
முகநூல் விருப்பம்
முகப்பு
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020
பதிவு நாள் November 14, 2017
சனிப்பெயர்ச்சி கோட்சார பலன்கள் 19-12-2017 முதல் 23-01-2020 வரை
============================================
1.மேஷம்-65%(பாக்ய சனி)
மேஷராசியினரிற்கு இதுவரை நடந்து வந்த அட்டமசனி விலக போகிறது. கடந்த 3 வருடங்களாக பட்ட துன்பங்கள், துயரங்கள் தீரும் காலமாக இந்த சனிப்பெயர்ச்சி அமையும்.
பண வரவு நன்றாக இருக்கும்.பிரயானத்தால் நல்ல பலன்...வியாபாரத்தில் மேன்மை உண்டு.
திருமணம் கைகூடும். கூட்டுதொழிலில் ஆதாய கூடும்.
தொழிலில் உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. அதிக லாபம் எதிர்பார்த்தல் ஆகாது.
தைரியம் குறைவு இருந்தாலும் புதிய முயற்சிகள் வெற்றி அடையும்.
ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பது தந்தைக்கு நஷ்டம் மற்றும் பிணியை / நோய் ஆகியவை உண்டாகும்.
இளைய சகோதரர்களுக்கு கெடுபலன் உண்டாகும்.வேலை ஆட்கள் உங்கள் திருப்திக்கு வேலை செய்ய மாட்டார்கள்.
பொன் பொருள் திருடு போகுதல் அல்லது அடமானம் வைத்தல் ஆகியன நடைபெறும். அதர்ம வழிகளில் மனம் செல்லும்...ஜாக்கிரதை....மனதை அடக்கப் பழகுங்கள்....
பொதுவே இது நன்மைகள் நடக்க துவங்கும் காலம் என்றாலும் பேராசைகளை நிராகரித்து விட்டால் நீங்கள் வெற்றியாளர்தான்.சந்தேகமில்லை......
=================================================================
2.ரிஷபம்-35%(அஷ்டம சனி)
ரிஷபத்தாரிற்கு அட்டமசனி ஆரம்பிக்கின்றது.
ஆயுளுக்கு பங்கம் உண்டாகும் காலம்..அல்லது அதற்கு ஒப்பான கண்டங்களும் கஷ்டங்களும் உண்டாகும் காலம்.
கடன் தொல்லை , உடல் நல குறைவு, அதிக செலவீனம், ஜீவன நாசம், தேவையற்ற பயம், எதிலும் விருத்தி இல்லா நிலைமை உருவாகும்.
தொழிலில் மிகவும் கவனம் தேவை.
கூட இருக்கும் நண்பர்களால் திடீர் நஷ்டங்கள் உருவாகலாம்.
சிலருக்கு மஞ்சள் கடிதாசு தரும் நிலை உருவாகலாம்.
கடின உழைப்புக்கு பின் அதற்கேற்ற வருமானம் உண்டாகும்...
சிலருக்கு உழைப்புக்கு ஏற்றாற்போல் பதவி உயர்வுக்கு வாய்ப்புண்டு.
பேசும் வார்த்தைகளில் மிகவும் கவனம் தேவை...
வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
பிள்ளைகளால் பெருமை உண்டு.
பூர்வீக சொத்துக்களினால் நன்மை உண்டு.
=========================================
3.மிதுனம்-50%(கண்டக சனி)
மிதுனத்திற்கு எட்டிற்கும் ஒன்பதற்குமுடைய சனி பாதக ஸ்தானத்தில் இருந்து கண்டசனி ஆரம்பிக்கிறது, ஆனால் இது உங்கள் தந்தைக்கு மிக நல்லது.
கணவன் மாணவி இடையே சண்டை சச்சரவுகள் உண்டாகும் காலம். நண்பர்கள் இடையே பிணக்கு உருவாகும் காலம்..நண்பர்கள் வழியே தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகும்.
