முகநூல் விருப்பம்

முகப்பு

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - துலாம்-விருச்சிகம் - தனுசு

பதிவு நாள் July 09, 2017 

Image result for rahu ketu

 

 

 

துலாம் ராசி :

 

வீடு மாறுதல் அல்லது மாற்றம் செய்வீர்கள்.வீட்டில் உள்ளவர்களை வீண்தர்க்கம் செய்யாமல் அனுசரித்து செல்லவும். தாயின் உடல் நலம் பாதிப்பு உண்டாகும். வாகனத்தை மாற்றி வாங்குவீர்கள். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

 

திருமண சுபநிகழ்ச்சிகள் இழுபறி சந்தித்து கூடிவரும்.வரவு செலவுகள் சரியாகும்.மனைவி,நண்பர்கள் உங்களுடைய தொழில் அமைப்புக்கு உதவுவார்கள். ஒன்று மேற்பட்ட தொழிலை இக்காலக்கட்டத்தில் செய்வீர்கள். ஊர் ஊராக சுற்றவேண்டிய சூழல் உண்டாகும். வேலை தொலைவில் அமையும். பணியில் உயர்பதவி கிட்டும் காலம்.

 


தொழிலில்/வேலையில் வேகம் அதிகரிக்கும், முஸ்லிம் தொடர்பான நாடுகளில் வேலைக்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும். மருத்துவ துறையில் இருப்பவர்கள் நல்ல நிலையை அடைய நேரிடும், பல வெற்றியும் கிட்டும். 

செய் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர வழியில் மனம் ஈடுபடவைக்கும். பணவரவு நன்றாக இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். 

தெய்வீக காரியத்தில் ஈடுபடுவீர்கள்..
குலதெய்வத்தை தேடி அதை கண்டுபிடித்தும் விடுவீர்கள்..

சந்தான பாக்கியம் தடைதாமதம் உண்டாகும்..

நீச பெண்/ஆண் தொடர்புகள் உண்டாகும்... அந்தர வாழ்க்கை அம்பலமாகும்.


நீச்ச தொழிலில் ஆர்வம் உண்டாகும், மாந்திரீக செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

புதிய மனை வாங்க தடை உண்டாகும், இருக்கும் வீட்டில் பரமாரிப்பு செலவு அதிகரிக்கும், பிரச்சினை, வழக்கு உண்டாகும்

 

பட்டபடிப்பில் தடை உண்டாகும். 

கிணறு, குளம் நீர்நிலைகளின்அருகில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

மனைவி வழியில் பொருள் வரவில் தடை உண்டாகும்.

 

பரிகாரம் 

ஜன்ம நட்சத்திரம் அன்று பாலும் நாட்டு சக்கரையும் கலந்து ஓடும் ஆற்றில் விடவும்.

பிள்ளையார்பட்டிக்கு சென்று கேது பகவானுக்கு உண்டான பரிகாரம் செய்து கொண்டு, கற்பக விநயாகரை வழிபட்டு வரவும்.


ஞாயிற்றுக்கிழமைகளில் கதிராமங்கலம் சென்று துர்க்கை , காளி வழிபட சிறப்பான யோகம் உண்டாகும்.


========================================= 


விருச்சிக ராசி :

 

சகோதர உறவுகள் மேம்படும்.. முன்னோர் வழிபாடுகளை செய்து முடிப்பீர்கள். தந்தையின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.மனைவி ஆதரவு கிடைக்கும்.நீங்கள் வெளியிடங்களில் வெளிநபர்களால் அதிகம் பேசப்படுவீர்கள்.சிலர் பெற்றோரை விட்டு தொலைவில் இருப்பர்.கல்வி விஷயங்களில் மேன்மை ஏற்படும்.கடின உழைப்பு, முயற்சியால் முன்னேறும் காலம் இது.தந்தைவழி உறவினர்கள் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். மேலாதிகாரிகளிடம் பணிவாக நடந்துக்கொள்ளவேண்டும் அப்படி இல்லை என்றால் அவர்களின் கோபத்திற்க்கு ஆளாக வேண்டிவரும். 

