முகநூல் விருப்பம்

பரிகாரம்

சாபங்களும் பரிகாரங்களும்

பதிவு நாள் January 10, 2017

Image result for parvathi amman

 

 

 ஜாதகத்தில் உள்ள சாபங்களைக்கண்டறிந்து அதற்குரிய பரிகாரங்களை செய்தால் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய தடைகளிலிருந்து விடுபடலாம்.

 

சாபங்களுக்குரிய பரிகாரங்களை செய்வதால் நீண்ட நாட்கள் தடைபட்டுக்கிடக்கும் காரியங்கள் விரைவில் கைகூடும்.

 


பித்ரு சாபம்: 


ஒரு கைத்தடி,ஒரு ஜோடி செறுப்பு,ஒரு குடை,பகவத் கீதை புத்தகம் ஒன்று இவைகளை சுமார் 50 லிருந்து 70 வயது நிரம்பிய ஒரு பெரியவருக்கு (தந்தை வயதை ஒத்த மனிதர்) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் தானம் கொடுக்கவும்.

 


மாத்ரு சாபம்: 

 


ஒரு நாளைக்கு 25 சுற்றுக்கள் வீதம் 40 நாட்கள் தொடர்ந்து உங்கள் ஊருக்கு அருகில் உள்ள பெருமாள் கோவிலை சுற்றவும்,கோவிலை சுற்றும்போது “ஓம் நமோ நாராயணாயா” என்ற மந்திரத்தை மனதிற்குள் உச்சரிக்கவும்.இதை ஜென்ம நட்சத்திரத்தன்று அல்லது ஒரு திங்கள் கிழமையில் தொடங்கவேண்டும். 40 நாட்கள் பெருமாள் கோவிலை சுற்றிய பின் ராமேஸ்வரம் சென்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடவும்.

 


பிரத்துரு சாபம்: 


துளசி,வில்வம் போன்ற தாவரங்களுக்கு நீர் ஊற்றி வரவும்.புண்ணிய நதிகளில் செவ்வாய் கிழமைகளில் நீராடவும்.

 


மாதுல சாபம்: 


ஒரு புதன் கிழமையில் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களை தானமாக கொடுக்கவும்


பிராமண சாபம்: 


பத்து திங்கள் கிழமை,ராகு காலத்தில் சிவனுக்கு ருத்ராபிசேகம் செய்யவும்.


களத்திர சாபம்: 


ஒரு வெள்ளிகிழமையில் பெருமாள் கோவிலிலுள்ள தாயாருக்கு திருமாங்கல்யம் சாத்தி வழிபடவும்.


பிரேத சாபம்:


சனிகிழமை ராகு காலத்தில் ருத்ரம் படிக்கவும் அல்லது வீட்டில் மிருத்யுஞ்சய ஹோமம் செய்யவும்.


சர்ப சாபம்: 


நாக பிரதிஷ்டை செய்து வழிபடவும்.


சாது சாபம்: 


வீட்டில் கணபதி ஹோமம் செய்யவும்.

 

 

 

 

 

 

 

நேரம் : 06:55 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்