முகநூல் விருப்பம்

ஜோதிடம்

தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017

பதிவு நாள் June 26, 2016

 
 
முழு முதல் சுப கிரககமான ஸ்ரீ குரு பகவான் மங்களகரமான துர்முகி வருடம் ஆடி மாதம் 18 ம் தேதி [ 2-8-2016 ] அன்று செவ்வாய் கிழமை காலை மணி 09.27 க்கு சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பிரவேசம் ஆகின்றார்..
 
கன்னி ராசியில் 1-6-2017 வரை சஞ்சரித்து பின் மாலை 4-24 PM க்கு துலாம் ராசிக்குள் பிரவேசிப்பார்.
 
இந்தக் கோச்சாரப் பலன்கள் எல்லாம் நல்ல தசாபுத்திகள் நடந்தால் மட்டும் தான் நல்ல பலங்களாக கிடைக்கும்.
 
அதே போல குரு சுயவர்க்கத்தில் குறிப்பிட்ட ராசிக் கட்டத்தில்  உள்ள தனது பரல்களை வைத்து தான்   பலன் கொடுப்பார்.
அவருக்கு சுய வர்க்கத்தில் எட்டுப் பரல்கள் இருந்தாலும்சுற்றி வரும் இடத்தில் தன்னுடைய கட்டத்தில் உள்ள பரல்களுக்குத் தக்கபடி தான் பலன் தருவார்.


 
 கீழே கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் பொது பலன்களே..
 
இவை எல்லாம் ஜனன கால தசா புத்திகளின் இருப்பை  பொருத்து மாறுபடும் .......
நல்ல தசா புத்தி நடந்தாலும்அஷ்டக வர்க்கத்தில் நல்ல பரல்களை கொண்டிருந்தாலும் பலன்கள் வேறுபடும் என்பதை நினைவில் கொண்டு மேலே தொடரவும்.


 
தனுசு ராசிக்காரர்களுக்கு  10 ம் இடத்து குரு (ஜீவன குரு) பலன் 55%


 
 பதவியை கெடுக்கும்.
தொழில் செய்யும் இடம் மாற்றம் உண்டாகும்.
தொழிலில் இடர்பாடுகளை, தடைகளை உருவாக்குவார்.
நன்மையான பலன்களை எதிர்பார்ப்பது ஆகாது.
வேலை பளு கூடும்.
வியாதிகள் கட்டுக்குள் இருக்கும்.
புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைக்கும் நிலை ஏற்ப்படும்.
எதிரிகள் பின் வாங்குவார்கள்.
வீண் அலைச்சல் அதிகரிக்கும்.
வியாபாரம் மந்த கதியில் இருக்கும்.
சரக்கு விற்காமல் தேங்கும்.
புதிய வாடிக்கையாளர்களை கவர்வது எளிதல்ல.
கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருக்கும்.
விவசாயக் கடன் கூடும்.
தேவையில்லாத வெளியூர் பயணம்  ஏற்படும்.
அனாவசிய செலவுகள் அதிகரிக்கும்.
வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
திருமணம் தாமதம் ஆகும்.
பித்தம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படும்.
வெளி இடங்களில் உணவு அருந்துவதை தவிர்ப்பது நல்லது.
 
குரு பார்க்கும் இடங்கள்: 5 ம் பார்வையாக 2 ம் இடம் தேவைக்கேற்ற தன வரவு இருக்கும். உங்கள் பேச்சுக்கு சமுதாயத்தில் மரியாதை இருக்கும்.


 
7 ம் பார்வையாக 4 ம் இடம் உடல் நலம் மேம்படும். நிலம் மற்றும் கட்டிடம் சார்ந்த வகைகளில் வருமானம் அதிகரிக்கும்.


 
9 ம் பார்வையாக 6 ம் இடம் கடன், நோய், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் குரு பார்வையால் நிவர்த்தி அடையும்.
 
பரிகாரம்: உத்தமர்கோவில் சென்று குரு பகவானை தரிசிக்கவும்.
 
 
 
 
 
 

நேரம் : 11:00 AM

ஜோதிடம்

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்