
- முகப்பு /
- 2017
முகநூல் விருப்பம்
முகப்பு
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018
பதிவு நாள் July 09, 2017
ராகு கேதுக்கள் இருவரும் நிழல் கிரகங்கள்...சாயா கிரகங்கள்.
ஒரு பொருளை அல்லது ஒரு உயிரை இல்லாமல் செய்து விடுவது ராகுவின் குணமாகும்.
ஒரு பொருளை அனுபவிக்க விடாமல் தடை செய்வது கேதுவின் குணமாகும்.
ராகு -உயிருள்ள காரகத்தை அழிக்கும் உயிரற்ற காரகத்தை பெருக்கும்
கேது -உயிருள்ள காரகத்தை பிரிக்கும் உயிறற்ற காரகத்தை அழிக்கும்
ராகு -கேதுக்கள் இரண்டுமே பிரிவினை மற்றும் தடைகளை உண்டாக்கும் கிரகங்களாகும்.
ராகு எந்த ராசியில் சஞ்சரிக்கிறானோ , அந்த ராசியின் காரகங்களையும் ,அந்த ராசிநாதனின் காரகங்களையும் அழிப்பான்.
கேது எந்த ராசியில் சஞ்சரிக்கிறானோ அந்த ராசியின் காரகங்களையும், அந்த ராசி நாதனின் காரகங்களையும் தடை செய்வான்.
ராகு உணர்வுகளை தூண்டக் கூடியவன்....ஒருவருக்கு பேய் பிடிப்பது, மனநிலை பாதிப்பது எல்லாம் ராகுவின் பாதிப்பால்தான்....!!!!
முக்தியை தருவதில் கேதுவின் பங்கு அளப்பரியது..!!!!!
ராகு கேது கிரகங்கள் செயல்படும் விதம்
சர்ப்ப கிரகங்கள் எனும் ராகு கேது இருவரில் கேதுவே மிகவும் பலம் மிக்கவர்.
ராகு - பாம்பின் தலை போன்றது. பாம்பு ஒரு பொருளை உள்ளிழுத்து அதனுள் இருப்பதை உறிஞ்சி பின் அந்த பொருள் ஒவ்வாதது எனத் தெரிந்தால் வெளியே துப்பும் தன்மை கொண்டது. அதுபோல ராகு ஒரு கிரகத்துடன் நெருங்கி சேர, அந்த கிரகத்தின் உயிர் உறவு சம்மந்தப்பட்ட காரகத்துவத்தை உறிஞ்சிவிட்டு (கண்டம் தரும் அமைப்பு) பொருள் காரகத்துவத்தை பிரமாண்டமாக்கி அல்லது அதிகப்படுத்தித் தரும்.
கேது - பாம்பின் வால் போல...ஒருவரை கட்டியிழுத்து நகரவிடாமல் எதிலும் பற்றுகொள்ள விடாது. கேது ஒரு கிரகத்துடன் சேரும் போது, அந்த கிரகம் குறிக்கும் உயிர் காரகத்துவம் அனைத்திலும் சச்சரவு அல்லது விரக்தி தரும். கிரகம் குறிக்கும் பொருள் காரகத்துவத்தில் தடை அல்லது தாமதம் தந்துவிடும்.
ராகு கிரககாரகத்துவங்கள்
வாய், உதடு, காது, முஸ்லீம், கோபுரம், அகலமான வீதி, தகப்பன் வழிப் பாட்டன், தலை, நிழல், மாயை, குடை, பாம்பின் தலை, கடத்தல் தொழில், உலர்ந்த தோல், பிளாஸ்டிக், இரசாயனம், மொட்டை மாடி, சேமிப்புக் கிடங்கு, விதவை, தொழுநோய், மருத்துவம், வெளிநாட்டு வர்த்தகம், விபசாரம் செய்தல், வாகனம் ஓட்டுதல், சினிமாத் தொழில், போகக்காரகன், வஞ்சகம், சூது,பொய், களவு. மரணம், வெளிநாட்டு தொடர்பு…
கேது கிரககாரகத்துவங்கள்
மோட்ச காரகன், ஞானம், தியானம், தவம், மௌனம், கயிறு, நூல், கூந்தல், மூலிகை, பாம்பின் வால், குறுகிய சந்து, மருத்துவம், சோதிடம், ஆன்மீகம், சட்டத்துறை, சந்நியாசம், துறவறம், தாய்வழிப் பாட்டன், நரம்பு, குளியல் அறை, ஞானம், மனவெறுப்பு, கொலை செய்தல். தாய் வழி பாட்டனார், மருத்துவம், ஞானி, ஆன்மீகம், ஜோதிடம், அலி ,அன்னிய நண்பர்கள்,அன்னிய மொழிகளுக்கும் ஆதிபத்தியம் உடையது இந்த கேது.....
அனைத்து கிரகங்களை விட கேதுவிற்க்கே அதிக பலமுண்டு என்பது சாஸ்திர பண்பாடு...
