முகநூல் விருப்பம்

ஜாதகம்

நீசம் அடையும் சப்த கோள்களின் பொதுப் பலன்கள்

பதிவு நாள் January 01, 2017 

 

 

Image result for சூரியன்
1. சூரியன் துலாத்தில் நீசம் பெரும் பலன் ;


ஜாதகன் சரீர பலம் இல்லாதவர்கள், வாய் , கண், இவைகளில் நோய் உள்ளவன் . துஷ்டன் , நோய் உள்ள குழந்தைகளை உடையவன் , பிறர் சொல்படி நடப்பான்.2 சந்திரன் விருச்சிகத்தில் நீசம் பெரும் பலன் ;


ஜாதகன் நீசர்களிடம் விருப்பம் உள்ளவன் , மனைவியிடம் காமம் இல்லாதவன் , அழகு இல்லாதவன் , சளி தொந்தரவுகள் உண்டு , அதிக துக்கம் உடையவன் .

 


3 . செவ்வாய் கடகத்தில் நீசம் பெரும் பலன் ;


மனைவியின் உடல் நலம் இல்லாமை , வாகனத்தில் கோளாறுகள் உண்டுபண்ணும் , வீண் விரயங்கள் , விசித்திரமான் கலகங்கள் ,எல்லா ஜனங்களால் பீடை உடையவன் . சளி தொந்தரவுகள் உண்டு 

 


4. புதன் மீனத்தில் நீசம் பெரும் பலன் ;


ஜாதகன் அதிக இழிவான செய்கைகள் கொண்டவன் , தன் வம்சத்தில் உள்ளவர்கள் மூலம் பாதிப்பு உடையவன் .மேலும் கெட்டவன் ,  கர்வம் ,தரித்திர யோகம் கொண்டவன் .

 


5 . குரு மகரத்தில் நீசம் பெரும் பலன் ;

 


ஜாதகன் நீச சுபாவம் உள்ளவன் , புத்திரர் ,பொருள் இல்லாதவன் , அல்பன் , நன்றி கெட்டவன் , அரசர் . திருடர்கள் மூலம் பாதிப்பு உண்டுபண்ணும் , குரு துரோகி , தேவர் , குருவை மதிக்காதவன் ஆவான் .6 .சுக்கிரன் கன்னியில் நீசம் பெரும் பலன் ;


ஜாதகன் வெட்கம் இல்லாமல் அடுத்த பெண்களை அடைவான் . நோய் உடைய தேகம் உடையவன் . பாபர் , துஷ்டர் , நீசர் சேர்க்கை உடையவன் .

 


7 . சனி மேஷத்தில் நீசம் பெரும் பலன் ;


ஜாதகன் ஆசாரம் , அனுஷ்டானம் , இல்லாதவன் , சூதாட்டம் மூலம் பொருள் இழப்பான் .குறைந்த கூலிக்கு வேலை 
செய்வான் .கெட்ட சக வாசம் உடையவன் .

 

 

 

 

 

 

 

நேரம் : 05:42 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்