முகநூல் விருப்பம்

ஜோதிடம்

ராகு கேது பெயர்ச்சி-2016-2017- உலகளவில் என்ன மாற்றம் வரும்...?

பதிவு நாள் December 20, 2015  

 

ராகு-கேது பெயர்ச்சியால் (2016-2017) உலகளவில் என்ன நிகழ வாய்ப்புள்ளது என்பதை சுருக்கமாக பார்ப்போம்…

சிம்மம்-கும்பத்தில் ராகு,கேதுக்கள் நின்றிருக்க சிம்ம ராசிக்கு கேந்திரத்தில் (சிம்மத்திற்கு 1-4-7-10ல்) சூரியன் வரும் காலங்களில் உலகம் முழுவதும் அரசியல் குழப்பங்கள் ஏற்படும்.
 
ஆட்சி மாற்றங்கள் ஏற்படும்.
 
ஆட்சியாளர்களுக்கு பல விதமான பிரச்சினைகள் உண்டாகும்.

சூரியனுக்கு ராகுவும், சந்திரனுக்கு கேதுவும் மிகவும் பகை என்பதை ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது…
 
இதன் படி ஸ்ரீ ராகு பகவான் தன் பகை கிரகமான சூரியனின் சிம்மராசியில் சஞ்சாரம் செய்வதும், ஸ்ரீ சனீஸ்வரரின் பார்வையை பெறுவதும் உலகளவில் மிக மோசமான நிலையையே ஏற்படுத்தும்…
 
அதாவது, ஸ்ரீ ராகு பகவான் மிக கொடுமையான வைரஸ் நோய், ரசாயணம் (வெடிகுண்டு) போன்றவற்றிற்கு காரணமானவர்…
 
இவர் ஆயுள் காரகனான சனிபகவானின் பார்வையை பெறுவது உலகளவில் மிகக்கொடுமையான வைரஸ் நோய் மற்றும் தீவிரவாதத்தால் பல உயிர்களை பலி வாங்க உள்ளது என்றே கூறலாம்…
 
இதற்கு ஏற்றார் போல் பூமி, இரத்தத்தின் காரகன் ”செவ்வாய் பகவான்” 27-02-2016 முதல் ஆறரை மாதங்கள் தன் பகைவனான சனிபகவானுடன் இணைகிறார்…
 
மேலும், செவ்வாய்-சனி இருவரும் இணைந்து ஒரே நேரத்தில் வக்ரமடைகிறார்கள்…
 
சனிபகவானின் பார்வையை ராகுவும், செவ்வாயின் பார்வையை கேதுவும் பெறுவது பேரழிவை குறிக்கிறது…
 
இந்த பேரழிவை தடுத்து நிறுத்தக் கூடிய “குருபகவானின் பார்வை”யோ இந்த கிரகங்களுக்கு இல்லை…
 
பொதுவாக சொன்னால் ராகு பகவானின் சஞ்சாரம் மட்டுமல்ல…
செவ்வாய், சனி ஆகிய கிரகங்களின் சஞ்சாரம், சேர்க்கை, பார்வை உலகளவில் இயற்கை சீற்றங்கள், நோய்நொடிகள், உயிரிழப்புகள், பொருளாதார நெருக்கடி போன்றவற்றை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது…
 
குறிப்பாக தை, வைகாசி, ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் பேரழிவுகள் நடைபெற வாய்ப்புள்ளது…
 
 
 
 

நேரம் : 05:20 PM