முகநூல் விருப்பம்

முகப்பு

குரு பெயர்ச்சி பலன்கள் - 2018 -2019

பதிவு நாள் September 08, 2018 

 

 

திருக்கணித பஞ்சாங்கப்படி குருபகவான் விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 25 ந்தேதி வியாழக்கிழமை சரியான ஆங்கிலம் 11.10.2018 அன்று 7.15 சுமாருக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசி நான்காம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகின்றார். சுத்த வாக்கிய பஞ்சாங்கப்படி அக்டோபர் மாதம் 4ம்தேதி தமிழுக்கு புரட்டாசி மாதம் பதினெட்டாம் தேதி இரவு 10 மணி சுமாருக்கு குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றார்..

 

ராசிவாரியாக பலாபலன்கள் கீழே..... 

மேஷம்

குருபகவான் மேச ராசிக்கு ஏழாமிடமான துலாம் ராசியிலிருந்து எட்டாமிடமான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றார்.

அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் குரு...!!....

 பணவிசயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கல்களில் கவனம் அதிகம் தேவை.

சிலர் வேலைக்காக அடுத்தவர்களிடம் பணம் கொடுத்து ஏமாறலாம்.

 

புத்திரர்களுக்காக அதிகம் செலவு செய்ய நேரிடும்.

 

கடன் வாங்க வேண்டிய தேவைகள் அதிகமாகும். சேமிப்பு குறையும்.

 

எட்டாம் இடத்தில் குரு அவமானங்கள், இடைஞ்சல்கள் அவ்வப்போது ஏற்படும்.

 குரு தன்னுடைய ஐந்தாம் பார்வையால் பண்னிரண்டாம் வீடான தன் வீட்டை தானே பார்த்து விரயங்களை,சுப விரையங்களாக அதிகப்படுத்துவார்.

 

 மேலும் குரு எட்டில் இருந்து இரண்டாம் வீட்டையும் பார்ப்பதால் வருமானத்தை கொடுத்து விரையங்களை தருவார்.

வெளிநாடு செல்ல கூடிய வாய்ப்புகள் சிலருக்கு கிடைக்கும்.

பொதுவாக எட்டாம் இடத்து குருவால் உறவுகள்

பகை,பணவிரையம்,அபகீர்த்தி,சங்கடங்கள், குழந்தைகளால் மனவருத்தம், குழந்தைகளுக்காக மருத்துவ செலவினங்கள் குடும்ப ஒற்றுமை குறைவு போன்ற கெட்ட பலன்கள் ஏற்படும்.

திருசெந்தூர் முருகன் வழிபாடு மட்டுமே பரிகாரம்.

 

ரிஷப ராசி

ரிஷப ராசிகாரர்களுக்கு குருபகவான் ஏழில் இருப்பது ஏற்றமான  இடமாகும்.  பேரும் புகழ் எல்லாம் தரும்.

பாராட்டுக்கள் கிடைத்தல்,பண உதவிகள் கிடைக்கும்.  

வங்கியில் கடன் சுலபமாக கிடைக்கும்.
சிலருக்கு திருமணம் நடக்கும்.

 ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் லாபம் கிடைக்கும்.

வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் வரும். 
 
குரு தன்னுடைய ஒன்பதாம் பார்வையால் மூன்றாம் இடத்தை பார்த்து ,தோற்ற பொலிவையும், லாபத்தையும், காரிய வெற்றிகளையும்  தருவார். 

தொழிலில் நல்ல லாபம் வந்து கடன்களை அடைப்பீர்கள் .

சிலருக்கு ஆபரணங்கள் வாங்கக்கூடிய யோகங்கள் உண்டு. 

தடைபட்ட காரியங்கள் அனைத்தும் மட மடவென சரியாகும்.

கால பைரவர் வழிபாடு செய்வது அஷ்டமத்து சனியின் தாக்கத்தை குறைக்கும்.

 

மிதுனம்.....

ஆறாம் இடத்து குரு....உறவில் பகை உண்டாகும் என்பது கண்கூடு....

வீண் பிரயாசைகள், அலைக்கழிப்பு, ஒரு காரியம் நடக்க  பத்து முறை  அலைந்து திரிய வேண்டும்.
நோய் தொல்லைகளை தரும்.

தந்தைக்கு இது சிறந்த காலகட்டம் அல்ல...

 உறவுகள் இடையே  பகையும், நிம்மதி குறைவும் ஏற்படும்

  சிலருக்கு உடல்நிலை தொந்தரவுகள் ஏற்படும். மனதில் தேவையில்லாத பயம் ஏற்படும். 

