முகநூல் விருப்பம்

ஆன்மிகம்

சாஸ்தா வழிபாடு (ஐயனார் வழிபாடு)

பதிவு நாள் June 21, 2016  

 

 

 

 

கேரளாவில் முத்தச்சன் வழிபாடு என்பது இன்றளவும் நடை முறையில் உள்ளது.
அதாவது இதை அங்கே சர்ப்ப காவு வழிபாடு என்றும் குறிப்பிடுகிறார்கள்.
முத்தச்சன் என்பவர் அவரவர் பரம்பரையில் தோன்றி மறைந்த மூதாதையரே ஆவார்.
முத்தச்சன் வழிபாடு என்பது மூதாதையர் வழிபாடாகும்.
 
காவு என்றால் குளம் என்று பொருளாகும்.
அதாவது குளக்கரைகளில் ஒரு சர்ப்ப பிரதிஷ்டை செய்து இறந்து போன தன் மூதாதையரை வழிபடுவதே இந்த சர்ப்ப காவு வழிபாடாகும்.
இதுபோன்ற மூதாதையர் வழிபாடே தமிழ் நாட்டில் ஐயனார் வழிபாடு,சாஸ்தா வழிபாடு என்னும் பெயரில் நடைமுறையில் உள்ளது.
 
கேரளாவில் இந்த சர்ப்ப காவு வழிபாட்டை வருடத்திற்கு ஒரு தடவை அவரவர் உறவின் முறையினர் எல்லோரும் ஒன்று கூடி செய்கின்றனர்.
இதுபோல்தான் தமிழ் நட்டிலும் அந்தந்த உறவின் முறையினருக்கு என தனித்தனி சாஸ்தா கோயில்கள் உண்டு. தமிழ் நாட்டிலும் வருடத்திற்கு ஒருமுறைதான் வழிபாடு செய்கிறார்கள்.
 
சாஸ்தா கோயில்களில் நிறைய சர்ப்ப பிரதிஷ்டைகள் தமிழ் நாட்டிலும் உள்ளன.
 
முன்னோர்  வழிபாடு வாழ்வில் நமக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும்.
 
அனைத்து தடைகளையும் நீக்கும்.
 
தற்பொழுது பலர் இந்த ஐயனார் வழிபாட்டை மறந்து வருகிறார்கள்.
 
இதனால் வாழ்க்கையில் புரிந்துகொள்ள முடியாத பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். 

ஜோதிடத்தில் இறந்து போன நம் முன்னோர்களை குறிப்பது ராகு,கேதுக்களாகும்.
 
இதனால்தான் சாஸ்தா கோயில்களில் அதிகம் சர்ப்ப பிரதிஷ்டைகள் உள்ளன.
 
தங்கள் குடும்பத்திற்கு என உள்ள சாஸ்தாவை மறந்து போனவர்கள், தங்கள் குல தெய்வமான சாஸ்தாவை தேடிக்கண்டுபிடித்து வழிபடுங்கள்.
 
உங்கள் வாழ்க்கை சிறப்படையும்.
 
சாஸ்தா கோயில்கள் பெரும்பாலும் குளக்கரைகளிலேயே அமைந்திருக்கும்.
திருப்பட்டுர் பிரம்மபுரீஸ்வர் ஆலயத்தின் அருகில் உள்ள சாஸ்தா கோவில் மிகவும் பழமையானதும் மிகுந்த சக்தி  வாய்ந்ததும் ஆகும்..ஒரு முறை சென்று  தரிசித்து பாருங்கள்..பின்னர்  புரியும் அதன் மகிமை...
 
 
 
 

நேரம் : 08:29 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்