முகநூல் விருப்பம்

ஜோதிடம்

குரு பெயர்ச்சி பலன்கள் -2015-2016---குருபெயர்ச்சி என்ன செய்யும் ?

பதிவு நாள் June 24, 2015

வாக்கிய பஞ்சாங்கப்படி 05-07-2015 அன்று இந்திய நேரப்படி இரவு 09;36 மணிக்கும்,

திருக்கணித பஞ்சாங்கப்படி 14.7.2015 செவ்வாய்க்கிழமை காலை 6.23 மணிக்கும் குரு பகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் பிரவேசம் ஆகின்றார்.

குரு பகவானைப் பற்றி.....

இது சூரியனுக்கு சுமார் 48,00,00,030 KM தூரத்திற்க்கு அப்பால் இருந்து சூரியனை சுற்றி வருகிறது.

இது தன்னைத்தானே9 மணி 55 நிமிடங்களில் சுற்றுகிறது.

ஜோதிடத்தில் குரு புத்திரகாரன் எனஅழைக்கப்படுகிறது.

மந்திரம்,ஞாபகசக்தி,வேதமந்திர சாஸ்திர அறிவு,யானை,குதிரை போன்ற வாகன அந்தஸ்து,பணம்,பிராமண உபசாரம் இது அனைத்திற்க்கும் குருவே காரகன் ஆகிறார்.

குரு பார்க்க கோடி புண்ணியம். குரு பார்க்க தோஷ நிவர்த்தி.

இவரின் பார்வையால் அனைத்து தோஷமும் நீங்கும்.

ஆனால் குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும்.

ஆட்சி பெறும் ராசி -  தனுசு, மீனம்
உச்சம் பெறும் ராசி  -  கடகம்
நீச்சம் பெறும் ராசி - மகரம்
நட்பு பெறும் ராசிகள் -  மேஷம், சிம்மம், கன்னி,விருச்சிகம்,
சமம் -  கும்பம்
பகை பெறும் ராசிகள் -  ரிஷபம், மிதுனம், துலாம்
மூலத்திரிகோணம் -  தனுசு
சொந்த நட்சத்திரம் -  புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

திசை -வடக்கு
அதிதேவதை -பிரம்மன்
ஜாதி -பிராமணன்
நிறம் -மஞ்சள்
வாகனம் -யானை
தானியம் -கடலை
மலர் -முல்லை
ஆடை -மஞ்சள், பொன்னிறம்
ரத்தினம் -புஷ்பராகம்
செடி / விருட்சம் -அரச மரம்
உலோகம் -தங்கம்
இனம் -ஆண்
அங்கம் -இதயம்
நட்பு கிரகங்கள் -சூரியன், சந்திரன், செவ்வாய்
பகை கிரகங்கள் -புதன், சுக்கிரன்
சுவை -இனிப்பு
பஞ்ச பூதம் -நெருப்பு
நாடி -வாதம்
மணம் -ஆம்பல்
மொழி -சமஸ்கிருதம், தெலுங்கு
வடிவம் -உயரமானவர்
குருவுக்குரிய கோயில்-திருச்செந்தூர், ஆலங்குடி


குருவின் காரகத்துவம்

வயிறு, (குடல் பகுதி), மூக்கு, கொழுப்பு, தொடை, வீட்டில் கடவுள் அறை, நீதிபதி, ஆசிரியர், வழங்குபவர், கல்வி அமைச்சர், மேலாளர், வழக்கறிஞர், கணக்காளர்,கணக்காய்வாளர், வேதங்கள், கோயில்கள், தத்துவம், கடவுள், மரியாதை, உண்மை, பொறுமை, தன்னடக்கம்.

எல்லாவிதமான சுபம். பெரிய அளவிலான பணம். நேர்மை. சிந்தனை. சட்டபடியான ஆணை. பட்டு. பருத்தி. மஞ்சள் தொழில்கள். மிகப் பெரிய நிறுவனங்களின் கூலியாட்கள். கல்லீரல். தசைகள். மதகுருக்கள். தர்மர்த்தாக்கள். திருப்பனி குழுக்கள். கோயில் ட்ரஸ்டிகள்.

