முகநூல் விருப்பம்

ஜோதிடம்

கும்பம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2016 - 2017

பதிவு நாள் June 26, 2016

 
 
முழு முதல் சுப கிரககமான ஸ்ரீ குரு பகவான் மங்களகரமான துர்முகி வருடம் ஆடி மாதம் 18 ம் தேதி [ 2-8-2016 ] அன்று செவ்வாய் கிழமை காலை மணி 09.27 க்கு சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பிரவேசம் ஆகின்றார்..
 
கன்னி ராசியில் 1-6-2017 வரை சஞ்சரித்து பின் மாலை 4-24 PM க்கு துலாம் ராசிக்குள் பிரவேசிப்பார்.
 
இந்தக் கோச்சாரப் பலன்கள் எல்லாம் நல்ல தசாபுத்திகள் நடந்தால் மட்டும் தான் நல்ல பலங்களாக கிடைக்கும்.
 
அதே போல குரு சுயவர்க்கத்தில் குறிப்பிட்ட ராசிக் கட்டத்தில்  உள்ள தனது பரல்களை வைத்து தான்   பலன் கொடுப்பார்.
அவருக்கு சுய வர்க்கத்தில் எட்டுப் பரல்கள் இருந்தாலும்சுற்றி வரும் இடத்தில் தன்னுடைய கட்டத்தில் உள்ள பரல்களுக்குத் தக்கபடி தான் பலன் தருவார்.


 
 கீழே கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் பொது பலன்களே..
 
இவை எல்லாம் ஜனன கால தசா புத்திகளின் இருப்பை  பொருத்து மாறுபடும் .......
நல்ல தசா புத்தி நடந்தாலும்அஷ்டக வர்க்கத்தில் நல்ல பரல்களை கொண்டிருந்தாலும் பலன்கள் வேறுபடும் என்பதை நினைவில் கொண்டு மேலே தொடரவும்.
 
 
கும்ப ராசிக்காரர்களுக்கு    8 ம் இடத்து அஷ்டம குரு பலன் 35% 


 
- அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் குரு என்பது ஜோதிடத்தில் பழமொழி.
எல்லா விசயங்களிலும் தடைகளையும், தாமதங்களையும் உருவாக்குவார்.
உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவை.
குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தலை தூக்கும்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிணக்கு உண்டாகும்.
தொழிலில் புதிய முயற்ச்சிகள் தோல்வியை தரும். வேலை பளு அதிகாரிக்கும்.
எதிர்பார்த்த சம்பள உயர்வும் பதவி உயர்வும் தள்ளி போகும்.
கணவன் மனைவி இடையே கருத்து ஒற்றுமை இராது.
பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்.
தரம் தாழ்ந்தவர்களின் சேர்கையால் அவப்பெயர் எடுக்க நேரிடலாம்.
அலைச்சல் அதிகரிக்கும்.
புதிதாக பழகும் நபர்களிடம் கவனம் தேவை.
எதிலும் விட்டுகொடுத்து போவது நல்லது.
உஷ்ணம், பித்தம், மயக்கம், சளி, ஜீரண உறுப்புகள் பாதிப்பு போன்ற உடல் உபாதைகள் வரலாம்.
பகைவர்கள், எதிரிகள் பலம் பெரும் காலம்.
எதிலும் எச்சரிக்கை தேவை.
வீடு மாறும் சூழ்நிலை உருவாகும்.
கொடுத்த கடன் திரும்பி வருவது கடினம்.
கடன் வாங்கினாலும் திரும்ப கொடுப்பது கடினம்.
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவதை தவிர்ப்பது நல்லது.
திருமணம் தடைப்படும்.
 
குரு பார்க்கும் இடங்கள்: 5 ம் பார்வையாக 12 ம் இடம் சுபச்செலவுகளில் பணம் கரையும். வெளியூர், வெளிநாடு சென்று பனி புரியும்/ படிக்கும் யோகம் உண்டு.


 
7 ம் பார்வையாக 2 ம் இடம் பணப்புலக்கத்திற்க்கு குறைவிருக்காது. ஆனால் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவ பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.


 
9 ம் பார்வையாக 4 ம் இடம் வீடு மனை நிலம் அசையா சொத்துக்களின் வகையில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக அகன்று அதிலிருந்து ஓரளவு வருமானம் உண்டு.
 
பரிகாரம்: திருவொற்றியூர் குரு பகவானை வழிபடவும்.
 
 
 
 

நேரம் : 11:23 AM

ஜோதிடம்

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்