்படி கீழ்க்கண்ட பெயர்கள் கொண்டு பெயர்ச்சியாகும் கிரகங்களுக்கு பெயர்கள் கொடுக்கபடுகிறது.


 
1. எண்ணிவந்த தொகை 1, 6, 11 எனில் பெயர்ச்சியாகும் கிரகத்திற்கு பெயர் - ஸ்வர்ணமூர்த்தி (தங்கம்)


 
2. எண்ணிவந்த தொகை 2, 5, 9 எனில் பெயர்ச்சியாகும் கிரகத்திற்கு பெயர் - ரஜகத மூர்த்தி (வெள்ளி)


 
3. எண்ணிவந்த தொகை 3, 7, 10 எனில் பெயர்ச்சியாகும் கிரகத்திற்கு பெயர் - தாமிர மூர்த்தி (செம்பு)


 
4. எண்ணிவந்த தொகை 4, 8, 12 எனில் பெயர்ச்சியாகும் கிரகத்திற்கு பெயர் - உலோக மூர்த்தி (இரும்பு)


 
ஸ்வர்ண மூர்த்தி - மிக நற்பலன்கள் தருவார்

ரஜகத மூர்த்தி - சுப பலன்கள் தருவார் 

தாமிர மூர்த்தி - மத்திம பலன்களை தருவார் 

உலோக மூர்த்தி - ஓரளவு நற்பலன்கள் தருவார் எனலாம்.


 
உதாரணமாக, தற்போது குரு பெயர்ச்சி 2-ஆகஸ்ட் -2016 அன்று சந்திரன் மூலம் நட்சத்திரத்தில் தனுசு  ராசியில் சஞ்சரிப்பார்.
அது சிம்ம ராசிக்கு 5 இடமாக வரும்.
5 இடம் என்பது ரஜகத மூர்த்தியாகிறார். எனவே சிம்ம ராசி சுப பலன்களை பெறும்.
இதை மேலும் உறுதிபடுத்த தாரை பலம் கொண்டு அறிதல் முக்கியம்.
ஜென்ம நட்சத்திரத்துக்கு பெயர்ச்சி நிகழும் அன்று சந்திரன் இருக்கும் நட்சத்திர வித்தியாசம் கண்டு தாரை பலம் அறியலாம்.
இதில் நல்ல தாரை பலம் கிடைத்து உலோக மூர்த்தி வந்தால் கெடுபலன்கள் பெரிதாக இருக்காது இருந்தாலும் தெரியாது.


 
தாரை பல விவரங்கள்
======================
1. ஜென்ம தாரை- உறுதியும் வெற்றியும் தரும்.
2. சம்பத்து தாரை-சர்வசம்பத்துகளை தரும்
3. விபத்து தாரை-அசம்பாவிதம் உண்டாகும்.
4. சேமத்தாரை- உடல் மற்றும் மனநலம் தரும்.
5. பிரத்தயக்கு தாரை- சிக்கல்கள் தரும்.
6. சாதக தாரை-செய்யும் காரியம் சாதகமாக அமையும்.
7. வதைத்தாரை- துன்பம் தரும்.
8. மித்திர தாரை-தெய்வகாரியம் செய்யலாம்.
9. பரம மித்ர தாரை- சுபநிகழ்ச்சிகள் செய்யலாம்.
 


 

ஆகஸ்ட் 2 அன்று மூலத்தில் தனுசு ராசியில் சந்திரன் இருப்பார். அது கோட்சார சந்திரன் இருக்கும் இடம். ஒருவரின் ஜென்ம ராசி சிம்மம் எனில் சிம்மத்தில் இருந்து தனுசு 5 இடம் . 

 

மேஷம் , விருச்சிகம் , சிம்மம் - ரஜகதம்

 

ரிஷபம் , கன்னி , மகரம் - உலோகம்

 

மிதுனம் , துலாம்,  மீனம் - தாமிரம்

 

கடகம் , தனுசு , கும்பம் - ஸ்வர்ணம்

 

  

 

 
 
 
 
 
 

நேரம் : 07:59 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்