தொழில் கூட்டாளிகளால் பிரச்னை உருவாகும்.சூதாட்டம் வழியே நஷ்டம் உண்டாகும். கௌரவ பங்கம் ஏற்படும்..
அந்தஸ்து பாதிக்கப்படும்.நினைவாற்றல் குறையும்.
எதிலும் சந்தேகமும் பயமும் உண்டாகும்.
தாயாரின் உடல்நிலை பாதிப்படையும்.வீடு வாகனம் வழியில் செலவுகள் கூடும்.
கவனமாக காரியங்களை கையாள வேண்டிய தருணம்.
==============================================================
4.கடகம்-70%(சத்ரு,ஜெய் சனி)
நல்ல அனுகூலமான பலன்கள் உண்டாகும்.எதிரிகளை பந்தாடுவீர்கள்.செல்வமும் செலவாகும் பெருகும்.எதிர்ப்பாராத திடீர் தன வரவு உண்டாகும்.
மற்றவர்கள் பாராட்டும் வகையில் உங்கள் துறையில் நீங்கள் சாதனை புரிவீர்கள்.
சிலருக்கு குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் உண்டாகும்...அது கடைசியில் ஆபத்தில் போய் முடியும்.எனவே கவனம் தேவை.
இளைய சகோதர்களுக்கு இது கெடுதல் தரும் காலம்.
எது எப்படி இருந்தாலும் சனி தனது பார்வையால் கொடுக்கும் கெடுபலன்களை விட ஆறில் நின்று கொடுக்கும் நற்பலன்கள் அதிகம்..எனவே தூள் கிளப்புங்கள்...
=========================================
5.சிம்மம்-60%(பூர்வ புண்ய சனி)
பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பது அவ்வளவு நல்லது அல்ல...
புத்திர வழியில் மன சஞ்சலமும் கவலையும் செலவுகளும் உண்டாகும்.மனம் நேர் வழியில் செல்லாமல் தீய வழிகளில் சென்று அதனால் கெட்ட பெயர் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உண்டாகும்...கவனம் தேவை.
பூவீக சொத்துக்களினால் அனுகூலம் இருக்காது.
தொழிலில் மந்தகதி, நஷ்டம், உண்டாகும்.
சிலருக்கு ரகசிய நோய்கள் உண்டாகலாம்.
மூத்த சகோதரர்களுக்கு இது நல்ல காலம் அல்ல.
சிலருக்கு அயல்நாட்டு யோகம் வாசம் உண்டானாலும் அதனால் பெரிய நன்மை ஒன்றும் விளையாது.
சிலர் குடும்பத்தை விட்டு வெகுதூரம் தள்ளி வேலைக்கு செல்லும் நிலை உண்டாகும்.
குடும்பத்தில் வீண் கழகம், பிரிவினை ஏற்படும்.எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை இருக்கும். வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்காது.
================================================================
கன்னி-55%(அர்த்தாஷ்டம சனி)
வீண் தண்ட செலவுகள் உண்டாகும்காலம்...தாயாருக்கு நோய் பிணி வந்து நீங்கும் .
வீடு வாகனம் போன்றவற்றினால் தேவை இல்லாத செலவும் , வீண் விரயமும் உண்டாகும்கல்வியில் தடை மற்றும் காலில் அடிபட்டு மருத்துவமனை செல்ல வேண்டி வரும்.
கடன்கள் உண்டானாலும் அது கட்டுக்குள் இருக்கும். உடல் நலனில் மிகவும் கவனம் தேவை.
தொழிலில் தடுமாற்றமும் தொழிலை முடக்கியும் போடும் காலம்.வேலைப்பளு அதிகரிக்கும்.
உயரதிகாரிகளின் கெடுபிடி அதிகமாகும்.
சக ஊழியர்கள் கோள் மூட்டுவார்கள்...