வேலை இல்லாதவர்களுக்கு  இனி வேலை கிடைத்து விடும். தொழில் சிறப்பாக இருக்கும்.

ஆன்மீக எண்ணங்கள் அதிகமாகும்.

 கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு  அன்னியோன்யம் குறைவாக இருக்கும்.

மதுரை மீனாட்சி அம்மன் வழிபாடு மிகவும் நல்லது.

 

கடக ராசி

கடக ராசிக்கு குரு ஐந்தாம் இடத்துக்கு வரப்போகின்றார்.

 

இவர்களுக்கு வலுத்த குருபலம்வந்து விட்டது.

 

 
உத்தியோக உயர்வு, மேலைநாடுகள் மூலம்  அனுகூல பலன், வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்வவர்களுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும்.ஆடம்பரமான வாழ்க்கை நடத்துவதற்கு தேவையான பணம் வரும். வாழ்க்கை குதூகலமாக இருக்கும். நிலையான வருமானம் வர இருக்கிறது. 

 தோற்ற பொலிவு கூடும். சுயபலம் அதிகரிக்கும். தன பலம் கூடும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை, அந்தஸ்து உயரும்.குருபகவான் ஐந்தாம் பாவத்தில் இருந்து ஒன்பதை பார்ப்பதால் தாய் தந்தை மூலம் உதவி கிடைக்கும். 

குருபகவான் ஐந்தில் இருந்து பதினொன்றாம் வீட்டை பார்ப்பதால் செய்தொழிலில் லாபம் மிகுந்து காணப்படும். தடையான  திருமணம் நடைபெறும். குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் கூடும்.பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவர்.தெய்வ பாதுகாப்பு கிடைக்கும். 

பலருக்கு பெரும் பணம் வந்து பையை நிரப்பும். காடு ,மனை இதுவரை விற்பனை செய்வதில் இழுபறி இருந்தவர்களுக்கு சொத்து விற்பனை யாகி லட்சக்கணக்கில் பணம் கையில் புழங்கும்.


 கடன்,நோய், சத்ரு,வம்பு வழக்கு இவை யாவும் கட்டுக்குள் இருக்கும்.


 அஷ்ட லட்சுமி யோகம் உண்டாகும். புதிய  வாகனங்கள் வாங்குவீர்கள். வீடு வாசல் எல்லாம்கட்டி பிழைக்கிற யோகம் உண்டாகும்.நகை நட்டு வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.

 

ஆன்மீக வழிகளில் முன்னேற்றங்களும்,பல புண்ணிய நதிகளுக்கு ஸேத்ராடனம் செய்ய வேண்டிவரும். ஆன்மீக வழிகளில் பலருக்கு லாபமும் வேலையும் கிடைக்கும்.


வெளிநாட்டு வேலை, ஏற்றுமதி, இறக்குமதி இனங்களில் லாபம் அதிகளவில் வரும்.. 


மொத்தத்தில் கடக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அனைத்து நன்மைகளையும் வாரி வழங்கும்.

 

சிம்ம ராசி

சிம்ம ராசிக்கு  குருபகவான் தற்போது நான்காம் இடத்திற்கு வருகிறார்.

 

நான்காம் இடம் என்பது அர்த்தாஷ்டமம் என்று அழைக்கப்படுகிறது.

 

அஷ்டமத்தில் பாதி அர்த்தாஷ்டமம் .

 


அர்த்தாஷ்டம குரு கண்டிப்பாக நன்மை செய்ய மாட்டார்.

 

ஆனால் குருபகவான் நான்கில் இருந்து பத்தாம் இடத்தை பார்ப்பதினால் தொழில் சிறக்கும்.

 

 வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்து விடும்.

 சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொழில் நன்றாக இருக்கும். லாபம் உண்டு. 

 

பதவிஉயர்வு, சம்பள உயர்வு , பணிமாற்றம் கண்டிப்பாக உண்டு. சிலருக்கு வெளிநாட்டு உத்யோகம் கிடைக்க வாய்ப்புகள் அதிக அளவில் உண்டு.

 சிலருக்கு சிறிய அளவிலானவிபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு....கவனம்...

 
தங்க நகைகளை பேங்க்ல அடமானம் வைப்பதுவும்,விவசாய நிலங்களில் நஷ்டத்தையும் குருபகவான் தருவார்


 குருபகவான்  குழந்தைகளால் சங்கடங்களையும்,அவமானங்களையும்,அவர்களால் விரையங்களையும் ஏற்படுத்துவார்.


பருவ வயதில் இருக்கும்பெண் பிள்ளைகளை பெற்றவர்கள்  திருமண விஷயங்களில் அதிருப்தி ஏற்படும். . 

