முகநூல் விருப்பம்

கோவில்கள்

மனநிலை சரியில்லாதவர்கள் வணங்க வேண்டிய திருத்தலம் - குணசீலம்.

பதிவு நாள் January 01, 2017

 
Image result for குணசீலம்
 
 
ஒரு மனிதனுக்கு எப்பொழுதும் மனநிலை பாதிப்பு ஏற்படுகின்றதென்றால், மனோகாரகனான சந்திரன் பாதிக்கப்படும்பொழுது ஏற்படுகின்றது.
 
அம்மனிதனின் ஜாதகத்தில் சனி-சந்திரன், ராகு-சந்திரன், கேது-சந்திரன் , சந்திரன் நீச்சமாகி தசை நடத்தும் அமைப்பும், பிரம்மஹஸ்தி தோஷம் உள்ளவர்களும் மனநிலை சரியற்ற நிலைக்கு உள்ளாகின்றனர்.


 
இவர்களுக்கான தலம், குணசீலம் எனும் பெருமாளின் கோயில்.
 
இங்குள்ள பிரசன்ன வெங்கடேசப்பெருமாள், தாயார் அலமேலு மங்கை அருள் பாலிக்கின்றார்.
 
இத்தலம் திருச்சியிலிருந்து -நாமக்கல் செல்லும் வழியில் 16கி.மீ தொலைவில் உள்ளது.


 
குணசீலர்  எனும் மகரிஷி தவம் செய்த திருத்தலம்.
அவருக்கு பெருமாள் காட்சியருளும் பொழுது, அவரிடம் மகரிஷி இங்கு வருபவர்களின் மனநிலை குணமாக வேண்டுமென வேண்டிக் கொண்டார்.


 
மனநிலை சரியாக வேண்டுவோர்,48 நாட்கள் இங்கு தங்கி காலை, மாலை இருவேளையிலும் காவிரியில் நீராடி இறைவனை பிரார்த்திக்க அதன்படி பரிபூரண நலம் பெறுகின்றார்கள்.


 
இத்தல நாயகர் அளவற்ற சக்தியுடையவர்.மனப்பிறழ்வு அடைந்தவர்கள் இவரை வணங்கி வேண்ட முழுநலம் பெறுகின்றார்கள்.


 
திருப்பதிக்கு இணையான கோயில் இது...திருப்பதிக்கு நேர்ந்து கொண்ட நேர்த்திக் கடனை , திருப்பதி  செல்ல  இயலாதவர்கள் இங்கு வந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தலாம்.


 
 
 
 
 
 
 
 
 

நேரம் : 03:58 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்