வேலை செய்யும் இடத்தில் கெட்ட பெயர் உண்டாகும்.
நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்காமல் தடை படும்.
தொழிலாளிகளின் சகாய குறைவு உண்டாகும்.சில வேலை ஆட்கள் நம்பிக்கை துரோகம் சேய்து விட்டு ஏமாற்றுவார்கள்.
========================================
7.துலாம்-80%(தைரிய,வீரிய சனி
துலாராசிககாரர்களிற்கு கடந்த ஏழரை வருடங்களாக உங்களை பீடித்துவந்த ஏழரைசனி நீங்க போகிறது
கடந்த ஏழரை வருடங்களில் நீங்கள் வாழ்வில் பெற்ற அனுபவங்கள் மூலம் இனி உங்கள் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ளும் காலம் வந்துவிட்டது.
செய்யும் தொழிலில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி என அனைத்தும் நன்மையே நடக்கும்.
துணிச்சலாக புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். அதனால் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும்.
பாக்கிய ஸ்தானம் வலு பெறுவதால் புதிய சொத்து, வீடு வாகனம் என அனைத்தையும் நீங்கள் சேர்க்கும் காலம் இது.
எதிரிகளை வெற்றி கொள்ளும் காலம். குழந்தைகளின் வழியில் நன்மையையும் மகிழ்ச்சியும் உண்டாகலாம்.
குறிப்பாக பெண் குழந்தைகளால் மேன்மை உண்டாகும்.பூர்வீக சொத்துக்களில் உள்ள சிக்கல்கள் தீரும்.
இளைய சகோதரர்களுக்கு உடலில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் தரும். தந்தையின் உடல்நலனிலும் அக்கறை அவசியம்.
=======================================
8.விருச்சகம்-45%(பாதசனி,ஏழரையின் இறுதி பகுதி)
ஜன்ம சனியில் அனுபவித்த கொடுமைகள் சிறிதுசிறிதாக விலகும்.
வாக்கு ஸ்தானத்தில் சனி வந்து அமர்கிறார்.எனவே ஒவ்வொரு வார்த்தையும் அளந்துதான் பேச வேண்டும்.வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.யாரையும் நம்பி வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம்.குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும்.வருமானமும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது.பொருளாதார சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கும்.ஆரோக்கியம் சீராக இருக்காது.செய்தொழில் நஷ்டம் தவிர்க்க இயலாதது. குடும்பத்தில் விரோத போக்கு அதிகரிக்கும்.யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவது மிகப் பெரிய சிக்கல்களில் சிக்க வைக்கும்.
இரண்டாம் இடத்தில் சனி சஞ்சரிக்கும் காலம் காலில் அடிபடும் ... எனவே வண்டி வாகன பிரயாணங்களில் மித வேகம் நன்று.பொதுவாக நீண்ட தூர பிரயாணம் அவ்வளவு சிறப்பானதல்ல.
தாயாரின் உடல்நலனில் அக்கறை தேவை.தாய் வழி மருத்துவ செலவுகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு.அதுபோல மூத்த சகோதர்களுக்கும் இது பலவித இன்னல்களை தரும்.
பொதுவே பண விஷயங்களில் அடக்கி வாசிப்பது மிகவும் நல்லது. குடும்பத்தில் அமைதி காக்கவும்.
=========================================
9.தனுசு-35%(ஜன்ம சனி
ஜன்ம சனியின் பிடியில் தனுசு ராசிக்காரர்களுக்கு தன சுயபுத்தி வேலை செய்யாது, மற்றவர் அறிவுரையின் படி ஆராய்ந்து நடப்பதுதான் புத்திசாலித்தனம்.
மனதில் தேவை இல்லாத குழப்பங்களும் பயமும் ஏற்படும். மனம் ஒரு இடத்தில் நிலை கொள்ளாது. முக்கியமாக அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது பல சங்கடங்களை தவிர்க்கும். பொறாமை குணத்தை கட்டுக்குள் வைக்கவும்.
