முகநூல் விருப்பம்

ஜோதிடம்

மீனம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2016 - 2017

பதிவு நாள் June 26, 2016

 
முழு முதல் சுப கிரககமான ஸ்ரீ குரு பகவான் மங்களகரமான துர்முகி வருடம் ஆடி மாதம் 18 ம் தேதி [ 2-8-2016 ] அன்று செவ்வாய் கிழமை காலை மணி 09.27 க்கு சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பிரவேசம் ஆகின்றார்..
 
கன்னி ராசியில் 1-6-2017 வரை சஞ்சரித்து பின் மாலை 4-24 PM க்கு துலாம் ராசிக்குள் பிரவேசிப்பார்.
 
இந்தக் கோச்சாரப் பலன்கள் எல்லாம் நல்ல தசாபுத்திகள் நடந்தால் மட்டும் தான் நல்ல பலங்களாக கிடைக்கும்.
 
அதே போல குரு சுயவர்க்கத்தில் குறிப்பிட்ட ராசிக் கட்டத்தில்  உள்ள தனது பரல்களை வைத்து தான்   பலன் கொடுப்பார்.
அவருக்கு சுய வர்க்கத்தில் எட்டுப் பரல்கள் இருந்தாலும்சுற்றி வரும் இடத்தில் தன்னுடைய கட்டத்தில் உள்ள பரல்களுக்குத் தக்கபடி தான் பலன் தருவார்.


 
 கீழே கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் பொது பலன்களே..
 
இவை எல்லாம் ஜனன கால தசா புத்திகளின் இருப்பை  பொருத்து மாறுபடும் .......
நல்ல தசா புத்தி நடந்தாலும்அஷ்டக வர்க்கத்தில் நல்ல பரல்களை கொண்டிருந்தாலும் பலன்கள் வேறுபடும் என்பதை நினைவில் கொண்டு மேலே தொடரவும்.
 
 
 மீன ராசிக்காரர்களுக்கு  7 ம் இடத்து குரு (களத்திர குரு) பலன் 100%


 
- அனைத்திலும் நல்ல பலன்களே நடக்கும்.
புதிய முயற்ச்சிகள் வெற்றியை தரும்.
விரும்பிய இடம் மாற்றம், பதவி உயர்வுடன் நல்ல சம்பளத்தோடு அமையும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்.
வெளிநாட்டு வேலை மற்றும் கூட்டு தொழிலில் நன்மை உண்டாகும்.
புதிய சூழலில் வாழும் நிலை ஏற்படும்.
திருமணம் கைக்கூடி வரும்.
கணவன் மனைவியிடையே நல்ல புரிதல் இருக்கும்.
நண்பர்கள் மூலம் பல உதவிகள் கிடைக்கும்.
புதிய நட்பு வட்டாரங்கள் உருவாகும்.
பழைய பாக்கிகள் வசூல் ஆகும்.
தாராள பணப்புழக்கம் ஏற்படும்.
கடன் சுமைகள் குறையும்.
புதிய வீடு / மனை / நகைகள் வாங்கும் யோகம் ஏற்படும்.
குழந்தை பாக்கியம் உண்டாகும்.
புனித யாத்திரை சென்று வருவீர்கள்.
பூர்வ புண்ணிய சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.
 
குரு பார்க்கும் இடங்கள்: 5 ம் பார்வையாக 11 ம் இடம் செய்தொழில் / வேலையில் வருமானம் கணிசமாக உயரும். வழக்கு விவகாரங்கள் வெற்றியை தரும்.


 
7 ம் பார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் மனமும் உடலும் தெளிவு பெரும். எதிர்காலத்திற்குத் தேவையான விசயங்களைத் திறம்பட திட்டமிட்டு செவ்வனே முடிப்பீர்கள்.


 
9 ம் பார்வையாக 3 ம் இடம் புதிய முயற்ச்சிகள் வெற்றி பெரும். உங்கள் புகழ் திக்கெங்கும் பரவும். வெற்றிகள்  பல குவியும்.
 
பரிகாரம்: மயிலை ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (கபாலீஸ்வரர் கோயில்) குரு பகவானை வழிபடவும்.
 
 
 
 
 
 

நேரம் : 11:41 AM

ஜோதிடம்

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்