 பூர்வீகத்தில் தோஷம் உண்டாகும்
சுப நிகழ்ச்சிகள் தடைபடும்
குலவிருத்தி தடைபடும்
பெண்களுக்கு கர்ப்பபை சம்பத்தமான நோய் உண்டாகும், சிலருக்கு ஆபரேஷன் நடைபெறும்

நீண்டதூர பயணம், வெளிநாடு பயணம் உண்டாகும்
ஞானவிருத்தி உண்டாகும்


காது,தொண்டை சம்பந்தமான நோய்கள் உண்டாகும்
கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.


எல்லா காரியத்திலும் தைரியம் குறையும்


ஆண்களுக்கு ஆண்மை குறைவு, உறவில் நாட்டம் இல்லாமல் போகும் வாய்ப்புண்டு

 

பரிகாரம் : 

ஜன்ம நட்சத்திரம் அன்று கண்பார்வை இல்லாதவர்க்கு உடை தானம் செய்யவும்.

• ஆஞ்சநேயர் வழிபாடு, பைரவர் வழிபாடு செய்து வர சிறப்பு
• திருநாகேஸ்வரம் சென்று ராகுநாதசுவாமி வழிபடவும்.


• நவக்கிரகத்தில் உள்ள ராகு கேது பகவானுக்கு விளக்கிட்டு வர நலம் உண்டாகும்.


========================================== 

தனுசு ராசி :

 

குடும்பத்தில் பிரச்சனையும் மனைவி வழியில் சச்சரவும் காணப்படும்.பேச்சில் தடுமாற்றம் விரக்தியுடன் பேச்சுவீர்கள். சுகம் பாதிப்பு இருக்கும்.

 

வெளிநபர் சில வீண் வம்புகள் வந்து சேரும்.வாகனப்பயணம் கவனம் தேவை. திடீர் விபத்துக்கு வாய்ப்புண்டு....உடலில் காயங்கள் ஏற்படும்.

 

தொழில் பணிச்சுமை அதிகரிக்கும்..படிப்பில் தடுமாற்றம் இருக்கும்.உங்களை சுற்றி சதிவலை பின்னப்படும்.அன்றாட செலவுகளுக்கு கூட பணம் கிடைக்காத தட்டுப்பாடு உண்டாகும்.அடுத்தவர்களைச் சார்ந்து இருக்கும் சூழ்நிலை உருவாகும்.

அலைச்சல் திரிச்சல் அதிகம் இருக்கும்.


வாக்கில் கவனம் வேண்டும். தேவையில்லாத வாக்குகள் தரவேண்டாம்...நட்பு, நண்பர்கள், உறவினர்களுடன் கவனமாக இருக்க வேண்டிய காலம். 

செலவிடுவதில் சிக்கனம் கடைப்பிடிக்க வேண்டிய காலம்
விஷபாதிப்புகள், நோய் பாதிப்புகள் உண்டாகும். 

மர்ம உறுப்பின் மாற்றம், நோய் உண்டாகும்.

பில்லி சூன்யத்தால் பாதிப்பு உண்டாகும்


சிறுநீரக சம்பந்தமான நோய் ஏற்படும்


கடன் கொடுத்து மாட்டி கொள்ளவேண்டாம்


ஆனால் பூமி மூலம் லாபம் உண்டு.


பரிகாரம் 

ஜன்ம நட்சத்திரம் அன்று பச்சரிசியும் வெல்லமும் கலந்து ஆற்றில் விடவும். 

திருநாகேஸ்வரம் சென்று ராகுநாதசுவாமி தர்சனம் செய்து வர சிறப்பு
நவக்கிரகத்தில் உள்ள ராகு கேது பகவானுக்கு விளக்கிட்டு வர நலம் உண்டாகும்.


பிள்ளையார்பட்டிக்கு சென்று கேதுவிற்க்கான பரிகாரம் செய்து கொள்ளவேண்டும். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நேரம் : 06:58 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்