முகநூல் விருப்பம்

ஜோதிடம்

விருச்சிகம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2016 -2017

பதிவு நாள் June 26, 2016

 
 
முழு முதல் சுப கிரககமான ஸ்ரீ குரு பகவான் மங்களகரமான துர்முகி வருடம் ஆடி மாதம் 18 ம் தேதி [ 2-8-2016 ] அன்று செவ்வாய் கிழமை காலை மணி 09.27 க்கு சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பிரவேசம் ஆகின்றார்..
 
கன்னி ராசியில் 1-6-2017 வரை சஞ்சரித்து பின் மாலை 4-24 PM க்கு துலாம் ராசிக்குள் பிரவேசிப்பார்.
 
இந்தக் கோச்சாரப் பலன்கள் எல்லாம் நல்ல தசாபுத்திகள் நடந்தால் மட்டும் தான் நல்ல பலங்களாக கிடைக்கும்.
 
அதே போல குரு சுயவர்க்கத்தில் குறிப்பிட்ட ராசிக் கட்டத்தில்  உள்ள தனது பரல்களை வைத்து தான்   பலன் கொடுப்பார்.
அவருக்கு சுய வர்க்கத்தில் எட்டுப் பரல்கள் இருந்தாலும்சுற்றி வரும் இடத்தில் தன்னுடைய கட்டத்தில் உள்ள பரல்களுக்குத் தக்கபடி தான் பலன் தருவார்.


 
 கீழே கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் பொது பலன்களே..
 
இவை எல்லாம் ஜனன கால தசா புத்திகளின் இருப்பை  பொருத்து மாறுபடும் .......
நல்ல தசா புத்தி நடந்தாலும்அஷ்டக வர்க்கத்தில் நல்ல பரல்களை கொண்டிருந்தாலும் பலன்கள் வேறுபடும் என்பதை நினைவில் கொண்டு மேலே தொடரவும்.
 
விருட்சிக ராசிக்காரர்களுக்கு  11 ம் இடத்து குரு (சுப லாப குரு) பலன் 95%
 பொன்னான வாய்ப்புகளை அள்ளி வழங்கும் காலம்.
அத்தியாவசிய மற்றும் ஆடம்பர தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.
பொருளாதாரம் கணிசமான அளவில் உயரும்.
பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
தடை பட்ட திருமணம் இனிதாக நிறைவேறும்.
பழைய பாக்கிகள் வசூல் ஆகும்.
தொழிலில் செய்த தவறுகளை சரி செய்து முன்னேற்றம் காண்பீர்கள்.
தொழில் வளர்ச்சி அபரிதமாக இருக்கும்.
தாரள பணப்புழக்கம் உண்டு.
வெளிநாட்டு வேலைக்கான யோகம் உண்டு.
எதிர்பாராத பதவி உயர்வு நிச்சயம்.
புதுமனை புகுவீர்கள்.
குழந்தை பாக்கியம் ஏற்படும்.
நண்பர்கள், உறவினர்கள் உதவி தாராளமாக கிடைக்கும்.
கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.
தெய்வ அனுகூலம் உண்டு.
அரசு வகை விசயங்களில் அனுசரித்து போவது நல்லது.
நெருப்பு சம்பந்தப்பட்ட வேலை / விசயங்களில் கவனம் தேவை.
 
 குரு பார்க்கும் இடங்கள்: 5 ம் பார்வையாக 3 ம் இடம் தைரியம் வீரியம் தன்னம்பிக்கை கூடும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும்.
7 ம் பார்வையாக 5 ம் இடம் எதையும் சிந்தித்து செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். புலனாயும் நுண்ணறிவு வலுப்பெறும்.


 
9 ம் பார்வையாக 7 ம் இடம் மனைவி / தொழில் கூட்டாளிகள் / நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கூட்டு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
 
பரிகாரம்: புளியரை சென்று (தென்காசிக்கு அருகில்) குரு பகவானை தரிசிக்கவும்.
 
 
 
 
 
 

நேரம் : 10:50 AM

ஜோதிடம்

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்