சிலருக்கு பூர்வீக சொத்துக்களில் வம்பு, வழக்கு, கோர்ட், கேசு என பிரச்சனைகள் வரும்.

 

மொத்தத்தில் நன்மைகளும், தீமைகளும் கலந்து நடக்க கூடிய காலம்

பரிகாரமாக உங்களது ராசிநாதனான சூரியனை வணங்கி வாருங்கள். பிரதோச காலங்களில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து, வில்வ இலைகளால் சிவனுக்கு அர்ச்சனை செய்து வரவும்.

 

கன்னி ராசி

கன்னி ராசிக்கு குரு மூன்றாம் இடத்துக்கு வருகிறார்.

 

குரு புத்திர காரகன், தனகாரகன்,அறிவுகாரகன் என்பதால் அவர் மறைவு ஸ்தானத்திற்கு செல்வது நல்லது அல்ல.

 

 திருமண தடை அகலும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும்.

 

தந்தை மகனுக்கும் இடையிலான உறவு மிக நன்றாக இருக்கும்.

 

விவசாயத்தால் பெரிய பயன் உண்டாகாது....சகோதர வகையில் நன்மைகள் உண்டாக வாய்ப்பில்லை.


தொழிலின் மூலம் லாபமும், பணவரவுகளும் நிச்சயம் உண்டு. ஆனால் வரக்கூடிய பணம், தனம் வந்த வழிதெரியாமல் ,வந்த சுவடு தெரியாமல் சென்று விடும்.

 

 மறுமணம் செய்ய இருப்பவர்களுக்கு எண்ணிய எண்ணம் பலிதமாகும்.

 

மொத்தத்தில் பாதி நல்ல பலன்களும் பாதி தீய பலன்களும் மாறி மாறி நடைபெறும்.

 

பரிகாரமாக ஆஞ்சனேயருக்கு நெய் விளக்கு ஏற்றி ,உங்களது ராசினாதனான புதன்பகவானையும்,அவருடைய அதிதேவதையான பெருமாளையும் சனிக்கிழமை தரிசித்து,துளசி மாலை அணிவித்து வணங்கி வரவும்.


துலாம் ராசி  துலாத்திற்கு தற்போது இரண்டாம் இடத்திற்கு குருபகவான் சஞ்சாரம் செய்ய இருக்கிறார்.

 

 இந்த ராசிக்காரர்களுக்கு குருபலம் வந்து விட்டது. 


குருபகவான் இரண்டில் அமைய லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

 பணம் நிறைய வரும். அடுத்தவங்களுக்கு தருமம் செய்யும் அளவிற்கு பணம் வரும். 

 கோயில் குளத்துக்கு எல்லாம் சென்று வரும் பாக்கியம் ஏற்படும்.

 

 புண்ணிய நதிகளில் நீராடக்கூடிய வாய்ப்புகள் தானாக வரும்.

 
பேரும், புகழும் ஏற்படும். உங்களுடைய சமுதாய அந்தஸ்து உயரும். அரச மரியாதை  உண்டாகும். சிலருக்கு அரச விருதுகள், அரச பாராட்டுக்கள், அரசாங்கத்தினால் நன்மைகள், கிடைக்கும்.

 

வங்கி கடன் கேட்டால் உடனே கிடைக்கும்.

மண்,பொன்னால் லாபம் உண்டாகும். விவசாய பலிதம் உண்டாகும். நகை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.

 

 அரசியல் வாதிகளுக்கு இது ஒரு பொற்காலம் ஆகும். மக்களிடம் நல்ல செல்வாக்கு இருக்கும். வெற்றி கிடைக்கும். 

விவசாயிகள் நல்ல மகசூலை அடைவார்கள். செலவு குறைந்து வருமானம் அதிகளவில் வரும்.


மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுத்து முதல் மாணவர்களாக தேர்ச்சி பெறுவர். 


போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவர். 

இதுவரை தொழிலில் அலைச்சல் என்ற நிலை மாறி குறைவான உழைப்பு அதிக லாபம் என்ற நிலையை தருவார்கள். வெளிநாட்டு இனங்கள், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி அபாரமாக இருக்கும்.

 

 பலருக்கு சம்பள உயர்வு, ப்ரமோசன் கிடைக்கும். விரும்பிய ஊர்களுக்கு வேலை மாற்றம் கிடைக்கும். பணி நிரந்தரம் ஆகும்.

 

ஸ்ரீரங்க பெருமாளையும் தாயாரையும் தரிசனம் செய்து வருவது மேலும் நன்மைகளை அதிகரிக்க செய்யும்.

 

நேரம் : 04:08 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்