முகநூல் விருப்பம்

மூலிகை பரிகாரம்

பணம் பெருக - மூலிகை பரிகாரங்கள்

பதிவு நாள் August 30, 2016

Image result for செடி
 
 
ஆடி மாதம் வளர்பிறை ஞாயிற்றுகிழமையில் மாலையில் 6-7க்குள் முறைப்படி தொட்டார்சிணுங்கி செடிக்கு மஞ்சள் நூல் காப்பு கட்டி,தூப தீபம் நிவேதனம் செய்து செடியை வேண்டி கொண்டு வேர் அருகாமல் செடியை எடுத்து ஆயுதம் படாமல் சிறிது வேர் எடுத்து, பின்பு மீண்டும் செடியை நட்டு வைத்து மஞ்சள் நீரூற்றிவிட்டு, எடுத்த வேரை நீரால் அபிஷேகம் செய்து, பின்பு மஞ்சள் தடவி தூப தீபம் காண்பித்து நம் வீட்டின் பணப்பெட்டியில், தொழில் செய்யும் இடங்களில் வைத்து கொண்டால் பண வரவு மிகுவதோடு, எதிரிகள் தொல்லையும் அடங்கி போகும்.


 
வாழை பூவை வீடுகளின் முன்பு, வியாபார இடங்களின் முன்பு கட்டி வைத்து வாரம் ஒரு முறை மாற்றி வர கண் திருஷ்டி அகன்று வியாபாரம் விருத்தி அதையும். வியாபார இடத்தின் உள்ளயும் அனைவர் பார்வை படும்படி வைக்கலாம்.


 
வளர்பிறை வியாழ கிழமையில் காய் காய்க்காத வில்வ மரத்தின் வடக்கே செல்லும் வேரை, மரத்தை வேண்டி, ஆயுதம் படாமல், மஞ்சள் நூல் காப்பு கட்டி,தூப தீபம் காட்டி ,நிவேதனம் கொடுத்து வீட்டிற்க்கு எடுத்து வந்து நீரால் அபிஷேகம் மற்றும் மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்து தூப தீபம் காட்டி வெள்ளி தாயத்தில் அடைத்து கழுத்தில் அணிந்து கொண்டால் துஷ்ட ஆவிகள் பிடித்திருந்தால் விலகும், பேய்- பிசாசு அண்டாது, பண வரவு மிகும். பெண்களுக்கு மாத விடாய் காலங்களில் அதிக ரத்த போக்கு இருப்பின் ஒரு துண்டு வில்வ வேரை வலது கை மணிக்கட்டில் கட்டி விட்டால் உடனே இரத்த போக்கு மட்டுப்படும். வீட்டில் இந்த மரத்தை பய பக்தியுடன் வளர்த்து வர சகல ஐஷ்வர்யங்களும் கிட்டும்.


 

 
கஷ்டங்கள் அனைத்தும் விலக குப்பைமேனி


 
எதிரிகளால் வஞ்சிக்கப்படுத்தல், உறவினர்களால் மற்றும் நண்பர்களால் ஏமாற்றப்படுத்தல், கஷ்ட நஷ்டங்கள், கடன் தொல்லை, தரித்திர நிலை, எதிரிகளின் மிகுந்த தொல்லை, தர்ம நியாயம் இல்லாத வம்பு வழக்குகள் அகல : சனிக்கிழமைகளில் காலை 6-7 மணிக்குள் குப்பைமேனி மூலிகையை (செடி) வேர் அராமல் பிடுங்கி எடுத்து வேரைமட்டும் பூஜையில் வைத்து பூஜித்து வர,மேற்சொன்ன அனைத்தும் விலகி ஓடும்.கோர்ட், வழக்கு போன்றவற்றிர்க்கு போகும் பொழுதும், எதிரிகள் தொல்லைஅதிமாகும் போதும் இதன் வேரை தன்னுடன் எடுத்து சென்றால் ஜெயம் உறுதி.
 
இதன்வேரை எடுத்து சென்றால் காட்டு யானைகளும் பயந்து ஓடும் என்பது முன்னோர்வாக்கு.
 
 
 
 
 
 
 

நேரம் : 07:08 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்