முகநூல் விருப்பம்

பஞ்சபட்சி

பஞ்சபட்சி சாஸ்திரத்தின் பயன்பாடுகள்

பதிவு நாள் January 01, 2017

Image result for பஞ்சபட்சி சாஸ்திரம்

 

 

பஞ்சபட்சி சாஸ்திரத்தின் பயன்பாடுகள் இரு வகையாக கூறப்பட்டுள்ளன.

மனிதனுக்கு கொடுப்பினையாக சில பலன்கள் நடக்கும் என கூறப்பட்டுள்ளது, இது ஒரு வகை.

 

மனிதன் பஞ்ச பட்சிகளின் தொழிலறிந்து சுய முயற்சியாக ஒரு சில காரியங்களில் ஈடுபட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பது மற்றொரு வகை. 

 


கொடுப்பினையாக நடப்பவை:


1. ஒரு மனிதனின் பிறப்பு நேரத்திற்குரிய பட்சி பிறப்பு நேரத்தில் என்ன தொழில் செய்கிறதோ அதைப்பொருத்து அவன் வாழ்க்கைத்தரம் அமையும்.

தன் பட்சி அரசு,ஊண் தொழில் புரியும் நேரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை சுகமானதாகவும்,நடை,துயில்,சாவு தொழில் புரியும் நேரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை சிரமமாகவும் அமையும்.


2. ஒரு பெண்ணின் பூப்பு நேரத்திற்குரிய பட்சி பூப்பு நேரத்தில் என்ன தொழில் செய்கிறதோ அதைப்பொருத்து அவள் வாழ்க்கைத்தரம் அமையும்.

பட்சி அரசு,ஊண் தொழில் புரியும் நேரத்தில் பூத்தவளின் வாழ்க்கை சுகமானதாகவும்,நடை,துயில்,சாவு தொழில் புரியும் நேரத்தில் பூத்தவளின் வாழ்க்கை சிரமமாகவும் அமையும்.


3. ஒருவர் நோய்வாய்ப்படும் நேரத்தில் அவருடைய பட்சி என்ன தொழில் செய்கிறதோ, அதைப்பொருத்து நோய் நீங்கும் காலக்கெடு அமைகிறது.

 

தன் பட்சி அரசு, ஊண் தொழில் புரியும் நேரத்தில் நோய்வாய்ப்பட்டால் நோய் விரைவில் குணமாகிவிடும். நடை,துயில் தொழில் புரியும் நேரத்தில் நோய்வாய்ப்பட்டால் நோய் நீங்க சற்று காலதாமதமாகும்.

 

சாவு தொழில் புரியும் நேரத்தில் நோய்வாய்ப்பட்டால் நோய் குணமாகாது.


மேற்கண்ட பலன்கள் மனித முயற்சிகள் எதுவும் இல்லாமல், மனிதனின் கட்டுப்பாடுகளுக்குள் அடங்காமல் இயல்பாக நடப்பவை. 

 

சுய முயற்சியால் நடப்பவை:


ஒருவர் தான் செய்யும் தொழிலில் சிறந்து விளங்கவும், பகைவரை வெற்றிகொள்ளவும், வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றிபெறவும், பணம் கொடுக்கல், வாங்களில் ஈடுபடவும்,சுப காரியங்கள் தொடங்கவும், மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொள்ளவும் பஞ்ச பட்சிகளின் தொழிலறிந்து செயல்படவேண்டும் என்பது பஞ்சபட்சி நூல்களில் காணப்படும் கருத்து.

 

தன் பட்சி அரசு,ஊண் தொழில் புரியும் காலத்தில் சுப காரியங்களில் ஈடுபட்டால் வெற்றியடையலாம்.

 

தன் பட்சி நடை தொழில் புரியும் காலத்தில்தொடங்கப்படும் காரியங்கள் இழுபறியாக முடியும்.

 

தன் பட்சி துயில்,சாவு தொழில் புரியும் காலத்தில் தொடங்கப்படும் காரியங்கள் வெற்றியடையாது.

 

 

 

 

 

 

 

நேரம் : 05:50 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்