எல்லாவற்றிலும் கவுரவம் பார்ப்பவர்கள். திருப்தியற்ற மனிதர்கள். ரகசியமாக பகையை தீர்த்துக்கொள்பவர்கள், சந்தோஷம். குழந்தை. பூர்வீகம். ஆச்சார்யன். மதகுரு. விந்து. ஜீவன். பழங்கள். பாரம்பரியமிக்க. உணவுகள்.வம்சம். முப்பாட்டன். பிராமணன். தங்கம். பட்டாடை ஆண்களுக்கு உயிர். மதம். மதத்தன்மை. எமபயம் நீக்கும். தசைகள். கல்லீரல். புற்று. வயிற்றுப் பகுதி நோய்கள்.மஞ்சள்காமாலை.

தட்சிணாமூர்த்தி. இருந்தாலும் பார்த்தாலும் சுபம்.

எல்லாவற்றிற்கும் உயிர்.

ஒருவனின் முன்வினைக் கர்மப்படிதான் குரு அவனுடைய ஜாதகத்தில் வந்து அமர்வார்.

குரு நல்ல இடத்தில் அமர்ந்திருந்தாலும், நல்ல சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருந்தாலும், அத்துடன் அஷ்டகவர்கத்தில் அதிகப்பரல்களைப் பெற்றிருந்தாலும், அவனுடைய முன்வினைகளில் குறைகள் ஏதும் இல்லை என்று பொருள் கொள்க....

வேத நூல்கள் குருவை, பிரஹஸ்பதி என்று சொல்கின்றன. ஆசிரியன் என்று சொல்கின்றன. தேவகுரு என்கின்ற இன்னொரு பெயரும் அவருக்கு உண்டு. நன்மைகளை அள்ளித்தரும் தன்மையுடையவர் என்பதால் கிரகங்களில் அவர்தான் முதன்மையானவர். முழு முதற் சுபர்.


ஐந்து இடங்களில், கோச்சாரக் குருவினால் நல்ல பலன்கள் கிடைக்கும்

இரண்டாம் வீட்டில்: பணவரவுகள்.

ஐந்தாம் வீட்டில்: பண லாபங்கள், புத்திரபாக்கியம், புத்திர லாபம், பெண்சுகம்.

ஏழாம் வீட்டில்:மதிப்பு மரியாதை, செல்வாக்கு கிடைக்கும் காலம் பணவரவுகள் அதிகரிக்கும் காலம்

ஒன்பதாம் வீட்டில்:மனைவி மக்கள் சுகம், தனலாபம், எடுத்துச் செய்யும் செயல்களில் வெற்றி கிட்டும் காலம்

பதினொன்றாம் வீட்டில்: மகிழ்ச்சியான காலம். நினைத்தது நிறை வேறும் இந்த ஓராண்டு சஞ்சாரத்தில்!

நினைவில் கொள்க...இந்தக் கோச்சாரப் பலன்கள் எல்லாம் நல்ல தசாபுத்திகள் நடந்தால்தான் கிடைக்கும்.

அதே போல குரு சுயவர்க்கத்தில் குறிப்பிட்ட அந்த இடத்தில் உள்ள தனது பரல்களை வைத்துத்தான் பலன் கொடுப்பார். அவருக்கு சுய வர்க்கத்தில் எட்டுப் பரல்கள் இருந்தாலும், சுற்றிவரும் இடத்தில் தன்னுடைய கட்டத்தில் உள்ள பரல்களுக்குத் தக்கபடிதான் பலன் தருவார்.

பொதுவாக, குரு, 5ஆம் இடம், 7ஆம் இடம், 9ஆம் இடம் மற்றும் 11ம் ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் திருமணம் தடைப்பட்டிருந்தவர்களுக்கு திருமணத்தை நடத்தி வைப்பார். குழந்தை பேறுக்காக காத்திருந்தவர்களுக்கு குழந்தையைத் தருவார். இடம், வீடு வாங்க காத்திருந்தவர்களுக்கு அந்த வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பார்.

ஏழு இடங்களில் கோச்சாரக் குருவினால் நல்ல பலன்கள் கிடைக்காது.......

