முகநூல் விருப்பம்

பரிகாரம்

 பித்ரு தோஷமும் - பரிகாரமும்

பதிவு நாள் December 31, 2016 

Image result for சூரியன் சனி 

 

 
 
 
 
 
 
 
புத்திர ஸ்தானத்தில் ,சூரியன் நீசனாக இருந்தாலோ அல்லது சூரியன் ,புத்திர ஸ்தானாதிபதியாக இருந்து நீசத்தை அடைந்தாலோ ,
நாவாம்சத்தில் அந்த சூரியன் ,மகர - கும்பம் ராசிகளில் இருந்தாலோ ,பித்துரு சாபத்தினால் தோஷம் என்று அறிக...
 
லக்கினத்தில் அல்லது 5ல் சூரியன் ,சனி ,செவ்வாய் ,இருந்து 6 அல்லது 8 ல் ராகுவோடு சேர்ந்த வியாழன் இருந்தால் பித்ரு தோஷம் .,
 
12 குடையவன் ,லக்கினத்திலிருந்து , 8 குடையவன் புத்திரன் ஸ்தானத்திலிருந்து ,இவர்களில் யாராவது ஒருவருக்கு 9 குடையவன்  சம்பந்தம் ஏற்பட்டால் பித்ரு தோஷம் ஏற்படும் .,
 
இதற்கு சாந்தி :- (பணக்காரனாய் இருந்தால்)
 
( தனி ஆளாய் இருந்தால் கயா சிரார்த்தம் ) வத்ஸதேனு (கன்றுவோடு கூடிய பசு) தானம் ,சகஸ்ர (1000 பேருக்கு ) பிராமண போஜனம் ,இவைகளை செய்தால் தோஷம் நீங்கி வம்சம் செழிக்கும் .,
 
சுமாரான வசதியில் உள்ளவர்கள் :
 
ராமேஸ்வரம் சென்று தீபஹோமம் ,தீப தர்ப்பணம் செய்ய வேண்டும் .,
 
ரொம்பவும் வசதி இல்லாதவர்கள் .,
 
எள்ளையும் ,வெல்லத்தையும் கலந்து பசுவிற்கு மத்தியான காலத்தில் ஒரு மண்டலம் ( 48 நாள் )கொடுக்கவும் .,
 
மிக மிக வசதி குறைந்தவர்கள் :
 
சிறிது எள்ளையும் - வெல்லமும் கலந்து கொண்டு ஒரு மண்டலம் அசுவத்த பிரதட்சணம் (அரசமரம் சுற்றுதல்)செய்து ,அதனை மரத்தடியிலேயே போட்டு விடவும் .
 
 
 
 
 
 
 
 
 
 
 

நேரம் : 07:34 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்