முகநூல் விருப்பம்

ஆன்மிகம்

ஏகாதசி விரதம்

பதிவு நாள் December 16, 2016

Image result for பெருமாள்
 
 
 
மார்கழி மாதம் பூலோக வைகுண்டத்தில் சொர்க்க வாசல்கள் திறக்கப்படுவதாக அயிதீகம்.


 
இதை முன்னிட்டு ஏகாதசி விரதம் இருப்பது எப்படி எனத் தெரிந்து கொள்வோம்.
வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்கள் நினைத்த காரியம் வெற்றியாகும்.
பீமன் ஒரு ஆண்டு முழுவதும் இந்த விரதத்தை செய்ய முடியாத நிலையில் ஆனி மாதம் சுக்ல பட்ச ஏகாதசியான நிர்ஜலா என்ற விரதத்தை மட்டும் நிறைவேற்றி ஒரு ஆண்டின் முழு பயனையும் பெற்றதாக பத்மபுராணம் கூறுகிறது.


 
ஸ்ரீராமபிரான் பங்குனி மாதத்தில் விஜயா என்ற பெயர் பெற்ற ஏகாதசி விரதம் இருந்து அதன்பின்பே கடல் கடந்து சென்று இலங்கையை வென்றதாக புராணம் இருக்கிறது.
 
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிடலாம்.
 
ஏகாதசி அன்று விடியற் காலையில் கண் விழித்து குளித்து விட்டு, பூஜை செய்து விரதம் இருக்க வேண்டும்.
 
இரவு முழுவதும் கண் விழித்து புராண நூல்களைப் படிக்க வேண்டும். பகவான் நாமங்களையும் சொல்வதும், கேட்பதுமாக இருக்க வேண்டும்.
 
அன்று முழுவதும் எதுவும் சாப்பிடக்கூடாது.
 
ஏகாதசிக்கு மறுதினம் துவாதசி என்பர்.
 
துவாதசி அன்று சாப்பிடுவதை பாரணை என்று கூறுவார்கள்.
துவாதசி அன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு ஆகிய சுவையற்ற உணவாகக் சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்தீக்கீரை ஆகியவற்றை சேர்த்து அந்த உணவை பல்லில் படாமல் கோவிந்தா, கோவிந்தா என்று மூன்று முறை சொல்லி விட்டு, விரதத்தை முடிக்க வேண்டும்.


 
உணவு சாப்பிடும் முன் அதை பெரியவர்களுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும்.
8 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 80 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள் விரதம் இருக்கத்தேவையில்லை என்று சாஸ்திர நூல்களே கூறுகின்றன.
இந்த ஆண்டு 2015 ம் ஆண்டு துவக்கத்திலேயே புத்தாண்டு தினத்தில் 1 ம் தேதியே வைகுண்ட ஏகாதசி வருகிறது.
 
 ஏகாதசி அன்று துளசி பறிக்கக் கூடாது.
அதை முன்தினமே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஏகாதசி அன்று தாய், தந்தையாருக்கு நினைவு தினம் வந்தால், அன்று சிரார்த்தம் (திதி) செய்யக்கூடாது. மறுநாள் நடத்த வேண்டும்.
ஏகாதசி அன்று சாப்பிடாமல் இருப்பவர்களை கேலி, கிண்டல் செய்யக் கூடாது. கிண்டல் செய்து வற்புறுத்தி சாப்பிட வைப்பவர்கள், நரகத்திலும் கீழான நரகத்திற்குச் செல்லுவார்கள் என்றும் புராண நூல்கள் கூறுகின்றது.
 
 
 
 
 
 
 
 
 

நேரம் : 06:27 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்