முதல் வீட்டில்: சாதகம் இல்லாத சூழ்நிலைகள் உள்ள காலம் ....... நிலைதடுமாற்றங்கள். வாக்குவாதம், கலகங்கள், மந்தமான போக்குகள் உள்ள காலம் இந்த ஒராண்டு காலம்

மூன்றாம் வீட்டில்:மனம், மற்றும் உடல் நலக் குறைவுகள், பதவி நீக்கம் அல்லது பதவி மாற்றம். துன்பங்கள்

நான்காம் வீட்டில்: உறவுகள் மூலம் துன்பங்கள்.சுகமின்மை

ஆறாம் வீட்டில்: சுகக்குறைவுகள்

எட்டாம் வீட்டில்:துக்கம். மரணத்திற்குச் சமமான கஷ்டங்கள் பத்தாம் வீட்டில்: பதவி துறத்தல் அல்லது பதவியில் இடம், ஊர் மாற்றம் பண நஷ்டங்கள்.

பன்னிரெண்டாம் வீட்டில்: துக்கம், தூர தேசம் போய் வருதல் அல்லது தொலைவான இடம் சென்று வசித்தல், தனவிரையம். நிலைமாற்றம் போன்றவை இருக்கும் அந்த ஓராண்டு காலத்தில்.

பொது பலன்கள் கீழே .....

இவை எல்லாம் தசா புத்திகளை  பொருத்து மாறுபடும் .......நல்ல தசா புத்தி நடந்தாலும் ,அஷ்டகவர்க்கத்தில் நல்ல பரல்களை கொண்டிருந்தாலும் ,பலன்கள் வேறுபடும் என்பதை நினைவில் கொண்டு மேலே தொடரவும்.

மேஷ ராசிக்காரர்களுக்கு திருமண ஏற்பாடு நடைபெறும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகள் உருவாதற்க்கு வழி பிறக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் வருமானம் வரும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். விவசாயத்தில் லாபம் ஏற்படும். வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கலாம்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு சாப்பாட்டிற்க்கு கஷ்டம் ஏற்படும். மனது ஒரு முடிவு எடுக்காது. செய்துக்கொண்டிருக்கும் தொழிலில் ஆதாயம் எதிர்பார்க்க முடியாது. கல்வி சம்பந்தமாக நல்ல விஷயங்கள் வரும். படிப்புக்கு உதவி கிடைக்கும்.. வீடு வாகனம் சொத்துகள் என சுப விரயம் செய்ய இதுதான் சரியான நேரம்.

மிதுன ராசிக்காரர்களுக்கு நண்பர்களிடத்தில் விரோதம் ஏற்படும். பொருள் வரவில் கடுமையான தடை ஏற்படும். வீணான அவச்சொல் ஏற்படும். வீண் அலைச்சல் ஏற்படும். காதல் இருந்தால் முறிந்து விடும். கடுமையான பணத்தட்டுபாடு ஏற்படும்.தாயாருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். சுமாரான பணவரவு விவசாயத்தின் மூலம் ஏற்படும்.

கடக ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் நிலையில் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். செய்கின்ற தொழிலில் நல்ல வருவாய் கிடைக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். எதிரிகளிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. கூட்டு தொழில் செய்பவர்களுக்கு மனகஷ்டம் ஏற்படலாம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் ஒரு வெறுப்பு வந்துவிடும். வீணான கவலை மனதில் வாட்டி எடுக்கும். பல வழிகளில் பணம் விரையம் ஏற்படும். மனைவி வழியில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். செய்கின்ற தொழிலில் மாற்றம் ஏற்படும். மனைவி குழந்தைகள் ஆதரவு இருக்கும். அளவுக்கு அதிகமாக வேலை செய்ய நேரிடும். கட்டிட பணி நடைபெறும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு அதிகாரிகள் தொல்லை இருக்கும். செய்கின்ற தொழிலில் நிம்மதி இருக்காது.. உடல் நலனில் பிரச்சினை ஏற்படலாம். பெண்களால் தொல்லை ஏற்படலாம். வெளிநாடு செல்ல வாய்ப்பு கிட்டும். இடமாற்றம் உண்டு.

துலாம் ராசிக்காரர்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினை தீரும். வறுமை மறையும். கணவன் மனைவி உறவு நல்லவிதமாக இருக்கும். மூத்த சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். எந்த பிரச்சினையும் தைரியமாக எதிர்த்து வெற்றி பெற வைப்பார். உங்கள் குழந்தைகளுக்கு திருமண ஏற்பாடு நடைபெறும். எதிலும் லாபத்தை எதிர்பார்க்கலாம். அரசாங்க உதவி கிடைக்கும்.

