
- எண் கணிதம் /
- 2015
முகநூல் விருப்பம்
எண் கணிதம்
காதலில் உங்கள் குணம் எப்படி..?
பதிவு நாள் December 27, 2015
ஒருவரின் பிறந்த ஆண்டு + மாதம் + தேதி =
உம். 2.2.1969 = 2 + 2 + 1 + 9 + 6 + 9 + = 29
இதையும் பிரித்துக் கூட்ட வேண்டும் 2 + 9 = 11
1+1=2 இதுதான் இவருடைய காதல் எண் {love number}
எண் ஒன்று - பெண்ணுக்குரிய குணம்
வாழ்கையை நுனிக்கரும்பு வரை சுவைத்திட ஆர்வமுள்ளவர்.
வரப்போகும் கணவன் தன்னைவிட எல்லா அம்சங்களிலும் உயர்ந்து நிற்க வேண்டுமென்று எதிர்பார்ப்பவர்.
அப்படிப்பட்டவரை ஆதாரனை செய்யத் தவறமாட்டீர்கள்.
லட்சியப்போக்கும், சாதுர்யமும், நகைச்சுவையும் நிரம்பியவர்.
எண் ஒன்று - ஆணுக்குரிய குணம்
மனைவியிடத்தில் விசுவாசத்தோடும், பெருந்தன்மையோடும், நன்றியுணர்ச்சியோடும் இருப்பீர்கள்.
மனைவியின் செயல்களில் குறைக் கண்டுபிடிப்பதைத் தவிர்த்து விடுங்கள்.
அதுவே, உங்கள் வாழ்க்கையை சொர்க்கம் போல் மாற்றிவிடும்.
எண் இரண்டு - பெண்ணுக்குரிய குணம்
கணவர் எள் கொண்டு வா என்றால் எண்ணெய் இதோ என்று சொல்லும் சுபாவம் உடையவர்.
அடிக்கடி உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் தொட்டாற்சிணுங்கி நீங்கள்.
உங்கள் ஒவ்வொரு பணியையும், உங்கள் அலங்காரத்தையும், உங்கள் கணவர்{அ} காதலர் வாய் நிறைய மெச்ச வேண்டுமென்று எதிர்பார்பபவர்.
நீங்கள் நல்ல நகைச்சுவை நிரம்பியவர்.
நீங்கள் இருக்குமிடத்தில் எப்பொழுதும் கலகலப்புத்தான்.
எண் இரண்டு - ஆணுக்குரிய குணம்
நீங்கள் ஒரு காதல் மன்னன்.
அதோடு உங்கள் காதலியின் முறையீடுகளை அனுதாபத்தோடு கேட்டு, தீர்வு காணத் தவறமாட்டீர்கள்.
எண் மூன்று - பெண்ணுக்குரிய குணம்
ஆண்மை நிறைந்தவரையே எதிர்பார்ப்பீர்கள்.
அழகுகூட இரண்டாம் பட்சம்தான்.
நாகரீகத்தை எதிர்பார்ப்பீர்கள்.
வீட்டுப் பணியுடன், வெளிப்பணியையும் திறம்பட வகிக்கக்கூடியவர்.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியின் பாட்டுக்கு இலக்கணம் நீங்களேதான்.
எண் மூன்று - ஆணுக்குரிய குணம்
ஓர் உத்தம புருஷனின் கல்யாண குணங்கள் அத்தனையும் பொருந்தியவர்.
எல்லோருக்கும் பரிசுகளையும் பண்டங்களையும் வாரி வழங்கும் கர்ணன்.
எல்லா விஷயங்களையும் பேதமின்றி விளையாட்டாகவே எடுத்துக்கொள்பவர்.
சுவையான பேச்சாளர். பொறாமை என்றால் அது என்ன விலையென்று கேட்பவர்.
எண் நான்கு - பெண்ணுக்குரிய குணம்
உங்களை நேசிப்பவரிடம் விசுவாசமாகவும், நன்றியுள்ளவராகவும், அனுசரணையுள்ளவராகவும் இருப்பீர்கள்.
