முகநூல் விருப்பம்

முகப்பு

அனைவருக்கும் வணக்கம்

பதிவு நாள் June 18, 2015

 
Om Shreem Hreem Kleem
Glaum GamGanapataye
Vara Varada Sarva Janamme
Vashamanaya Svaha.

                                      

                       அனைவருக்கும் வணக்கம்

எல்லாம் வல்ல முழு முதற் கடவுளாம் விநாயக பெருமானை வேண்டி இந்த ஜோதிடம் பரிகாரம் என்ற வலை தளத்தை துவங்குகிறேன்.


இந்த வலை தளத்தின்  முழு முதற் நோக்கம் உண்மையான சத்தியமான ஜாதக பலன்களும் ஜோதிட கணிப்புகளும் பரிகாரங்களும்  அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதே ஆகும்.


எனது கடந்த 25 ஆண்டு கால ஜோதிட ஆராய்ச்சியின் விரிவாக ஜோதிடம் மற்றும் பரிகார முறைகள் முழுவதுமாக நிரூப்பிக்கப்பட்ட பலன்கள் உள்ளடங்கியது இந்த  வலைத் தலம்.


எல்லாமே இறைவனால் படைக்கபட்டவை தான்.


அவனன்றி ஒரு அணுவும் அசையாது.


எல்லா பாவங்களுக்கும் பரிகாரம் உண்டு.


எல்லா தோஷங்களுக்கும் நிவர்த்தி உண்டு..


இறைவனின் ஆணைப்படி அதனை செயல்படுத்துகின்ற நவ கிரகங்களும் இறைவனுக்கு கட்டுபட்டவை தான்.


நம் வாழ்வில் நடந்ததும் , நடப்பதும்,நடக்க போவதும்  எல்லாம் நாம் செய்த முற்பிறவி பாவ புண்ணியங்களின் பலன்களை பொறுத்தே.


அதை மனிதனாகப்பட்டவன் அனுபவித்ததே  தீர வேண்டும்.


இறைவன் யாருக்கும் இல்லை என்று சொல்வதே இல்லை.


இறங்கி முறையாக கேட்பவர்களுக்கு, சரியான முறையில் பரிகார விதி முறையோடு அணுகுபவர்களுக்கு நவ கிரங்கங்களையும் மீறி அவன் நமக்கு நன்மை செய்ய காத்து இருக்கிறான்.


தோஷங்கள் இல்லாத ஜாதகங்கள் இல்லை.


அது போல பரிகாரம் இல்லாத தோஷங்கள் இல்லை.


அதே போல் குற்றம்  செய்யாத மனிதர்களும் இல்லை.....


ஏன் ?...


குற்றம் செய்யாத கடவுள்கள் கூட இல்லை.


எல்லா குற்றம்களுக்கும் ஒரு நியாயம் உண்டு.


எல்லா பாவங்களுக்கும் பரிகாரம் உண்டு.


அந்த பரிகாரத்தை எப்படி எந்த முறையில் எங்கு யாரை கொண்டு செய்வது என்பதில்தான் உள்ளது சூட்சமம்.


அதை அறிந்தவர் வெகு சிலரே .


அதை அறிந்த சிலரும் கூட முழுமையாக மக்களிடம் கொண்டு சரியான முறையில் சேர்க்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.


இத்தளத்தில் ஆன்மிகம் , ஜோதிடம்,ஜாதகம் சம்பந்தப்பட்ட விரிவான பதிவுகளும் , அலசல்களும், மற்றும் கோவில்கள் பற்றிய தகவல்களும் இடம்பெறும்.


மேலும் பஞ்சபட்சி,மூலிகை பரிகாரங்கள்,வாஸ்து ,எண் கணிதம் மற்றும் பெயரியல்  பற்றிய ஆய்வுகளும், பரிகாரங்களும் ,விளக்கங்களோடு விவரிக்கப்படும்.


 இனி வரும் நாட்களில்  ஜாதகம் / தோஷம் மற்றும் பரிகாரங்கள்  தொடர்பான விஷயங்களை இந்த வலைய தளத்தில் வளையேற்றுவது அனைவருக்கும்  உபயோகமாக இருக்கும் என இறைவன் பெயரால் நம்புகிறேன்.  

"சர்வ ஜனோ சுகினோ பவந்து"  


பின்னூட்டத்தில் தங்களின் மேன்மையான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.  
          

 அன்புடன்  

 திருவோணத்தான்            

நேரம் : 12:15 PM