முகநூல் விருப்பம்

ஆன்மிகம்

தை அமாவாசை - முன்னோர் வழிபாடு...

பதிவு நாள் February 02, 2016



 



 

 


முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு பித்ரு பூஜை செய்து வழிபட வேண்டிய நாள் தை அமாவாசை.


 
ராமேஸ்வரம்,திருப்புல்லாணி,கோடியக்கரை,பூம்புகார், திருவெண்காடு,  திருச்சி அம்மா மண்டபம்,ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை,கொடுமுடி காவிரி கரை ஆகிய இடங்கள் பித்ருபூஜை செய்ய மிக உகந்த தலங்கள்.
 
வடநாட்டில் காசி,பத்ரிநாத்,கங்கைகரையெங்கும் பித்ருபூஜை செய்ய உகந்த இடங்களாகும்.


 
பித்ருதோசம் இருப்பவர்களும்,இதுவரை சரியான முறையில் இறந்தோருக்கான சடங்குகளை செய்யாதவர்களும் இந்த தை அமாவாசையில் செய்வது மிகவும்  சிறப்பு.


 
ஜாதகத்தில் பாக்யஸ்தானம் வலு இழந்தவர்களும்,சூரியன் பாதிப்புக்குள்ளானவர்களும்,இறந்து போன எந்த உயிருக்காகவும் உங்களுக்கு உறவே இல்லாவிட்டாலும் இந்த பூஜையை செய்யலாம்...
 
உங்கள் உறவில் யாருக்கேனும்,பல காலம் அவர்களுக்கு திதி கொடுக்காமல் இருந்தால் மறக்காமல் இந்த நாளில் திதி கொடுங்கள்...


 
இதை செய்வதால் என்ன பலன்..?
 
உங்கள் வம்சத்தில் இறந்து போன முன்னோர்களை நினைத்து செய்யும் இந்த பூஜையானது,இறந்து போனவர்களுக்கு ஆத்ம சாந்தி கிடைக்க செய்கிறது.
அவர்களின் பரிபூர்ண ஆசியும்,வழிகாட்டலும், உங்களுக்கும் உங்கள் வம்சத்தாருக்கும் கிடைக்கிறது.


 
முன்னோர்களை நினைத்து வழிபாடு என்பதால் உங்கள் குல தெய்வம் கோயிலுக்கும் சென்று வரலாம்.
 
குலதெய்வம் கோயில் சென்று வர இது உன்னதமான நாள் ஆகும்.


 
பித்ருபூஜைக்கு உண்டான பொருட்களில் முக்கியமனவை;


 
நாட்டுக்காய்கறிகள்...அதாவது வாழைக்காய்,நீர்பூசணி ,பச்சரிசி மாவு,எள்,நல்லெண்ணை,மஞ்சள்,குங்குமம், சூடம் ,நெய் , வரமிளகாய்,கல் உப்பு  ,பருப்பு ,உளுந்து...


 
 இவை எதற்கு  என்றால் அந்த காலத்தில் பித்ருபூஜை செய்ததும் பிராமணர்களுக்கு தானமாக தருவார்கள்.அது இன்றும் கடைபிடிப்பதற்காகத்தான்.
 
அவரவர் வசதியை பொறுத்து பூஜை அமைத்துக் கொள்ளலாம்...
 
எள்ளும் தண்ணியும் இறைத்தால் கூட போதும் எனும் எளிய  திதியே முன்னோர்களுக்கு போதுமானது.
 
 
 
 
 
 

நேரம் : 06:48 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்