நீங்கள் இருக்குமிடத்தில் கும்மாளமும் வேடிக்கையும் சிரிப்பும் தான்.
எண் நான்கு - ஆணுக்குரிய குணம்
குழந்தைகளையும், மனைவியையும் அதிகமாக நேசிப்பவர்.
விசால மனமும், பெருந்தன்னையும் நிறைந்தவர்.
உங்கள் மனதை பறிகொடுத்தவருக்காக உயிரைக் கூட தியாகம் செய்யத் தயங்காதவர்.
பரிபூரண சுதந்திரத்தை வழங்குபவர்.
உங்களை கணவராக அடைபவர் ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
எண் ஐந்து - பெண்ணுக்குரிய குணம்
பெண்மை பரி பூரணமாக குடிகொண்டுள்ளவர் நீங்கள்.
உங்களை மனைவியாக அடையப் போகிறவர்கள் ரொம்பவும் அதிஷ்டசாலிதான்.
உலகை ஒரு சுற்று சுற்றி வர, பேராசை கொண்டவர்.
எண் ஐந்து - ஆணுக்குரிய குணம்
பெண்களிடையே நீங்கள் மிகப் பிரபலம்.
உங்கள் பார்வைக்காக ஏங்கும் பெண்கள் ஏராளம்.
உங்களின் போக்கு எதிர்த்தரப்பினருக்கு அதிர்ச்சியையும் அளிக்கலாம், ஆனந்த்ததையும் அளிக்கலாம்.
உங்களுக்கு காதல் வாழ்க்கை ஒரு சவால்தான்!
எண் ஆறு - பெண்ணுக்குரிய குணம்
குப்பை மேட்டைக்கூட கோவிலாக்கும் கலை நயம் படைத்தவர்.
என் கணவர், என் கு்ழந்தைகள்தான் உலகம் என்று வாழ்ந்து காட்டக் கூடிய உண்மையான தாய் நீங்கள்.
அது அது எங்கு இருக்க வேண்டுமென்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.
ஓர் ஆசாதார மனைவி என்பதற்கு உண்டான அத்தனை தகுதிகளையும் கொண்டவர் .
எண் ஆறு - ஆணுக்குரிய குணம்
காதல் பவித்திரமானது என எண்ணுபவர்.
பெண்ணை மலரெனக் கையாளும் பாங்குடையவர்.
அழகை ஆராதனை செய்யும் அதே சமயத்தில் கவிதைகளையும் எழுதித் தள்ளுவீர்கள்.
மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற வாசகம் உங்களுக்காகவேதான்.
எண் ஏழு - பெண்ணுக்குரிய குணம்
உடுப்பது, உண்பது, பேசுவது, காதலிப்பது எல்லாமே ஏனோ தானோதான்.
பணம், பதவி, பகட்டு எல்லாமே உங்களுக்கு அனாவசியம்தான்....
சராசரிப் பெண்ணின் ஆபாசங்களிலிருந்து வேறுபட்டு தனித்து நிற்கும் ஆபூர்வப்பிறவி நீங்கள்.
எந்த ஒரு விஷயத்திலும் கட்டுப்பாடற்ற தனிக்காட்டு ராணி நீங்கள்.
வெளிவேஷம் போடத்தெரியாதவர்.
எண் ஏழு - ஆணுக்குரிய குணம்
சதா சர்வகாலமும் கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கும் பண்புடையவர்.
அதோடு புத்தகமும் கையுமாய் காரணகாரியத்தில் ஆராய்ச்சில் மூழ்கி விடுவீர்கள்.
ஒரு பெண் உங்களைக் காதலிக்க நேர்ந்தாலும் அவள் என்னை ஏன் காதலித்தாள், எந்த அம்சம் பிரதானம், எந்த அடிப்படையில் காதலித்தாள் என்ற ஆராய்ச்சியில் மூழ்கி, நேசிக்க வேண்டியதையெல்லாம் கைநழுவ விட்டு விடுவீர்கள்.
