முகநூல் விருப்பம்

பரிகாரம்

கொடுத்த பணம் திரும்ப வர தாந்த்ரீக பரிகாரம்

பதிவு நாள் June 30, 2015

இங்கே கொடுத்துள்ள மந்திர வார்த்தை மிக சக்தி வாய்ந்தது.

பணம் அல்லது நகை போன்றவைகள் கொடுத்து திரும்ப வராமல் இழுபறி ஆகி கொண்டே இருப்பின் இவற்றை செய்யலாம்.

பணம் வாங்கியவர் நலிந்து போய் இருப்பின் இதை செய்து பலன் இல்லை. கொடுக்காமல் ஏமாற்றுபவர்களிடம் இருந்து திரும்ப பெற மட்டுமே இதை உபயோகிக்கவும்.

இந்த முறையால் வாங்கியவருக்கு வேறு எந்த பாதிப்பும் வராது. மனம் மாறி பணத்தை கொடுப்பார்.அவ்வளவே.

ஒரு சிறிய செப்பு (Copper) தட்டு அல்லது பெட்டியில் பணம் வாங்கியவரின் படம் வைத்து (படம் இல்லை எனில் ஒரு சிறிய தாளில் அவரின் பெயர், வாங்கிய தொகை மற்றும் நாள், முகவரி போன்ற விவரங்கள் வைக்கலாம்)

அதன் அருகில் சிறிய இஞ்சி துண்டு 1, சிகப்பு மிளகாய் 2, ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி போட்டு விரலில் சிறு அளவு குங்குமத்தை வைத்து கொண்டு அர்ச்சிப்பது போல் கீழ் கண்ட மந்திரத்தை 9 முறை கூறி ஒவ்வொரு முறையும் அதை படம் அல்லது தாள் முன்பு இட்டு பின்பு பெட்டியை மூடி வைத்து விடவும்.

பணம் வரும் வரை செய்து வரவும். நேரம் காலம் எதுவும் இல்லை.எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். செவ்வாய் கிழமையில் ஆரம்பிக்க சீக்கிரமே பணம் திரும்ப வரும்.

முக்கியம் : இதை செய்து வர தானே தேடி வந்து கொடுப்பார் என எதிர் பார்க்க வேண்டாம்.

தங்களின் முயற்சியும் முக்கியம். ஏமாற்றுபவரின் மன நிலை மாறுதலுக்கே இந்த முறை என்பதை நினைவில் கொள்க.

பணம் வந்ததும் பெட்டியை ஓடும் ஆற்றில் இட்டு விடவும்.

மந்திரம் : "லிமாந் நும்பாஸ் டிர்ட் கிலும்"

நேரம் : 08:30 PM

பரிகாரம்

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்