முகநூல் விருப்பம்

கோவில்கள்

விஷ முறிவுக்கு அய்யப்பன் தரும் மருந்து

பதிவு நாள் November 18, 2015  


கேரள மாநிலம் அச்சன்கோவில் அய்யப்பன் ஆலயம் அடர்ந்த காட்டின் நடுவே உள்ளது.

அச்சன்கோவிலில் சுமார் 800 வீடுகள் உள்ளன.

ஊரை ஒட்டிய காட்டுப்பகுதியில் யானைக் கூட்டங்கள் அதிகம் உள்ளன.

கரடி, கடுவாய் போன்ற விலங்குகளும் உள்ளன.

ராஜநாகம் முதல் விஷப் பாம்புகளும், ஆபத்தான சிலந்திகள் உள்ளிட்ட ஜந்துக்களும் உள்ளன. 

இங்குள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். கூலித் தொழிலாளர்களும் உள்ளனர்.

 

காட்டில் அவர்கள் வேலை செய்யும் போது பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் அவர்களை கடிக்கும் வாய்ப்பு உள்ளது.

 

அப்படி கடிபட்டவர்களை உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதில்லை.

 

நேராக அச்சன்கோவில் ஆலயத்துக்கு கொண்டு வரப்படுகிறார்கள். 

நாள்தோறும் அபிஷேகத்தின் போது இக்கோவில் மூலவர் கையில் பிரசாத தீர்த்தம் கொடுக்கப்பட்டு இருக்கும்.

 

`பாம்புக்கடி` என்று வருகிறவர்களுக்கு உடனே மூலவர் பிரசாத தீர்த்தம் கொடுக்கப்படுகிறது.

 

பாம்பு கடிபட்ட இடத்திலும் தீர்த்தம் தடவப்படும்.

 

கட்டு எதுவும் போடப்படுவதில்லை.

 

அவர்கள் 3 முதல் 5 நாட்கள் கோவிலில் பத்தியம் இருப்பார்கள்.

 

இறைவனின் அருளால் வேறு எந்த மருந்தும் தேவைப்படாமல், விஷமுறிவு ஏற்பட்டு விடும். 

காலை முதல் இரவு வரை இக்கோவில் நடை திறந்து இருக்கும்.

 

நடை அடைக்கப்பட்டு நள்ளிரவு நேரத்தில் யாரையாவது பாம்பு கடித்துவிட்டால், அவரை கோவிலுக்கு கொண்டு வந்த உடன், அங்குள்ள கோவில் மணியை அடிப்பார்கள்.

 

உடனே பூசாரி வந்து நடையை திறந்து, இறைவன் பிரசாத தீர்த்தத்தை வழங்குவார். 

விஷப்பூச்சிகள் கடித்ததற்காக மாதத்தில் 4 முதல் 5 பேர் இவ்வாறு கொண்டு வரப்படுகிறார்கள்.

 

இறைவன் அருளால் இங்கு வரும் அனைவரும் உயிர் பிழைத்து உள்ளார்கள்.

 

பாம்பு கடித்தவர்களை காப்பாற்ற இறைவனின் கோவில் நடை எந்த நேரத்திலும் திறக்கப்படுவது சிறப்புக்குரியதாகும். 

அதேநேரம், அச்சன்கோவில் வனப்பகுதியில் காட்டு விலங்குகள் அதிகம் உள்ளன.

 

சுவாமி அய்யப்பன் அருளால், யாரையும் விலங்குகள் துன்புறுத்தியதாக தெரியவில்லை.... 

 

 

நேரம் : 08:31 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்