முகநூல் விருப்பம்

ஜோதிடம்

குருப்பெயர்ச்சி பலன்கள் எப்படி...!!!!

பதிவு நாள் July 29, 2016

 
 
 
குரு சந்திர லக்கினத்துக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் கோட்சார ரீதியாக சஞ்சாரம் செய்யும் போது ஏற்படும் பலன்கள்
 
நவகிரகங்களில் சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு பகவான். குரு தனத்திற்கும் புத்திரம், பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வீக புண்ணியம் போன்றவைகளுக்கு காரகன் ஆவார்.
 
குரு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது அல்ல, குரு நிற்கும் இடம் பாழ், பார்க்கும் இடம் கோடி புண்ணியம் ஆகும். குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்வார். 


 
பொதுவாக எவ்வளவு தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் தோஷம் விலகி விடும் என்பது சான்றோர்களின் கருத்தாகும் .
 
கோட்சார ரீதியாக ஒரு ராசியில் 1 வருடம் தங்கும் குரு பகவான் ஜென்ம ராசிக்கு, 2, 5, 7, 9,11 ஆகிய பாவங்களில் சஞ்சரிக்கும் போது நற்பலனை வழங்குவார்.
குரு தனுசு மீனத்தில் ஆட்சியும், கடகத்தில் உச்சமும், மகரத்தில் நீசமும் பெறுவார். குருவிற்கு சூரியன், சந்திரன் செவ்வாய் நண்பர்கள். புதன், சுக்கிரன் பகைவர். சனி,ராகு, கேது சமம்.
 
பல்வேறு நற்பலனை வழங்கும் யோகங்கள் குரு கிரக சேர்க்கை போது உண்டாக்குவார்.
 
11 ம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் எந்த கிரகமாக இருந்தாலும் சுப பலனையே கொடுக்கும் .
 
 பலன்கள் அனைத்தும் பொது பலன்களே ., ஜாதக ரீதியாக ஒவ்வொருவர்க்கும் வேறுபடும் ., தனித்தோ கிரக சேர்க்கையாலோ பலன்கள் மாறுபடும் .,


 
==========================================


 
குரு ஜென்ம லக்கினத்தில் சஞ்சரிக்கும் போது .,
 
அவனது செல்வங்கள் விரயம் ஆகுகின்றன ,அல்லது ஜாதகனுக்கு கௌரவ குறைவு ஏற்படுத்துகிறது .,
அத்துடன் வயிற்று வலியோ - மார்பு வலியோ ஏற்படக் கூடும் ,வெளியில் அலைந்து திரியும் நிலை ஏற்படும் ,உடல் நிலை பாதிப்பு, தேவையற்ற இடையூறு உண்டாகும்.
 
சந்திர லக்கினத்துக்கு குரு 2ல் சஞ்சரிக்கும் காலம் .,
 
தன ஸ்தானமான 2ல் குரு சஞ்சாரம் செய்யும் காலம் தாராள தன வரவு, செல்வ பெருக்கு உண்டாகும் ,நல்ல பேச்சு ஆற்றல், வசதி, வாய்ப்பு, குடும்ப வாழ்வில் ஒற்றுமை,நல்ல கண் பார்வை உண்டாகும்.. பகைவர்களே இருக்க மாட்டார்கள் ,தன் மனைவி மக்களோடு மிகவும் இன்பமாய் வாழ்வு கழியும் .,
 
குரு 3ல் சஞ்சரிக்கும் போது.,
 
ஜாதகனுடைய உத்தியோகத்துக்கே தீங்கு ஆபத்து வரலாம் ,தன் வீடு வாசல்களை இழந்து .ஊரைவிட்டே வெளியேற நேரலாம் ,ஜாதகனுடைய கௌரவம் குன்றும் ,எடுத்த காரியங்களில் எல்லாம் இடையுறு தடைகள் ஏற்படும் ,உள்ளம் மிகவும் வேதனை படும் .சுமாரான நேரமாக இருக்கும் .,
 
குரு 4ல் சஞ்சரிக்கும் போது.,
 
ஜாதகனுடைய உறவினர்களும் நண்பர்களும் பகைவர்களாக மாறுவர் ,அவர்களாலும் மற்றவர்களாலும் ஏற்படும் துன்பங்களால் ஜாதகன் வீட்டில் இருந்தாலும் -காட்டில் இருந்தாலும் சுகத்தை அடைய விட மாட்டார்-சுக வாழ்வு பாதிப்பு, அசையா சொத்து அமைய தடை உண்டாகும்.
 
குரு 5ல் சஞ்சரிக்கும் போது.,
 
ஜாத்கனுக்கோ வேறு குடும்ப உறுப்பினருக்கோ திருமணம் முதலிய சுபகாரியம் நடைபெறும் ,புதிய வாகன வசதிகள் ஏற்படும் ,ஜாதகனுக்கு கீழே வேலையாட்களை வைத்து கொள்ளும் நிலை ஏற்படும் ,புதிய வீடுகளை கட்டும் வாய்ப்பு ,ஆடை ஆபரண சேர்க்கை ,கல்வியில் தேர்ச்சி ,உள்ளத்தில் ஊக்கம் இருக்கும் ,ஏராளமான செல்வம் சேர்த்து வசதியாக வாழ வழி வகை ஏற்படுதல் ,நல்ல அறிவாற்றல், பரந்த மனப்பான்மை, பொது காரியம், சமூக நல பணியில் ஈடுபாடு, சிறப்பான குடும்ப வாழ்வு, பெரியோர் ஆசி உண்டாகும்.. சிறப்பான புத்திர பாக்கியம் வசதி வாய்ப்பு உண்டாகும்.இன்பமாய் வாழ்வான் .
 
