முகநூல் விருப்பம்

ஜோதிடம்

துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017

பதிவு நாள் June 26, 2016

 
முழு முதல் சுப கிரககமான ஸ்ரீ குரு பகவான் மங்களகரமான துர்முகி வருடம் ஆடி மாதம் 18 ம் தேதி [ 2-8-2016 ] அன்று செவ்வாய் கிழமை காலை மணி 09.27 க்கு சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பிரவேசம் ஆகின்றார்..
 
கன்னி ராசியில் 1-6-2017 வரை சஞ்சரித்து பின் மாலை 4-24 PM க்கு துலாம் ராசிக்குள் பிரவேசிப்பார்.
 
இந்தக் கோச்சாரப் பலன்கள் எல்லாம் நல்ல தசாபுத்திகள் நடந்தால் மட்டும் தான் நல்ல பலங்களாக கிடைக்கும்.
 
அதே போல குரு சுயவர்க்கத்தில் குறிப்பிட்ட ராசிக் கட்டத்தில்  உள்ள தனது பரல்களை வைத்து தான்   பலன் கொடுப்பார்.
அவருக்கு சுய வர்க்கத்தில் எட்டுப் பரல்கள் இருந்தாலும்சுற்றி வரும் இடத்தில் தன்னுடைய கட்டத்தில் உள்ள பரல்களுக்குத் தக்கபடி தான் பலன் தருவார்.


 
 கீழே கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் பொது பலன்களே..
 
இவை எல்லாம் ஜனன கால தசா புத்திகளின் இருப்பை  பொருத்து மாறுபடும் .......
நல்ல தசா புத்தி நடந்தாலும்அஷ்டக வர்க்கத்தில் நல்ல பரல்களை கொண்டிருந்தாலும் பலன்கள் வேறுபடும் என்பதை நினைவில் கொண்டு மேலே தொடரவும்.
 
துலாம் ராசிக்காரர்களுக்கு  12 ம் இடத்து குரு (விரய குரு) பலன் 60% -
விரயம் பெரிய அளவிலும், நன்மை சிறிய அளவிலும் அமையும்.
கடன் பெற்று சுப காரியங்கள் செய்யும் நேரம்.
வெளியூர் / வெளி நாட்டுப் பிரயாணம் திருப்த்திகரமாக அமையும்.
புண்ணிய ஷேத்திராடன பாக்கியம் உண்டு.
உடல் நலம் சற்று மேம்படும்.
ஆனால் உஷ்ணம் சம்பத்தப்பட்ட நோய்க்கு வாய்ப்புண்டு.
தாயாரின் உடல்நிலை கட்டுக்குள் இருக்கும்.
வேலைப்பளு கூடும். மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகமாக இருக்கும்.
வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
தொழில் மற்றும் வியாபாரத்தில் பிரச்சினைகளை சந்திக்கும் கால கட்டம்.
பொருள் நாசம் ஏற்படும்.
பொருள் திருடு போகும் அபாயம் உண்டு.
புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.
கணவன் மனைவி குடும்பத்தாருடன் சுமுக உறவு இருக்காது.
பொருளாதார நிலை ஏற்றம் இறக்கமாக இருக்கும்.
தேவையில்லாத பிரச்சினைகள் தேடி வரும்.
படிக்கும் பிள்ளைகளுக்கு மறதி அதிகமாகும்.
வேலை இல்லாதவர்களுக்கு தை, மற்றும் மாசி மாதத்தில் நல்ல வேலை அமையும்.
வெளி நாட்டு தொடர்பான வேலை / படிப்பு விஷயங்களில் லாபம் உண்டு.
 
குரு பார்க்கும் இடங்கள்: 5 ம் பார்வையாக 4 ம் இடம் நிலம் / வீடு விற்பதாக இருந்தால் நல்ல விலைக்கு விற்க முடியும்.


 
7 ம் பார்வையாக 6 ம் இடம் கடன், நோய், எதிரிகள் தொல்லை ஓரளவு கட்டுக்குள் இருக்கும்.


 
9 ம் பார்வையாக 8 ம் இடம் வங்கி இருப்பில் மாற்றங்கள் வரும். அலைச்சல் அதிகமாகும். எளிதாக முடிய வேண்டிய காரியங்கள் கூட சிரமத்தின் பேரில் முடிக்க வேண்டி வரும்.
 
பரிகாரம்: சுருட்டப்பள்ளி குரு பகவானை தரிசிக்கவும்.
 
 
 
 
 
 
 
 
 
 

நேரம் : 10:43 AM

ஜோதிடம்

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்