முகநூல் விருப்பம்

பஞ்சபட்சி

பஞ்ச பட்சிகளின் தொழில் கால அட்டவணை.....!!!

பதிவு நாள் December 27, 2015

 

 
படு பட்சி நாட்கள் என்பது மிகவும் மோசமான பலன்களைக் கொடுக்கக் கூடியது .
இதனுடைய கொடிய பலன்களிலிருந்து தப்பிக்க ஒரு பரிகாரம் சொல்லியிருக்கிறார்கள்.
 
ஓம் நமசிவயஎன்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபம் செய்து விட்டு சென்றால் அதன் கடுமை குறையும் என்று. (இதை மசிவயந, சிவயநம, நசிவயம  என்று 125 வகையில் மாற்றி சொல்லலாம். பலன் ஒன்றுதான்.) ஆயினும் முழுமையாக படு பட்சி நாளின் கடுமையை கட்டுப்படுத்தி விட முடியாது என்பதுதான்  கருத்து.
 
நாளும் கோளும் சிவனடியார்களை ஒன்றும் செய்து விட முடியாது என்று கோளறு திருப்பதிகத்தைப் பாடி தன் பயணத்தைத் தொடர்ந்த  திருஞானசம்பந்தரே அதன் பிடியில் இருந்து தப்ப முடியாமல் போய் விட்டது. நாமெல்லாம் எம்மாத்திரம்.
 
 
பறவைகள் ஐந்து...... அதன் தொழில்கள் ஐந்து......
 
எந்த பறவை எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன தொழில் செய்யும் என்று பார்ப்போம்.
 
ஒரு நாளில் மொத்தம் 24 மணி = 60நாளிகை. பகல் = 30 நாளிகை, இரவு = 30 நாளிகை.
 
அது ஐந்து பறவைகளுக்கும் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு பகல் (அல்லது இரவில்) தன் தொழிலைச் செய்ய ஒவ்வொரு பறவையும் 6 நாழிகைகள் எடுத்துக் கொள்ளும்.
 
6 நாழிகைகள் என்பது 2 மணி 24 நிமிடங்கள். முதல் 6 நாழிகை ஊண் என்றால் அடுத்த 6 நாழிகை நடை அல்லது வேறு ஒரு தொழில் என்று வரும்.


உண்மையில் உற்றுக் கவனித்தீர்களானால் வளர் பிறை பகல் தொழில் முறையே ஊண், நடை, அரசு, துயில், சாவு என்று வரும்.
 
இரவு ஊண், அரசு, சாவு, நடை, துயில் என்று வரும். அதே போல் தேய்பிறை பகல் ஊண், சாவு, துயில், அரசு, நடை என்றும் இரவில் ஊண், துயில், நடை, சாவு, அரசு என்ற இந்த வரிசையில் வரும்.
 
எல்லா பட்சிகளுக்கும் வளர்/தேய் பிறைகளில் ஞாயிறு செவ்வாய், ஒரே மாதிரியான தொழில் இருக்கும். வளர் பிறைகளில் திங்கள், புதன் தேய்பிறைகளில் திங்கள், சனி, பட்சிகளின் தொழில் ஒரே மாதிரி இருக்கும். மற்ற கிழமைகளில் அந்தந்த கிழமைக்கு தகுந்தாற்போல் மாறி வரும். 


கீழே ஒரு அட்டவணையை பார்த்துக் கொள்ளுங்கள்.
சூரிய உதயம் காலை 6 மணி என்ற நிலையில் இதைத் தந்திருக்கிறேன். நீங்கள் இருக்கும் நாட்டில் சூரிய உதயம் 6.30 மணி என்றால் அந்த நேரத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.


 

வல்லூறு - வளர்பிறை

 
 
 
 
 
 
 
நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், கோழி 
 
 
 
==================================================================
 
 
 
வல்லூறு - தேய் பிறை 


 
 

 
 
 
நட்பு : மயில், காகம்
பகை : ஆந்தை, கோழி 
==================================================================
 
 
 
 
 
ஆந்தை - வளர்பிறை 
 
 
 
 
 
 
 
 
 
 
நட்பு : வல்லூறு, காகம்
பகை : மயில், கோழி
 
 
 
=====================================================================
 
 
 
 
 
ஆந்தை - தேய்பிறை 
 
 
 
 
 
 
 
 
நட்பு : கோழி, காகம்
பகை : வல்லூறு, மயில்
 
 
 
====================================================================
 
 
 
 
காகம் - வளர்பிறை
 
 
 
 
 

 
 
 
 
நட்பு : ஆந்தை,கோழி
பகை : வல்லூறு, மயில்
 
 
 
 
======================================================================
 
 
 
 
காகம் - தேய்பிறை
 
 
 
 
 

 
 
 
 
 
நட்பு : ஆந்தை, வல்லூறு
பகை : மயில், கோழி
 
=====================================================================
 
 
 
 
கோழி - வளர்பிறை
 
 
 
 

 
 
 
 
நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், வல்லூறு 
 
======================================================================
 
 
 
 
 
கோழி - தேய்பிறை
 
 
 
 
 

 
 
 
 
நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், வல்லூறு
 
======================================================================
 
 
 
 
 
மயில் - வளர்பிறை
 
 
 
 

 
 
 
 
 
நட்பு : வல்லூறு, கோழி
பகை : ஆந்தை, காகம்
 
 
=====================================================================
 
 
 
 
 
மயில் - தேய்பிறை
 
 
 
 

 
 
 
 
நட்பு :  வல்லூறு, கோழி
பகை : ஆந்தை, காகம்
 
======================================================================
 
 
 
 
ஊண் பட்சி நாட்களை மஞ்சள் நிறத்திலும், படு பட்சி நாட்களை சிவப்பு நிறத்திலும் இரண்டும் கலந்து வந்தால் ஆரஞ்சு நிறத்திலும் highlight செய்து உள்ளேன்.
 


நட்பு பட்சியாக உள்ளவர்களுடன் கூட்டு சேர்வது நன்மை பயக்கும். பகை உள்ளவர்களிடம் சற்று தள்ளியே இருப்பது நல்லது.


 

 

 

 

நேரம் : 01:28 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்