சனி ஏழாம் பார்வையாக ஏழாம் இடத்தை பார்வை செய்வதால் மனைவி மற்றும் நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகளும் சண்டை சச்சரவுகள் உண்டாகும் நேரமிது.எனவே மிகவும் கவனம் தேவை.
சனியின் பத்தாம் பார்வையால் மேலதிகாரிகளின் கண்டிப்பு கூடும். என்னதான் உழைத்தாலும் நல்ல பெயர் வாங்குவதும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெறுவதும் மிகவும் சிரமமே. செய்தொழிலில் நஷ்டம் தவிர்க்க இயலாதுதான்...
சிலர் குடும்பத்தை விட்டு தனித்து வாழும் நிலை உண்டாகும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் உண்டாகும்.அதனால் எந்த பயனும் விளையாது. வீண் அலைச்சல் மிகும்.
ஆனால் இந்த ஜன்ம சனி உங்களிடைய இளைய சகோதரர்களுக்கு நன்மையை உண்டாக்கும் காலம் என்பது சற்று ஆறுதலான விஷயம்.
=======================================
10.மகரம்-45%(விரயசனி
ஏழரை சனியின் தொடக்க காலம். சனியின் ஆதிக்கத்துக்குள்ளும் பிடிக்குள்ளும் மெதுமெதுவாக வருகிறீர்கள்.
வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும்.மனதில் ஒரு தெளிவு இருக்காது.
சிலர் குடிக்கு அடிமையாகி அதிக செலவு செய்ய வேண்டி வரும். சரியான நேரத்தில் உணவு என்பது மிகவும் கஷ்டம்தான். நிம்மதியான உறக்கம் என்பது அரிதாகி விடும். சரியான நேரத்தில் உறங்கவும் முடியாது.
மனதிலும் , உடலிலும் சோம்பல் தலை தூக்கும். சிலருக்கு புதியதாக உடல் வலிகள் உண்டாகும்.
தவறான நண்பர்களால் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. சிலருக்கு அரசாங்கத்தால் கெடுதி உண்டாகலாம்.
தனவரவில் சுணக்கம் உண்டாகலாம். குடும்பத்தில் வீண் தர்க்கங்களை தவிர்ப்பது நல்லது. வீட்டில் பொன் பொருட்கள் திருடு போக வாய்ப்புள்ளது. சிலர் நகைகளை அடமானம் வைக்கும் சூழல் உருவாகலாம். தந்தய்யருக்கு உடல்நலம் பாதிக்கும்.
சனியின் ஏழாம் பார்வையால் எதிரிகள் ஒடுங்குவர். கடன்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். நோய்கள் மருந்துக்கு கட்டுப்படும்.
பொதுவே சனியின் ஆளுமையின் கீழ் வரும் மகர ராசிக்காரர்கள் எதிலும் பொறுமை கடைபிடிப்பது பிரச்சனைகளை சமாளிக்க ஏதுவாக அமையும்.
=========================================
11.கும்பம்-85%(சுப லாப சனி)
ராசிக்கு 11 ல் சனி வருவது மிகவும் நல்லது.இதை ராஜ யோகம் என்றே சொல்ல வேண்டும்.எடுக்கும் காரியங்கள் அனைத்தும் ஜெயம் உண்டாகும்.உடல்நிலை நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படும். தோற்ற பொலிவு மற்றும் சீரிய சிந்தனை உண்டாகும்.செல்வ சேர்க்கை மிகும். தொழில் சிறக்கும்.சிலருக்கு அரசியல் தொடர்புகளால் ஏற்றம் ஏற்படும்.
ஆனால் மூத்த சகோதரர்களுக்கு இது சோதனையான காலம். தாய் மாமன் வகைகளுக்கு கண்டம் உண்டாகும். சிலருக்கு இரகசிய நோய்கள் வரலாம்.குறுக்கு புத்தியில் சிலர் அபரிதமாக பணம் சம்பாதிப்பார்கள்.