ராகு,கேதுக்களுக்கு கேந்திரத்தில் (1-4-7-10ல்) எந்த கிரகம் சஞ்சரிக்கிறதோ அந்த கிரகத்தின் காரக தன்மைகள் நிச்சயமாக பாதிப்படையும்.
ஜாதகத்தில் சொந்த வீடுகள் இல்லையென்றாலும் சூரியன்,சந்திரனையே முடக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டவர்கள் இவர்கள்...!!!!!
சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் என்பதெல்லாம் ராகு கேதுக்களின் ஆதிக்கம்தான் என்று ஜோதிடம் சொல்கிறது.
ராகு கேதுக்கள் நிழல் கிரகம்....அது பூமியின் நிழல் என அறிவியல் சொல்கிறது.
ஜோதிடமும் ராகு கேதுக்களை நிழல் கிரகங்களாகவே பார்க்கிறது.
ராகுவை போல கொடுப்பார் இல்லை.கேதுவை போல கெடுப்பார் இல்லை என்பார்கள்.
அதனால்தான் அரசனை ஆண்டியாக்கவும்,ஆண்டியை அரசனாக்கவும் வலிமை படைத்தது இந்த ராகு கேதுக்கள் என்று ஜோதிடத்தில் உரைக்கப்படுகிறது.
லொளகீக உலகிற்கு (இவ்வுலகம்) தேவையான பொருளை தருவதில் முன்னிலை வகிப்பது ராகுபகவான் .இதேபோல அருள் உலகைத் தருவதில் (அவ்வுலகம் ) முக்கிய வகிப்பது கேதுபகவான் ஆவார்.
இப்படியாக இவ்விரு கிரகங்களும் மனிதர் வாழ்வில் முக்கிய நிகழ்வுகளுக்கு காரணமாக விளங்குகிறது.
இவர்களுக்கு ஹோரைகள் கொடுக்கப்படவில்லை எனினும்...ராகு காலத்தில் ராகுவின் ஆதிபத்தியமும், எமகண்ட நேரத்தில் கேதுவின் தன்மையும் உண்டு.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள கோட்சாரப் பலன்கள் எல்லாம் பொது பலன்களே… இது ஒவ்வொருவரின் ஜாதகம் மற்றும் திசாபுத்தி அடிப்படையில் நற்பலன்கள், தீயப் பலன்களின் அளவு மாறுபடும்…
ஆனால் குறிப்பிட்ட பலன்களில் ஒரளவாவது கண்டிப்பாக அனுபவித்தே தீரவேண்டும்…
ராகு கேதுவின் கோச்சார பலன்கள்:
3ல் இருக்கும் போது (அந்தப் பதினெட்டு மாதங்களில்) சுகம், காரிய சித்தி ஏற்படும்.
6ல் இருக்கும்போது, வெற்றி, உடல் உபாதைகள் நிவர்த்தி, பகை வெல்தல் போன்ற நற்பலன்கள் ஏற்படும்.
11ல் தனலாபம், சுகம், போகம் மற்ற இடங்களில் அவர் வலம் வந்து தங்கும் காலங்களில் நன்மை இருக்காது!
==================================================================
இந்த ஆண்டு ராகு பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும்
கேது பாகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும்
கீழ்கண்ட இந்திய நேரப்படி பெயர்ச்சி கணிக்கப்பட்டுள்ளது
திருக்கணிதப்படி ஆகஸ்ட் 20, 2017 காலை 11:44 மணி அளவில் பெயர்ச்சி ஆகி மார்ச் 9, 2019 2:41 மதியம் வரை சஞ்சாரம் செய்கிறார்கள்
வாக்கியப்படி ஜுலை 24, 2017 பெயர்ச்சி ஆகி பிப்ரவரி 10, 2019 வரை சஞ்சாரம் செய்கிறார்கள்.
Tags : ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 ராகு கேதுஜோதிடம் ஜாதகம் பரிகாரம் ஜோதிடம்பரிகாரம் ராகு கேது பெயர்ச்சி ராகு கேது
நேரம் : 04:04 PM
அண்மைய பதிவுகள்
- சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020
November 14, 2017
- சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017 TO 2020 - ஒரு முன்னோட்டம்.
November 14, 2017
- குருப் பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2018
August 15, 2017
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் -2017 - 2018 -மகரம்,கும்பம்,மீனம்
July 25, 2017
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - துலாம்-விருச்சிகம் - தனுசு
July 09, 2017
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - கடகம்,சிம்மம்,கன்னி
July 09, 2017
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 -மேஷம் -ரிஷபம்,மிதுனம்
July 09, 2017
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018
July 09, 2017
- தனிய நாட்களும் படுபட்சி நாட்களும்
January 10, 2017
- பஞ்சபூதங்களின் ஆளுமை நேரம்!
January 10, 2017
அண்மைய செய்திகள் பெற
தற்போதைய பார்வையாளர்கள்

