முகநூல் விருப்பம்

கோவில்கள்

எமபயம், மரணபயம் நீங்கிட வணங்க வேண்டிய தலம் - திருக்கடையூர்.

பதிவு நாள் January 01, 2017

 
 
Image result for திருக்கடையூர்.
 
 
ஒரு மனிதனின் லக்னத்திலிருந்து 8-ஆவது இடமே மரணத்தைக் காட்டுவதாகும். மரணத்தை உண்டாக்கும் தசைகள் நடப்பிலிருக்கும் பொழுது, மரணபயம் பீடிக்கின்றது.


 
இத்தகைய மரணபயம் நீங்கிட நாம் வணங்க வேண்டிய தலம்
திருக்கடையூர்.
இறைவன்- அமிர்தகடேஸ்வரர், இறைவி- அபிராமி, தலமரம் -வில்வம் , தீர்த்தம்-அமிர்ததீர்த்தம்,சிவகங்கை.
 
சிதம்பரத்திலிருந்து- நாகப்பட்டினம் செல்லும் வழியில் இத்தலம் உள்ளது.
பிரம்மனுக்கு உபதேசம் அளிக்கப்பட்ட தலமாகும்.
அபிராமி அந்தாதி பாடல் பெற்ற தலமும் இதுவே.


 
தன் தந்தையான மிருகண்ட மகரிஷியின் கவலையைக் காரணம் கேட்டான் என்றும் 16 வயதுடன் விளங்கும் மார்கண்டேயன்.
 
மகனுக்கு மரண வயது எட்டிவிட்டதாகக் கூறி, மகனை பிடிக்க எமதர்மராஜன் வருகின்றான் எனக் கூறுகின்றார் தந்தை.
 
அதைக் கேட்டு சிறிதளவும் அதிர்ச்சிகொள்ளாமல் அமைதியுடன் இருந்தான் மார்கண்டேயன்.


 
பெரியோர்களின்பால் கொண்ட பணிவினாலும், சிவபெருமானை எண்ணி அவன் மேற்கொண்ட தவத்தினாலும் மார்கண்டேயன் மீது எமன் பாசக்கயிற்றை வீசி அவனின் உயிரை கவ்வும் பொழுது பாசக்கயிறானது சிவபெருமானின் மீதும் சிக்கியது.
 
எமனின் இச்செயலால் கோபமுற்ற சிவன் அவனை எட்டி உதைக்க எமன் மரணமடைந்தான்.


 
அவனின் மரணத்தால் காலச்சக்கரம் நின்று விட, வேறுவழியின்றி மீண்டும் எமனை உயிர் பிழைக்கச் செய்தார் சிவன்.
 
திருக்கல்யாணங்கள், எமபயத்தை நீக்கி, ஆயுளை அதிகரிக்கச் செய்யும் ஆயுஷ் ஹோமங்கள் நடைபெறும் தலமாகவும் இத்தலம் உள்ளது.


 
 
 
 
 
 
 
 
 

நேரம் : 04:06 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்