குரு 6ல் சஞ்சரிக்கும் போது.,
 
ஜாதகனுக்கு அவன் மனைவி கூட எதிரியாக மாறுவாள் ,எவ்வளவு இன்பமான சூழ்நிலையும் ஜாதகனுக்கு துன்பமாகவே இருக்கும் ,வயிறு கோளாறு, பெரியவர்கள் சாபத்தால் வாழ்வில் மன குறை உண்டாகும்.
 
குரு 7ல் சஞ்சரிக்கும் போது.,
 
ஜாதகனுடைய வாழ்கையில் எல்லா இன்பங்களும் பெருகுகின்றன ,அவனுடைய அறிவில் தெளிவும் ,பேச்சில் இனிமையும் ,மன வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்கும். நல்ல அழகான மனைவி, சிறப்பான குடும்ப வாழ்வு, வசதியான பெண் மனைவியாக வரும் யோகம் உண்டாகும். ஏராளமான செலவ பெருக்கு உண்டாகும் ,


 
சந்திர லக்கினமும் ஜென்ம லக்கினமும் ஒரே ராசியாக சிலருக்கு இருக்கும் ,அந்த ராசி கடகம் -கன்னியாக இருந்து ஏழில் குரு சஞ்சரிக்க மேற்கூரிய சுப பலன் நடை பெற மாட்டா !
 
குரு 8ல் சஞ்சரிக்கும் போது.,
 
ஜாதகன் ஏதேனும் ஒரு வகையில் கட்டு பட நேரும் ,நோயும் கவலைகளும் ஏற்படும் ,பிரயாணங்களில் துன்பமும் ,உயிருக்கே ஆபத்து உண்டாவது போன்ற சூழ்நிலை ஏற்படும் எடுத்த காரியங்களில் வெற்றி இல்லாமை ,இடையுறு ஏற்படுதல் போன்றவை ,நோய், உடம்பு பாதிப்பு, சாபத்தால் மன அமைதி இல்லாத நிலை உண்டாகும்.
 
குரு 9ல் சஞ்சரிக்கும் போது.,
 
ஜாதகனுக்கு புதுமையான ஆற்றல்களும் அதிகாரங்களும் ஏற்படும் ,மகப்பேறு உண்டாகும் ,எடுத்த காரியம் அனைத்தும் விருப்பம் போல் நிறைவேறும் ,நிலபுலன் சேர்க்கை ஏற்படும் ,திருமணமோ அதை போன்ற இன்ப உறவுகளோ கைகூடும் .,தாராள தன சேர்க்கை, பூர்வீகத்தால் அனுகூலம், பெற்றோர் மூலம் அனுகூலம், தந்தைக்கு நீண்ட ஆயுள், பொது பணி, தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நல்ல பழக்க வழக்கம், பெரியோர்கள் ஆசி உண்டாகும்.
 
குரு 10ல் சஞ்சரிக்கும் போது.,
 
குரு பகவான் 10ம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் உயர் பதவிகள் பறி போகும் அமைப்பு பண நடமாட்டம் கொடுக்கல் வாங்கல் தொடர்புள்ள தொழிலில் சிக்கல் , கைப்பொருள் விரயமாகும் அமைப்பு, நேர்மையான வழியில் இருந்து பிரளும் நிலை, பொது காரியங்களில் சங்கடம் நேரும் ..
 
குரு 11ல் சஞ்சரிக்கும் போது.,
 
குரு 11ல் சஞ்சரிக்கும் காலம் ஜாதகனுக்கு முன்பு பறி போன பதவி திரும்ப கிடைத்தல் ,இழந்து போன பணம் திரும்ப கைகூடும் , தாராள தன வரவு, நல்ல அறிவாற்றல், வசதி வாய்ப்பு, உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் சமுதாயத்தில் பெயர் புகழ் கௌரவம் உண்டாகும். புத்திர வழியில் அனுகூலம், சிறப்பான குடும்ப வாழ்வு, திடீர் அதிர்ஷ்டம், ஸ்பெகுலேஷன் மூலம் ஏற்றம் ஏற்படும்.
 
குரு 12ல் சஞ்சரிக்கும் போது.,
 
குரு 12ல் சஞ்சரிக்கும் காலம் ஜாதகன் வழி தவறி செல்லுதல் அதனால் ஏற்படும் துன்பங்களுக்கு ஆளாவான் ,பண வரவில் இடையூறு, வீண் செலவுகள், சுப காரியங்களுக்கு செலவு செய்யும் நிலை உண்டாகும். நல்ல உறக்கம் நிம்மதியான இல்லற வாழ்வு இருக்காது , கண் பார்வை மங்குதல் உண்டாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நேரம் : 07:27 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்