வீடு , மனை வாகன பிராப்தி உண்டு......தொழில் முதலீடு சிறக்கும்....
புதிய முயற்சிகளை தொடங்க இதுவே சரியான தருணம்.
சனியின் மூன்றாம் பார்வையால் கௌரவம் , அந்தஸ்து கூடும். மனதில் தன்னம்பிக்கை உருவாகும்.வாழ்க்கை தரம் உயரும்.
சிலர் குடும்பத்தை விட்டு வெளியூர் வாசம் செய்ய நேரிடலாம்.
குழந்தைகள் படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.
மொத்தத்தில் எண்ணியதெல்லாம் ஈடேறும் இனிய பொற்காலம் இது.....சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்....!!!!
============================================
12.மீனம்-60%(ஜீவன சனி)
அடுத்த இரண்டரை வருடம் மீன ராசியினருக்கு உடல்நல பாதிப்பும் தொழில் நிலையில் தடுமாற்றமும் உண்டாகும்.
வேலை பளு அதிகரிக்கும்.எவ்வளவு உழைத்தாலும் நல்ல பெயர் எடுப்பது மிகவும் சிரமம்.
உடன் வேலை செய்பவர்கள் கோள் சொல்வதால் உயரதிகாரிகளின் பேச்சுக்கு ஆளாக நேரிடும். அரசாங்க வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டாது தாமதப்படும்.
எடுத்த பணிகள் அனைத்தும் தாமதமாகவே நடைபெறும். எதிலும் ஒரு மந்தமான போக்கு ஏற்படும்.
சிலருக்கு குடிபழக்கம் உண்டாகலாம்....கவனம் தேவை..செலவுகள் கட்டுக்குள் இருக்காது.உறக்கம் கெடும்.
தாயாருக்கு உடல் நல குறைவு உண்டாகும்.
சிலருக்கு புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
மனைவியுடன் கருத்தொற்றுமை கொள்வது நல்லது. வீண் விவாதங்கள் தவிர்க்கவும்.
தொழில் கூட்டாளிகளிடம் அனுசரித்து போவது நல்லது.
நண்பர்களுடன் பிணக்கு உருவாகலாம்.
செய்தொழிலில் கண்ணும் கருத்துமாக இல்லை என்றால் நஷ்டங்கள் தவிக்க இயலாததாகி விடும்...ஜாக்கிரதை....
Tags : சனிப்பெயர்ச்சி கோட்சார பலன்கள் 19-12-2017 முதல் 23-01-2020 வரை சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020 சனி சனி பெயர்ச்சி பலன்கள் ஜோதிடம் ஜாதகம் பரிகாரம் ஜோதிடபரிகாரம் சனி பகவான் சனி கிரகம் சனிப் பெயர்ச்சி சனி பெயர்ச்சி - 2017 TO 2020
நேரம் : 10:00 PM
அண்மைய பதிவுகள்
- சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020
November 14, 2017
- சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017 TO 2020 - ஒரு முன்னோட்டம்.
November 14, 2017
- குருப் பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2018
August 15, 2017
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் -2017 - 2018 -மகரம்,கும்பம்,மீனம்
July 25, 2017
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - துலாம்-விருச்சிகம் - தனுசு
July 09, 2017
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - கடகம்,சிம்மம்,கன்னி
July 09, 2017
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 -மேஷம் -ரிஷபம்,மிதுனம்
July 09, 2017
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018
July 09, 2017
- தனிய நாட்களும் படுபட்சி நாட்களும்
January 10, 2017
- பஞ்சபூதங்களின் ஆளுமை நேரம்!
January 10, 2017
அண்மைய செய்திகள் பெற
தற்போதைய பார்வையாளர்கள்