விருட்சிக ராசிக்காரர்களுக்கு இதுவரை செய்து வந்த தொழிலில் இருந்து விடுபட்டு புதிய தொழிலில் போய் சேருவீர்கள். பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும். குரு பத்தில் இருக்கும் காலத்தில் பாதி காலம் மட்டுமே துன்பம் தருவார். பாதி காலம் முடிந்த பிறகு நல்லது நடக்கும். தடைபட்ட தொழில் ஆரம்பம் ஆகும். நல்ல பணவரவு இருக்கும். தடைபட்ட திருமண பேச்சு ஆரம்பித்து திருமண ஏற்பாடு நடக்கும். நீங்கள் எதிர்பாக்காத ஒரு புதிய வாய்ப்பு உங்களை தேடி வரும். பூர்வீக சொத்தில் ஏதும் பிரச்சினை இருந்து வந்திருந்தால் அது நல்லவிதமாக முடிவுக்கு வரும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியம் வெற்றி பெறும். நல்ல பலன்கள் அதிகமாக நடைபெறும். திருமணம் நடைபெறும். உயர்கல்வி வாய்ப்பு கிட்டும். புதிய பொருள் வாங்கலாம். சமுதாயத்தில் நல்ல மதிப்பு மரியாதை கிடைக்கும். கவலைகள் அனைத்தும் விலகும். உடல் நல பாதிப்பில் இருந்து வந்தால் அது நிவர்த்தி ஆகும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் இருந்து வந்தால் அந்த பிரச்சினை தீரும். மற்றவர்கள் புகழ்ந்து பேசும் அளவுக்கு செயல்படுவார்கள். பொதுவாக பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் வந்தால் அனைத்து பாக்கியமும் கிடைத்துவிடும்.

மகர ராசிக்காரர்களுக்கு குரு அஷ்டமத்தில் வருகிறது “அகப்பட்டவனுக்கு அஷ்டம குரு” என்பார்கள். எதிர்பாராத செலவு வரும். கணவன் மனைவி உறவில் பிரச்சினை வரும். எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. துன்பங்களைத் தருவார். அதே போல் சில சமயம் நன்மைகளும் தருவார். தனவரவு இருக்கும்.. வழக்கு விஷயத்தில் கவனம் தேவை. தெரியாத நபர்களுக்கு சாட்சி கையெழுத்து போட வேண்டாம். அதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படலாம்.

கும்ப ராசிக்காரர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தைகள் இல்லை என்றால் குழந்தைகள் உருவாகும். புதிய தொழில் வாய்ப்பு உருவாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உங்களை சேர்ந்த உறவினர்களிடத்தில் நல்ல மதிப்பு உண்டாகும். உடல் நிலை நல்ல ஆரோகியத்துடன் இருக்கும். நண்பர்கள் உதவியால் கூட்டு தொழில் தொடங்கலாம். உங்கள் பெற்றோருக்கு உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிப்பதற்க்காக கடன் வாங்கலாம். கடன் கேட்ட உடனே கைக்கு பணம் வந்து சேரும்.

மீன ராசிக்காரர்களுக்கு நோய் தொல்லை ஏற்படும். நண்பர்களிடத்தில் வீணான தகராறு ஏற்படும். செய்கின்ற தொழிலில் நஷ்டம் ஏற்படும். மனைவி மக்கள் ஆதரவு இல்லையென்றால் குடும்பமே வேண்டாம் என்ற மனநிலை ஏற்படும். விரோதிகள் கை ஓங்கும். புதிய தொழில்கள் தொடங்குதல் கூடாது. தொழில் அமையும் வரை இருக்கும் தொழிலை அனுசரித்துச் செல்வது நல்லது. வேலையில் வீண் சண்டை சச்சரவில் ஈடுபட வேண்டி வரும்.....கவனம்.

 

பரிகாரம்....???? ....குரு தட்சிணாமூர்த்தியை வழிபடுவது மட்டுமே.

 

நேரம் : 06:47 PM

ஜோதிடம்

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்