திருமணவாழ்கை வெற்றியடைவது அதிஷ்டத்தைப் பொறுத்தது.
எண் எட்டு - பெண்ணுக்குரிய குணம்
கலை பொருந்திய, கவர்ச்சி நிரம்பிய முகம்.
முதல் சந்திப்பில் நீங்கள் அகம்பாவம் பிடித்தவர் போல் பழகுவதாக மற்றவர்கள் நினைப்பார்கள்.
ஆனால் பழகப் பழகத்தான் நீங்கள் இனியவர் என்று உணர்வார்கள்.
இஷ்டப்பட்டதை அடையத் தவறமாட்டீர்கள்.
அதிகாரமும், பணமும் உள்ளவரைத் தான் நீங்கள் தேர்தெடுப்பீர்கள்.
நீங்கள் உணர்ச்சி வசப்படும்பொழுது ஒருவரை இமயமலையின் உச்சியில் கொண்டு உட்காரவும் வைப்பீர்கள்; அவரை அதலபாதாளத்திலும் தள்ளுவீர்கள்.
எண் எட்டு - ஆணுக்குரிய குணம்
நல்ல தாம்பத்தியத்துக்கு இடையூராக இருப்பது உங்களின் பொறாமைக் குணம்தான்.
சமூக அந்தஸ்திலும், பொருளாதார மட்டத்திலும் உயர்ந்து நிற்கும் நீங்கள், சொர்க்க வாழ்க்கை அடைவீர்கள்.
வெற்றிகளும், தோல்விகளும் அடுக்கடுக்காக எதிர்பட்டாலும், சிறிதும் மனம் தளராமல் லட்சியவாதியாகச் செயல்பட்டு வெற்றியின் சிகரத்தை எட்டிப் பிடித்திடுவீர்கள்.
நீங்கள் பிறக்கும்பொழுதே சாமர்தியமும், புத்திசாலித்தனமும் உங்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தால் நீங்கள் வெற்றித் திருமகனாக விளங்குவதில் வியப்பில்லை.
எண் ஒன்பது - பெண்ணுக்குரிய குணம்
உங்களுடன் சேர்ந்து வாழும் வாழ்கைதான் சொர்க்கம் என்று உங்கள் கணவர் கூறும் அளவுக்கு நீங்கள் அன்பும் காதலும் மிக்கவர்.
எண் ஒன்பது - ஆணுக்குரிய குணம்
எறும்பின் சுறுசுறுப்போடும், லட்சியத்தோடும், உறுதியோடும் செயல்பட்டு அடையவேண்டியதெல்லாம் அடைவீர்கள்.
எந்தப் பணியை ஒப்படைத்தாலும் திறம் பட நிர்வகித்து நல்ல நிர்வாகி என்ற பாராட்டைப் பெறுவீர்கள்.
அரசியலில் நுழைந்தால் மக்கள் அபிமானத் தலைவனாக்க கொடி கட்டிப் பறக்கலாம்.
நேரம் : 03:05 PM
எண் கணிதம்
அண்மைய பதிவுகள்
- சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020
November 14, 2017
- சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017 TO 2020 - ஒரு முன்னோட்டம்.
November 14, 2017
- குருப் பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2018
August 15, 2017
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் -2017 - 2018 -மகரம்,கும்பம்,மீனம்
July 25, 2017
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - துலாம்-விருச்சிகம் - தனுசு
July 09, 2017
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - கடகம்,சிம்மம்,கன்னி
July 09, 2017
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 -மேஷம் -ரிஷபம்,மிதுனம்
July 09, 2017
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018
July 09, 2017
- தனிய நாட்களும் படுபட்சி நாட்களும்
January 10, 2017
- பஞ்சபூதங்களின் ஆளுமை நேரம்!
January 10, 2017
அண்மைய செய்திகள் பெற
தற்போதைய பார்வையாளர்கள்

